நேற்று இரவு தூங்கும் முன் கேட்பதற்கு இசை களஞ்சியத்தில் கையை ஆழமாக விட்டு துழாவி சுற்றிலும் மற்ற பல காஸெட்டுகள் சரிந்துவிழ ஒன்றை எடுத்து பார்த்தால், அனந்தலக்ஷ்மி சடகோபன் எல்பி ரெக்கார்டிங்கில் பாடிய ஒரு கலெக்ஷன் மாட்டியது. அன்னமே என்று ஆரபி வர்ணத்தில் தொடங்கி தமிழில் நிறைய பாடியிருந்தார். அறுபதுகளிலும் அதற்கு முன்னரும் பிரபலமாய் இருந்த ராகமாலிகா பல்லவி ஒன்றை இதில் பாடியிருந்தார். சங்கராபரணனை அழைத்தோடி வாடி கல்யாணி, தர்பாருக்கு எந்த நான்கு ராகங்களில் என்பது புரிந்திருக்கும்.
Permanent link to this article: http://www.ommachi.net/archives/36
அனுலோமமும் அகதெமியில் கிருஷ்ணா கச்சேரியும்
மியூசிக் சீசன் 2007க்கு ஒரு கச்சேரியை பற்றியும் எழுதவில்லையே என்று ஒருவரும் குறைபடவில்லை. படும் முன் எழுதிவிடுகிறேன் மியூசிக் அகாதமியில் நேற்று நடந்த கிருஷ்ணா கச்சேரியை பற்றி. இந்த உருப்படி ராகம் தானம் பல்லவி (RTP) என்று (மட்டும்) புரியும் அளவிற்கு கச்சேரி கேட்பவர்களாக இருந்தால், உங்களுக்கு இந்த கட்டுரை ஒருக்கால் உபயோகமாகலாம். கர்நாடக இசை பற்றி சற்று ஆழமாக தெரிந்திருந்தால் உங்களுக்கு எதை பற்றி எழுதப்போகிறேன் என்று தலைப்பிலேயே புரிந்திருக்கும். வலையில் இவ்வளவு தூரம் மெனக்கெட்டு …
Permanent link to this article: http://www.ommachi.net/archives/35
சௌம்யா கச்சேரியும் நீலமணி ஆலாபனையும்
பஸ் பிடித்து பாரதீய வித்தியா பவனத்தை அடைகையில் உட்கார இடம் கிடைக்காதோ என்று மனதினுள் பதற்றம். அரங்கினுள் மெயின் கதவு வழியாக நுழையாமல் வலதுபுறம் திரும்பி ஸ்டேஜின் பக்கவாயில் வழியாக ஃபீட்பேக் ஸ்பீக்கர் இருக்கும் பகுதியில் கீழே உட்காரலாம் என்று நுழைந்தால் ஆச்சரியம். வழக்கமாக சௌம்யா கச்சேரிக்கு பவனத்தில் இருக்கும் கூட்டம் இன்று இல்லை.திரும்பி மெயின் கதவு வழியாக அரங்கினுள் நுழைந்து இடம் பார்த்து முன்வரிசையில் அமர்கையில் வீணை குப்பையரின் ராகமாலிகை வர்ணமான வலஜி வச்சியை ஆரம்பித்து …
Permanent link to this article: http://www.ommachi.net/archives/27
மணக்கவைத்த மணக்கால்
கர்நாடிகாவும் ஸ்ருதி பத்திரிகையும் சேர்ந்து நடத்தும் “சமர்ப்பணம்” இசை விழா எல்டாம்ஸ் ரோடில் உள்ள தத்வலோகா அரங்கில் (கல்யாண மண்டபம்?) பெருத்த ஆரவாரம் ஏதுமின்றி மிகுந்த ஏஸி குளிரில் இன்று துவங்கியது. சமர்ப்பணம் இசை விழாவின் சிறப்பு இன்றைய முப்பது நாளில் முப்பத்தேழுகச்சேரி அவசர கதி இசை சீசனால் ஒதுக்கப்பட்டுவிட்ட ஆனால் அதனால் தங்கள் கலையில் சற்றும் ஒடுக்கமில்லாத ஒரு சில சங்கீத மேதைகளின் இசையை மீண்டும் ரசிகர்களின் மத்தியில் முழங்கவிட்டிருப்பது. என்னைப்போன்ற அரை நிஜாரில் காரில் உலவி செருப்புடன் ஏஸி ஆடிட்டோரியம் …
Permanent link to this article: http://www.ommachi.net/archives/26
வாழ்க கலைஞர்கள் ஒழிக ரசிகர்கள் நிற்க கலை
கர்நாடக இசை ஸாகரத்தை அழகிய சிறு சாக்கடையாக்கும் பெருமுயற்சியில் மற்றுமொரு சீரிய சிறு முயற்சி நடந்தேரியபின் வழக்கம்போல் நான் எழுதும் ஒரு வயிற்றுப்போக்கான எழுத்து.
Permanent link to this article: http://www.ommachi.net/archives/25
பெயர் படுத்தும் பாடு
தெய்வங்களுக்கு கோவிலில் ஆரத்தி எடுக்கையில் அப்பெயர் வரக் காரணம் கூறி அர்ச்சகர்கள் சிலாகிப்பார்கள். நாம் உச் கொட்டிக்கொண்டு மேலும் இரண்டு முறை கண்ணத்தில் போட்டுக்கொண்டு வருவோம். அவ்வகையில் என் பெயர் காரணம் பற்றி பலர் எனக்கு பற்றிக்கொள்ளும் அளவிற்கு யூகித்து சிலாகித்து படுத்தி இருக்கிறார்கள். இனிமேலும் படுத்துவார்கள். பார்த்ததும் பல காரணங்களுக்காக, கண்ணத்தில் எல்லாம் போட்டுக்கொள்ளாமல், அர்ச்சனை மட்டும் செய்வதால், நானே ஒரு சுய பெயர் விளக்கம் கொடுத்துவிடலாம் என்று இதை எழுதுகிறேன்.
Permanent link to this article: http://www.ommachi.net/archives/24
ஸீஸன் கச்சேரியும் தொய்வை அளவையும்
தற்கால சங்கீத கச்சேரிகள் பெரும்பாலானவற்றில், குறிப்பாக ஸீஸன் சமயத்தில் சென்னையிலும் சென்னையைச் சார்ந்த பகுதிகளிலும் நடப்பவைகளில், சில பொது அம்சங்களைக் காணலாம்.உதாரணத்திற்கு, இக்கச்சேரிகள் 1 வர்ணம், 1 சப் மெயின், 1 மெயின் உருப்படி், 1 சொதப்பல் முயற்சி, 1 அபார முயற்சி, 3 துக்கடா, 2 பஜன், 1 மங்களம் ஆகிய பத்துப்பாட்டு் அடங்கிய, எல்லா வகை ரசிகர்களையும் திருப்தி செய்யும், நகர வாழ்கையின் அவசர கதி சிலுவையில் அறையப்பட்டுள்ள, இரண்டரை மணி நேர, தலை …
Permanent link to this article: http://www.ommachi.net/archives/23
முத்துக்குமார் கச்சேரி
இன்று கச்சேரி பல காரணங்களுக்காக வித்தியாசமானது. எப்பொழுதும் சைக்கிளுக்கே டிரைவர் வைத்துக்கொள்ளூம் நான், இன்று காரை கச்சேரி கேட்பதற்காக r. k. mutt சாலையிலுள்ள p. s. ஹைஸ்கூலுக்கு ஓட்டிச் சென்றேன். வழியில் ttk ரோட்டில் திருப்பத்தில் ஒரு வேன் டிரைவரும், p. s. ஸ்கூலில் டிராயர் போட்டுக்கொண்டு திடலில் ஓடிக்கொண்டிருந்த ஒரு சில மாமாக்களும் நான் திருப்பிய வேகத்தில் கலவரப்பட்டார்கள். மற்றபடி காரும் கூட வந்த நண்பரும், லோகத்தில் ஏனையோரும் நான் ஓட்டிச் சென்றதினால் நலமே.
Permanent link to this article: http://www.ommachi.net/archives/22
ஸமாஜத்தில் சங்கீதம்
நேற்று ஸமாஜத்தில் கர்னாடக இசைக் கச்சேரி கேட்க விதிக்கப்பெற்றேன். ஸமாஜம் என்றால், தியாகராஜ ஸங்கீத வித்வத் ஸமாஜம். மைலாபூரில் உள்ளது. இதை சென்றடைவதே ஒரு கலாச்சாரங்களின் தாக்கத்தில் அமையும் பயணம். என் வீட்டில் இருந்து ஐ.டி. நிறுவனங்களின் உறைவிடமான டைடெல் பார்க்கின் சமீபத்தால் எந்நேரமும் நெரிசலாக இருக்கும் சர்தார் பட்டேல் ரோடில் பயணித்து, சென்ற நூற்றாண்டின் சிறந்த சீர்திருத்தவாதிகளில் ஒருவரான ஸ்ரீராமக்கிருஷ்ண பரமஹம்ஸரினால் ஸ்தாபிக்கப்பட்ட மடத்திற்கு அழைத்துச்செல்வதால் பெயர்பெற்ற, ஆர். கே. மட் ரோடில் திரும்பி, முகலாயர்களின் …
Permanent link to this article: http://www.ommachi.net/archives/20
வாத்தியார்
என தொழில் வெப்பமும் வெப்பம் சார்ந்த விஷயங்ளை பற்றியும் சிந்தித்து, ஆராய்ந்து, தெளிந்து (சில வேளை தெளியாமலே) மற்றவருக்கு அதை புரியவைக்க முனையும் பகுதி நேர விஞ்ஞானி, பகுதி நேர வாத்தியார் வேலை. வேலை செய்யும் நிறுவனத்தின் ஆராய்ச்சிக்கூடத்திற்கு மிக அருகிலேயே வீடு வைத்து, லாபிலேயே இருப்பதால் அவ்வீட்டிற்கு சொற்பநேரமே விஜயம் செய்து, போதாகுறைக்கு அதில் நிறய புத்தகங்களை வைத்து, ஞானாணந்தமயம்தேவம் சொல்லி ஸரஸ்வதி பூஜை தினத்திலும் அவற்றில் சிலதை பிடிவாதமாக படித்து, அலமாரி நிறய பத்தாவதிலிருந்து …
Permanent link to this article: http://www.ommachi.net/archives/19






