ஏலியன்ஸ் இருக்கிறார்களா: டிரேக் சமன்பாடு என்ன சொல்கிறது

நாச்சியார்கோவில், திருச்சேரை பக்கம் வெள்ளிங்கிரி, ரமேஷ்குமார் என்றெல்லாம் பெயர்களோடு பஸ்போகும் ரோட்டோர டீக்கடையில் பார்த்திபனும் வடிவேலுவும், வேண்டாம், யாரோ இருவர் பேசிக்கொண்டிருக்கிறார்கள். ஓசி பேப்பரில் தலையை நுழைத்து சற்று ஒட்டுகேட்போம். ஏம்பா ஊர்ல என்ன நடப்பு, பேப்பர்ல நியூஸ் வந்திருக்காம்ல, ஆக்கிங் சொன்னார்னுட்டு. டேய் இருடா, அது ஹாக்கிங்டா. உன் ஊர் நடப்ப  ஹாக்கிங் யோசிக்கராரா. (வந்துட்டாய்யா, வந்துட்டாய்யா…) ஏம்பா, எங்கிட்டோ உள்ளார ஏலியன்ஸ் பத்தியெல்லாம் கருத்து சொல்லுறாரு, ஒரே உலகத்துல பக்கத்து நாட்டுல இருக்கற என்னயபத்தி …

Continue reading »

Permanent link to this article: http://www.ommachi.net/archives/820

நேனோ ஓவியம் அறிவியலை வளர்க்காது

தாஜ்மஹால் பார்த்திருக்கிறோம். அரிசியில் தாஜ்மஹால் பார்த்திருக்கிறோம். கலைஅரிசி என்று மைக்கேல்மதனகாமராஜனில் கிரேசிமோஹனால் சிலாகிக்கப்பட்ட ஓவியக்கலை. பார்க்க பூதக்கண்ணாடி வேண்டும். அந்த ஓவியங்களையும்விட சிறிதான, நேனோ ஓவியங்கள் பார்த்திருக்கிறீர்களா. ஒரு சாம்பிள் பாருங்கள்.

Permanent link to this article: http://www.ommachi.net/archives/1838

நாய்குட்டியின் பெயர்

இரண்டு மனித, ஒரு நாய், ஒரு கரடி பொம்மைகளுக்கு மகள் பெயர்சூட்டும் விழா நடத்திக்கொண்டிருந்தாள். ஆங்கிலப்பெயர்களாக சூஸிக்கொண்டிருந்தவளிடம், ஏன் தமிழ்நாட்டில் தானே வாங்கினாய், தமிழ் பெயர்களே வை என்றேன். சில தர்க்கங்களுக்குப் பிறகு  (என் மகளல்லவா) தன் தோல்வியை ஒப்புக்கொண்டாள். இரண்டு மனித பொம்மைகளுக்கு குனவதி, குமுதினி என்று சூட்டினாள். கரடிக்கு வெண்பனி. ஆங்கில ஸ்நோ-வைட் டாம், தமிழ் நாட்டில் வெள்ளை கரடி கிடையாதாம். நாய்க்கு சற்று யோசித்து, அப்பா உனக்கு பிடிச்ச பெயர் என்று வைத்தது …

Continue reading »

Permanent link to this article: http://www.ommachi.net/archives/1831

ஏலியன்ஸ் இருக்கிறார்களா: ஹாக்கிங் என்ன கூறுகிறார்?

ஏலியன்ஸ் என்றால் நீ என்ன நினைக்கிறாய் என்று என் ஆறு வயது மகளிடம் கேட்டேன்: ஓ தெரியுமே; (பிறகு எல்லாம் ஆங்கிலத்தில்…) பிளானெட்டில் வசிப்பவர்கள். அப்டினா நாமா என்றவுடன், யோசித்து திருத்தி, இல்லை, மார்ஸிலோ ப்ளூட்டோவிற்கோ வந்துபோவார்கள். ஸ்பேசில் வசிப்பார்கள் அப்பா. ஸ்பேஷ் ஷிப் வைத்திருப்பார்கள்; பீச் (peach), வெளுப்பு என்று நம்மைப்போல் கலரில் இருக்கமாட்டார்கள், நீலம், பச்சை என்று கலரில், ஓவல் மூஞ்சியுடன், குச்சிகால்களுடன், காற்றே இல்லாமல் உயிர் வாழ்வார்கள்… எனக்குப் பரிச்சயமான உலகைவிட்டு, அதேசமயம் மொத்தமாக விடாமல் (விவரணையை …

Continue reading »

Permanent link to this article: http://www.ommachi.net/archives/806

ஷட்விதமார்கினி ராகத்தில் ஞானமொஸகராதா

2009 டிசெம்பர் மியூசிக் சீசனில் கச்சேரி விமர்சனங்களை உடனுக்குடன் எழுதுவது என்று கங்கனம் கட்டிக்கொண்டு ஆங்கிலத்திலும் தமிழிலும் எழுதியதில் (இடையில் அறிவியல் மற்றும் கொளை கதை வேறு) ஓய்வு நேரம் மொத்தமும் செலவாகி, எழுதுவதற்கே பல மாதங்கள் மனத்தடை வந்துவிட்டது. இதில் நஷ்டம் உங்களுக்கு இங்கு குறிப்பிட்டிருக்க வேண்டிய நான் கேட்ட பல நல்ல கச்சேரிகளின் விமர்சனமும் அவைகளில் வந்த சில இசை நல்முத்துகளும். அப்படிப்பட்ட இசைமுத்துக்களில் ஒன்று நாதஇன்பத்தில் டிசெம்பர் 2009இல் வேதவல்லி கச்சேரியில் வந்தது. …

Continue reading »

Permanent link to this article: http://www.ommachi.net/archives/1819

டர்புலன்ஸ் ஒரு அறிமுகம் – பாகம் 6

அமளி எப்போது, எப்படித் தோன்றும்? குழாயினுள் நீரோடுகையில் இந்த கேள்விகளுக்கு விடைகளை புரிந்துகொள்ளுவோம். அதற்கு தேவையான அமளியின் சரித்திரத்தில் பிரசித்திபெற்ற ஒரு பரிசோதனையையும் இங்கு விளக்குவோம். ஹேகன் (Hagen) மற்றும் பாஸ்யூஹ் (Poiseuille) 1839, 1840 வருடங்களில் குழாய்களில், லாமினர் ஃப்ளோ, சீரோட்டத்தை சோதனைகூடத்தில் செய்து காட்டினர் என்று முன்னர் பார்த்தோம். இது எந்த மாதிரி தருணங்களில் உருண்டையான குறுக்குவெட்டுடைய குழாய்களில் நிகழும் என்றும் இவர்கள் வகுத்தனர். குழாய் நீரோட்டம் இவ்வகை சீரோட்டத்திலிருந்து எப்படி அமளி ஓட்டமாகும் …

Continue reading »

Permanent link to this article: http://www.ommachi.net/archives/800

டர்புலன்ஸ் ஒரு அறிமுகம் – பாகம் 5

அமளி இயற்கையின் ஆர்ட் பிலிம். அழகிய புதிர். படைத்தவனுக்கும் புரியாதது. சென்ற நூற்றாண்டின் புகழ்பெற்ற விஞ்ஞானிகளான வெர்னர் ஹைசென்பெர்கும் (Werner Heisenberg), ஸர் ஹொரேஸ் லாம்பும் (Sir Horace Lamb) கடவுளிடம் தாங்கள் விடை கேட்கவிரும்பும் கேள்விகளில் திரவங்களின் அமளியை புரிந்துகொள்ள முடியுமா என்பதும் ஒன்று என்று கூறி, அதற்கு விடை ஒருக்கால் கடவுளுக்கு (படைத்தவனுக்கு) தெரிந்திருக்கலாம் என்று கையைவிரித்துள்ளனர். அமளி ஒருவருக்கு மட்டும் மொத்தமாக என்றும் புரியாது. கூட்டாக அறிவியலாலர்களின் புரிதல் முயற்சி பல நூறுவருடங்களுக்கு …

Continue reading »

Permanent link to this article: http://www.ommachi.net/archives/796

டர்புலன்ஸ் ஒரு அறிமுகம் – பாகம் 4

திரவ ஓட்டத்தில் அமளிக்கு காரணம் விஸ்காசிட்டி, அதாவது பாகுநிலையின் வீரியத்தில் உள்ளது என்றும், அமளி ஓட்டம் என்பது பல சைஸ் சுழல்களால் ஆனது என்றும் மூன்றாவது பாகத்தில் பார்த்தோம். பல சைஸ்களில் ஓடும் சுழல்களின் ஊடே திரவ ஓட்டத்தின் இயக்க ஆற்றல் பெரியசுழலில் இருந்து சிறியவைகளுக்கு தொடர்ந்து மாற்றலாகி, இறுதியில் மாலிக்கியூலர் லெவலில் அளக்கமுடியாத வெப்பமாக மாறி விரயமாகிவிடுகிறது. அமளியாக ஓட்டம் இருப்பதற்கு அதனால் நாம் தொடர்ந்து ஆற்றலை ஊட்டிக்கொண்டே இருக்கவேண்டும், குழாயாக இருந்தால், மோட்டார் பம்பின் …

Continue reading »

Permanent link to this article: http://www.ommachi.net/archives/787

காப்பாற்றப்படவேண்டிய தமிழ்நாட்டின் சுவரோவிய பொக்கிஷங்கள்

சித்திரக்கலையில் மியூரல்ஸ் என்றால் சுவரோவியங்கள் அல்லது சுவர் சித்திரங்கள். இந்தியாவில் கோயில்களிலும் குகைகளிலும் வரையப்பட்டுள்ள பழங்கால சுவரோவியங்களின் எண்ணிக்கையில் தமிழ்நாடு, ராஜஸ்தானை அடுத்து, இரண்டாவது இடத்தை வகிக்கிறது. ஆசியாவில் இலங்கைக்கு அடுத்து புத்த, ஜைன, சைவ மதங்களின் சரித்திரமுக்கியம் வாய்ந்த பல ஓவியங்களை கொண்டுள்ளது. பல்லவர்கள், விஜயநகர ராயர்கள், தொடர்ந்து நாயக்கர்கள், பாண்டியர்கள், சோழர்கள், சேரர்கள் என்று கிட்டத்தட்ட ஏழாம் நூற்றாண்டில் இருந்து பதிநேழாம் நூற்றாண்டு வரை, ஆயிரம் வருடத்திற்கும் மேலாக 140 தமிழ்நாட்டுக் கோவில்களுக்கு மேல், …

Continue reading »

Permanent link to this article: http://www.ommachi.net/archives/1782

டர்புலன்ஸ் ஒரு அறிமுகம் – பாகம் 3

திரவங்கள், பாய்மங்களின் டர்புலன்ஸ் என்றால் இக்கட்டுரைத்தொடரில் அமளி என்று வைத்துள்ளோம். சில உதாரணங்களை ஏற்கனவே பார்த்தோம். லாமினர் அல்லது தகடொத்த ஓட்டம் எனும் திரவங்களின் சீரோட்டத்தில் இருந்து அமளி ஓட்டம் எவ்வகையில் மாறுபடுகிறது என்றும் பார்த்தோம்.தொடர்ச்சியாக, ஏன் அமளி ஓட்டத்தில் வேகம் எங்கு அளந்தாலும் ஒரு நிலையிலில்லாமல், ஏறியிறங்கிக்கொண்டே இருக்கும் என்று யோசிப்போம். அதற்கு முன் அமளியின் மற்றொரு தினவாழ்க்கை உதாரணம். ஹேர் டிரையர்.

Permanent link to this article: http://www.ommachi.net/archives/775

டுவிட்டர் குறள்கள்

திருக்குறளுக்குத்தான் எத்தனை பிரேமை தமிழ்கூறும் இணையுலகில். பத்தாவது பப்ளிக் எக்ஸாமில் அதிக மார்க் வாங்கவேண்டுமென்று பிற மொழிக்காக ஒன்றாவதிலிருந்தே தமிழை ஒதுக்காமல் பள்ளியில் ஒருபாடமாக படிக்கும் அநேகருக்கு முதல் மனப்பாடப்பகுதி குறள்தான். தமிழ் மத்தியமர் பலரின் முதல் இலக்கிய பகடியும் அங்குதான் தொடங்குகிறது. அகர முதல எழுத்தெல்லாம் தகர ஸ்லேட்டில் எழுத வேண்டும் என்பதில் தொடங்கி, பெரியவர் ஆகி அலுவலகத்தில் டை கட்டி வாழ்வாரே வாழ்வார் மற்றவர் கைகட்டி பின் செல்வர் என்று நொந்துகொள்வது வரை குறள்தான் …

Continue reading »

Permanent link to this article: http://www.ommachi.net/archives/1776

கொளை கதை – பின்னுரை

கொளை கதையை தொடர்ந்து படித்த அனைவருக்கும் நன்றி. நேரில் இதுவரை பார்க்காமலே, டுவிட்டரில் கதையை எழுதத்தூண்டிய @narain இணையத்தில் படித்து அவ்வப்போது உற்சாகம் கொடுத்த @orupakkam @scanman @isr_selva @icarusprakash மற்றும் பலருக்கு நன்றி. சுயதம்பட்டம் என்று நினைக்காவிடில் ஒரு பின்னுரை. இது அப்ஸர்ட் ஜானரில் (absurd genre),  மல்டி லேயர், எனும் பல்படிமக் கதை. துப்பறியும் மனித கொலைகள், தமிழ் கொளைகல், எழுத்து க்ளீஷே-கொலைகள், (அறிவியல்) மொழியாக்க கொலகள், திரைப்பட கொலைகள், இப்படி பல படிமங்கள். …

Continue reading »

Permanent link to this article: http://www.ommachi.net/archives/1773

டர்புலன்ஸ் ஒரு அறிமுகம் – பாகம் 2

டர்புலன்ஸ் என்றால் அமளி என்று, பெயர்க்காரணத்தை சென்ற பாகத்தில் கூறி, இவ்வறிமுக கட்டுரையில் வைத்துள்ளோம். அமளியின் உதாரணங்கள் சென்ற பாகத்தில் பார்த்தோம். டர்புலண்ட் ஃப்ளோ என்றால் திரவங்களின் அமளி ஓட்டம். மாறாக சீரோட்டம் அல்லது தகடொத்த திரவங்களின் ஓட்டமும் நிகழும். மேலே படத்தில் லியனார்டோ டா வின்சி கவனித்து வரைந்துள்ளது தினவாழ்வில் நாம் குழாயிலோ, கால்வாயிலோ பார்க்கும் தண்ணீரோட்டம்தான். அமளி ஓட்டம்.

Permanent link to this article: http://www.ommachi.net/archives/772

ஒரு கொளை கதை – பாகம் 12

கண்விழித்தபோது எட்டாம் நம்பர் வார்டே பெண்டத்தால், புஷ்பம் கலந்த  நாற்றமாய் இருந்தது. நாற்றம் என்றால் நறுமணம். கற்பூரம் நாறுமோ கமலப்பூ நாறுமோ நாச்சியார் திருமொழி வகை நாற்றம். டேப்பில் அபிராமி அந்தாதி. என்னடா குணமாக்குறதுக்கு பதில், குணாவாக்கிட்டான்களா… ஹலோ, மார்னிங்… அருகில் ரோஜா நாற்றத்தில் டாக்டர் சாகடிக்காத கோஷ். வாழ்வளிக்கும் கோஷ். இளமை ஜோஷ். தேவையான வாளிப்புகளை வெள்ளை ஏப்ரனில் மறைத்து, கழுத்தில் தங்க ஸ்டெத் தொங்க (கணவர் பம்மல் சம்பந்தம் கொடுத்ததாம்), இளமையாய் சிரித்து, முதுமையாய் …

Continue reading »

Permanent link to this article: http://www.ommachi.net/archives/1684

டர்புலன்ஸ் ஒரு அறிமுகம் – பாகம் 1

டர்புலன்ஸ் என்ற ஆங்கில வார்த்தையை உச்சரித்ததும் மனக்கண்முன் பல குழப்பங்கள் படமாகத் வந்துபோகலாம் – நுரைபொங்கும் காவிரி, அலைமோதும் கடல், சுழன்றடிக்கும் புயல், நிசப்த நட்சத்திர வெடிப்பு, கலர் நொடிக் கனவுகள், வளையல் குலுங்கும் கலிடாஸ்கோப், பனகல் பார்க் டிராஃபிக், தட்டாமாலை இப்படி. டர்புலன்ஸ் என்ற ஆங்கில வார்த்தைக்கு குழப்பம் என்று பொருள்கொள்ளலாம்தானே. ஆனால் அறிவியலில், குறிப்பாக இயற்பியலின் ஒரு பகுதியாக நாம் வகுத்திருக்கும் திரவ-இயற்பியலில், டர்புலன்ஸ் என்றால் வேறு. சற்று ஆர்கனைஸ்டு குழப்பம். இந்த விஷயத்தை …

Continue reading »

Permanent link to this article: http://www.ommachi.net/archives/756

ஒரு கொளை கதை – பாகம் 11

சலூன் டி பாரீஸ். ஐந்து நட்சத்திர ராட்சஸகேளிக்கையின் வயிற்றில் முன்பசிக்காக கட்டிய லவுன்ஜில் அஜீரணமாய் இருக்கும் முடிதிருத்தகம். இங்கு அமர்ந்த திருக்கோலத்தில் பேச்சுலர் பலர். வீட்டில் பேச்சு இல்லாதவர். இதன் சலூனிஸ்ட் லோக்கல் பார்ட்டி. கத்திரியும் கையுமாக, முறுக்கான பாடி. முகத்தில் தாடி. நெற்றியில் பட்டை. கழுத்தில் ருத்திராக்‌ஷ கொட்டை. சலூனிஸ்ட் பேண்ட் போடுவான். ஜிப் போடுவான். சட்டை நடு இரண்டு பட்டன் மட்டும் போடுவான். மிச்ச சட்டையை கீழே முடிச்சுபோட்டிருப்பான். மேலே மார்ப்பின் உள்ளும் புறமும் …

Continue reading »

Permanent link to this article: http://www.ommachi.net/archives/1682

ஒரு கொளை கதை – பாகம் 10

வாங்ஸ் கிச்சன். வேண்டாத இடங்களில் பளீரென்று வெளிச்சங்கள். வேண்டிய இடங்களில் சுவற்றில் அழுக்கை மறைக்க. ஆங்கிலம் பேசும் சர்வரிடம் லொடபடவா ஒரு ப்ளேட் ஆனியன் ரிங்ஸ், ரெண்டு கப் காப்பி என்றான். நடந்த காரணம்புரியாத கொளைகலின் துப்பேதும் துலங்காமல் எனக்கு இருந்த வெறி லொடபடவாமேல் திரும்பியது. ஏண்டா, தமிழ் தமிழ்னு சொலினுகுர. ரெண்டு கப் காப்பிங்கற. ரெண்டு கப் காப்பிகள் அப்டினு சரியா சொல்லு. வாரினேன் அவனை. லொடபடவா கெட்டிக்காரன். அப்படியே பார்த்தாலும் ரெண்டு கப்கள் காப்பி …

Continue reading »

Permanent link to this article: http://www.ommachi.net/archives/1680

மெட்ராஸ் மியூசிக் சீசன் 2009: நேதனூரி கிருஷ்ணமூர்த்தி கச்சேரி

நேதனூரி கிருஷ்ணமூர்த்திக்கு பின்பாட்டு அவர் சிஷ்யர்கள் மல்லாடி சகோதரர்கள், வயலினில் ஸ்ரீராம் பரசுராம், மிருதங்கம் திருச்சி சங்கரன், கஞ்சீராவில் பி.எஸ்.புருஷோத்தமன். இரண்டு என்றும் ஒளிரும் நட்சத்திரங்கள், இரண்டு ரைசிங் ஸ்டார்ஸ். அருமையான செட். கச்சேரி சிறப்படைய முதல் தேவை பூர்த்தி. மேல் ஸ்தாயிகளில் சற்று தடுமாறினாலும் கிருஷ்ணமூர்த்தியின் குரல் அவர் சொன்னதை கேட்டது. அவர் இசையை நம்மை கேட்கவைத்தது. வனஜாக்‌ஷி என்று கல்யாணி வர்ணம் தொடக்கத்தில் இருந்து ’சுந்தரத்தெலுங்கு’ கச்சேரி அமர்க்களம். வர்ணத்திற்கு முன் குறைவாக நிறைவாக …

Continue reading »

Permanent link to this article: http://www.ommachi.net/archives/1737

ஒரு கொளை கதை – பாகம் 9

ராச்சாண்டார் திருமலை இருட்டான பப்ளிக் நூலகம். இங்கு படித்து சிலர் மேதாவியாகி உள்ளனர். எம்பி பிஎஸ், எம்பி ஏ என்று தாவி தாவி ஆன மே(ல்)தாவி. பலர் இன்னமும் மேலும் கீழும் தாவிக்கொண்டிருக்கின்றனர். வேறு யாருக்கும் தெரியாமல். ஓரத்தில் மண்குவித்து, புதைக்கப்பட்டிருக்கும் மண்பானை. உள்ளே கலங்கலாக ஜில்லென்று ஜலம். பக்கத்தில் சங்கிலியில் கைதாகி ஜன்னல் கம்பியில் தொங்கும் அலுமினிய டம்ளர். வருகை பதிவு ஏடு. அருகில் புழுக்கூண்டு ஒரு பென்சில். யாரும் திருடிக்கொண்டு சென்றுவிடாமல் இருக்க நூலில் …

Continue reading »

Permanent link to this article: http://www.ommachi.net/archives/1678

மெட்ராஸ் மியூசிக் சீசன் 2009: பரசாலா பொன்னம்மாள் கச்சேரி

Parassala-Ponnammal

இங்கு மாஸ் கன்சர்வேஷன் விதி வேலைசெய்யாதோ, இது மியூசிக் அகடமியில் நுழைகையில் அடிக்கடி வரும் சந்தேகம். வெளியே நிற்கும் கார்களைக்காட்டிலும் உள்ளே மக்கள் குறைவு. வித்வான் முக்கியமான மதுரங்களை நாம் சபையில் இல்லாதிருக்கையில் பாடிவிடுவாரோ என்று பதபதைத்து கான்டீனில் இட்லி-வடையை வேகமாக விழுங்குகையில் பொன்னம்மாள் கச்சேரியை தொடங்கிவிட்டார். ஹரிகேசநல்லூர் முத்தையா பாகவதரின் நேரடி சிஷ்யையான பொன்னம்மாளின் சங்கீதம் நாம் இழந்துவிட்ட ஒரு உல்லாசமான, மெதுவான நாட்களடங்கிய கடந்தகாலத்தை நினைவூட்டும். வித்தியாசம், புதுமை என்று தியாகராஜருக்கு பேஸ்பால் தொப்பி …

Continue reading »

Permanent link to this article: http://www.ommachi.net/archives/1731

Page 5 of 9« First...34567...Last »