ஏலியபுராணத்தின் முடிவில் செவ்வாய் கிரகம் செல்வதாக இருந்தேன். ஆனாலும் இது ஞானமரபை தன்னுள் அமானுடமாக இருத்திப் பொலிவுறும் எழுத்துக்களை மட்டும் வாழும்நேரமனைத்திலும் செம்மையான வாசிப்பதனால் நாபியிலிருந்து கிளர்ந்தெழும் வாசிப்புலன்கள் மட்டுமே உணர்ந்துகொள்ளமுடிந்த நெகிழ்சியூட்டும் மனிதம் வெளிப்படும் கட்டுரைத்தொடர் இல்லையே. வெறும் அறிவுத்துறை அறிவியல்தானே. எதைவேண்டுமானாலும் இக்கட்டுரைகளில் எங்கு வேண்டுமானாலும் விளக்கலாம், விலக்கலாம், இல்லையா. அதனால், செவ்வாயினுள் செல்வதற்கு முன் ஒரு ரேடியோ கார்பன் டேட்டிங் போய்வருவோம். இந்த இடைப்பயணத்தை விரும்பாதவர்கள், அடுத்த கட்டுரைக்கு காத்திருங்கள். உங்கள் ஏலியன்ஸ், …
Permanent link to this article: http://www.ommachi.net/archives/2062
Permanent link to this article: http://www.ommachi.net/archives/2058
ஹோம்மேட் இசை வீடியோக்கள் விளக்கங்கள்
ராகம் தானம் பல்லவியை பற்றி ஒரு விமர்சன கட்டுரை எழுதுவதாக தொடங்கி, இழுத்து இழுத்து பல பாகங்களாக சொல்வனம் இணைய இதழில் என் கர்நாடக இசை (பற்றிய) கட்டுரைகள், ஏதோ ஒரு திசையில் போய்கொண்டிருக்கிறது. கட்டுரையின் நான்காவது பாகத்திற்காக, ஆர்வக்கோளாரில் சில விளக்க வீடியோக்கள் வீட்டில் இருப்பவர்களை இரவு தூங்கவிடாமல் படுத்தி, எடுத்துப்பார்த்தேன். சுற்றியுள்ள விளக்கங்களை சுருக்கமாக கொடுத்து, இங்கு அவ்வீடியோக்களை தருகிறேன். விரிவாக, சொல்வனம் இணைய-இதழில் வெளியாகியிருக்கும் என் ராகம் தானம் பல்லவி – பாகம் …
Permanent link to this article: http://www.ommachi.net/archives/2056
ஞாபகம் வருதே 2.0
சமீபத்தில் ஞாபகம் வருதே ஞாபகம் வருதே என்று பாட்டு போட்டு அலுமினி(ய) பாத்திரங்களை அழைத்து நான் என்றோ (ஓரளவு) படித்த பொறியியல் கல்லூரி தன் பவள விழாவை ஒரு வாரம் கொண்டாடியது. அநேகமாக வயதுவந்தவர், பெண்கள் என்று அனைவருக்கும் ஈமெயிலித்து, அதில் பலர் வருவதாய் பதில் மின்னஞ்சல் சத்தியம் செய்து, சாண்டா கிளாராவில் சரியான கணக்டிங் ஃப்ளைட் கிடைக்காததால் மெயிலிடப்படாத சிலர் மட்டும் ஓசி கார் மொஃபஸல் பஸ் ஏறிவந்திருந்தோம்.
Permanent link to this article: http://www.ommachi.net/archives/2053
ஏலியபுராணம்
கிறித்துவர்கள், யூதர்கள், முஸ்லீம்கள் என்று அனைவரும் குறிப்பிடும் எழக்கியல் துறவியின் மனதில் பழைய ஏற்பாட்டின் சில பகுதிகள் இன்னமும் தோன்றியிருக்கவில்லை. யூஃப்ரடெஸ் மற்றும் டைக்ரிஸ் நதிகள் வளப்புறச்செய்த பாபிலோனிய பிரதேசமான கால்டியா தேசம் (இன்றைய தென் இராக், குவைத் பகுதி). கி.மு. ஆறாம் நூற்றாண்டு உலகம். இலக்கியத்திலிருந்து வேறுபட்டு, ஆள், தேசம் காலம் என்ற தலைகீழ் தொடக்கத்தை தொடருமுன், கி.மு. என்றால் கிறிஸ்து பிறப்பதற்கு முன். இது கரீட்டா எப்போத்திலிருந்து என்பதில் சில குளறுபடிகள் இருக்கிறது. என்றோ …
Permanent link to this article: http://www.ommachi.net/archives/2045
பல்லவி பட்டறை
[சொல்வனம் இணைய-இதழில் வெளியாகியிருக்கும் என் ராகம் தானம் பல்லவி – பாகம் மூன்று கட்டுரையின் ஒரு பகுதி] பல்லவி என்பது நிச்சயம் வெறும் மெலடி மட்டுமல்ல. பல்லவி கலையும் அறிவியலும் கலந்துசெய்த கலவை. இந்த கருத்துக்கு எனக்கு டாக்டர். எம். வேதவல்லி சப்போர்ட். முதலில் ராகத்தை மெலடியாய் ஆலாபனை செய்துவிட்டு, தானமாய் லயம்சேர்த்து, பிறகு முத்தாய்ப்பாய் ராக, மெலடி லய கணக்கு மிளிர பல்லவி சாஹித்யம் அமைத்து பாடுவதே முறை. சாஹித்ய சாதுர்யங்களும், ராக பிடிகளும், லய …
Permanent link to this article: http://www.ommachi.net/archives/2044
ஏலியன்சோலை
செம்மொழிப்பிரதேசங்களான குறிஞ்சி, முல்லை, கோவை, திருமாலிருஞ்சோலை அடுத்து ஏலியன்ஸ் மற்றும் ஏலியன்ஸ் சார்ந்த அறிவுப்பரப்பிற்கு ஏலியன்சோலை என்று பெயர். பின்இணையத்துவ நவீனத்தமிழ் சொல்லாக்கம் என்றால் இலக்கிய நெடி கமழலாம். ஆனால் இது ஒரு இலக்கிய கற்பனை வரண்ட பிரதேசம். கேளிக்கை விஞ்ஞானப்புனைவுகள் கட்டட்ற காளானாய் தோன்றிச்செழிக்கும் வெறும் அறிவுத்துறை. இப்பரப்பை பற்றிய கதைகள் கட்டுரைகளில் படைப்பூக்கம் கம்மி. எழுதுபவர்களும் வெறும் மனிதர்களே. ஏலியன்ஸ்கள் இல்லை. வாசிப்பவர்களை பற்றி இன்னமும் முடிவாகவில்லை. ஈதிப்படியிருந்தாலும், அன்றாட பயன்பாட்டிற்கு, மனிதர்களாய் நாம் …
Permanent link to this article: http://www.ommachi.net/archives/2036
ராகம் தானம் பல்லவி – சில பதில்கள்
[சொல்வனம் இணைய-இதழில் வெளியாகியிருக்கும் என் ராகம் தானம் பல்லவி – பாகம் இரண்டு கட்டுரையின் ஒரு பகுதி] ராகம் தானம் பல்லவி பற்றிய என் சொல்வனம் கட்டுரை முதல் பாகத்தில் எனக்கு தெரிந்தமட்டில் மூன்று பிழைகள் இருந்தன. எம்.எஸ்.ஷீலா கர்நாடகா. வாக்கியத்தில் ஆந்திரப்பாடகர்களுடன் சேர்த்துவிட்டேன். ஆனாலும் அவரும் அநேக கச்சேரிகளில் ரா.தா.ப. பாடுவார். 1965 கலாநிதி ஆலத்தூர் வெங்கடேச ஐயர் என்று குறிப்பிட்டுவிட்டேன். சரியானது ஆலத்தூர் சகோதரர்களே. அதைப்போல அரியக்குடி ஐம்பதுகளில் (1950) கொண்டுவந்த கச்சேரி பாணி …
Permanent link to this article: http://www.ommachi.net/archives/2034
எங்கே ராகம் தானம் பல்லவி
[சொல்வனம் இணைய-இதழில் வெளியாகியிருக்கும் என் ராகம் தானம் பல்லவி – பாகம் ஒன்று கட்டுரையின் ஒரு பகுதி] ஆழ்வாரின் கிளரொளி இளமையொத்த தற்கால கச்சேரி மூட்டைகளில் வழக்கொழிந்துபோய்கொண்டிருக்கும், கர்நாடக சங்கீதத்திற்கு இன்றியமையாத அங்கங்களில் ஒன்று, ராகம் தானம் பல்லவி. சுருக்கமாக RTP. ஒரு நூற்றாண்டிற்கு முன் ராகம் தானம் பல்லவி தான் கச்சேரியை தொடங்கியதாம். பல வேளைகளில் ஒரே RTPயே மொத்த கச்சேரியாகவும் வியாபித்து பரிமளிக்கும். ஆனால் இக்கால – முக்கியமாக, சென்னை டிசெம்பர் சீசன் – …
Permanent link to this article: http://www.ommachi.net/archives/2021
டைனசார் விஞ்ஞானி
CERN ஆராய்ச்சி மையத்தில் சமீபத்தில் விஞ்ஞானிகளை வரைந்து காட்டு என்று ஏழாவது படிக்கும் சிறுவர்களை கேட்டு, அவர்கள் மனதில் தோன்றியதை வைத்து வரைந்ததை வெளியிட்டிருக்கிறார்கள். கூடவே அதே சிறுவர்களை நேரடியாக விஞ்ஞானிகளை பார்க்கவைத்து மீண்டும் வரையச்செய்து அதையும் வெளியிட்டிருக்கிறார்கள். இந்த படங்களை பார்த்த எனக்கு உடனே மனதில் பட்டது, நிஜ விஞ்ஞானிகள் இப்போதெல்லாம் மாறுவேடத்தில் உலவுகிறார்கள்.
Permanent link to this article: http://www.ommachi.net/archives/2016
சிறுவியல்: சோக மீன்
சிறுவியல் என்பது சிறுவர் அறிவியல் சுருக்கம். சிறு அறிவியல் செய்திகள் என்றும் கொள்ளலாம். குளத்தில், குழம்பில், மீன் பார்த்து இருக்கிறோம். நீந்தும் மீன் ஜாலியாக இருக்குமா? தூண்டிலிட்டு நாம் பிடித்துவிட்டால் சோகமாகிவிடுமா? சாப்பிடும்முன் உணவுடன் நான் பேசுவதில்லை. அதனால் எனக்கு தெரியாது. ஆனால் நிஜமாகவே கடலில் ஒரு சோக மீன் இருக்கிறது. குழந்தை கையில் காலில் சிக்கி தோலுடன் பிதுக்கிய வாழைப்பழம் போல கொழகொழ என்று இருக்கும். எந்தப் பக்கம் இருந்து பார்த்தாலும் சோகமான மூஞ்சியுடன். Sad …
Permanent link to this article: http://www.ommachi.net/archives/2011
என்னை அறிந்தால்
இதோ சில இந்த வலைதளத்தைத்தாண்டி எங்கும் பயன்படாத என்னைப்பற்றிய சிறு தகவல்கள். வெங்கட் என்றோ எழுதிய தற்புகழ்ச்சி பதிவை வைத்து போட்டுக்கொண்ட புதிய சூடு. எண்ணிலா அருந்தவத்தோன் இயம்பிய சொல், மருமத்தினெறிவேல் பாய்ந்த புண்ணிலாம் பெரும்புழையில் கனல்நுழைந்தாலென… இதை ஏற்கனவே கடுப்புடன் படித்து, படித்ததினால் மேலும் வெறியாகும் உங்களுக்கு என்னால் கூறமுடிந்த ஒரே பயன், என்னை இவ்வகையில் அறிவதால், நேரில் எதிர்படுகையில் ஓடிவிடலாம்.
Permanent link to this article: http://www.ommachi.net/archives/2004
அதிகாரமளிக்கும் ஹைஹீல்ஸ்
சுமார் நான்கு இன்ச் இல்லை அதற்கு மேல் குதிகால் பகுதியில் குளம்பு உயரம் உள்ள செருப்புகளை நாகரீக பாதுகாவலர்கள் ஹை ஹீல்ஸ் என்கிறார்கள். உயர் குதிகுளம்பு பாதுகை. இரண்டு இன்ச்சிற்கும் குறைவாக இருந்தால் லோ ஹீல்ஸ். ரோட்டில் காலைப்பிடித்து நிறுத்தி அளக்கையில், உயரம் இரண்டிலிருந்து நான்குவரை என்று தெரிந்தால், நீ அணிந்துள்ளது மிட்ஹீல்ஸ் என்று உணர். வருடங்களுக்கு முன், அது நாகரீகம் என்று வந்த புதிதில், எங்கள் வீட்டில் சில பெண்கள் ஹை ஹீல்ஸ் செருப்பு அணிவர். …
Permanent link to this article: http://www.ommachi.net/archives/1938
சுவர்களுடன் பேசியவள், ஆனால்…
ஒரு ஊரில் ஒரு மாமியார் வாழ்ந்தாள். ஆனால் அவள் குறைகளை யாரிடமும் சொல்லமுடிவதில்லை. அவளுக்கு இரண்டு மாட்டுப்பெண்கள். இரண்டு பிள்ளைகள். இரண்டு கைகள். இரண்டு கால்கள். ஆனால் மொத்தம் இருபத்தியொரு விரல்கள். மாட்டுப்பெண்கள் அவளை படுத்தினர். பிள்ளைகள் உதாசீனப்படுத்தினர். ஆனால் அவள் நான்கு வைர மோதிரங்கள் அணிந்திருந்தாள். கணவன் இருந்த காலங்களில் ஊரில் கோப்யமாக வாழ்ந்தவள் வாயைத்திறந்து பிறரிடம் குறைபட்டுக்கொள்வதே தெரியாது. ஆனால் அவள் மறுமணம் புரிந்துகொள்ளவில்லை.
Permanent link to this article: http://www.ommachi.net/archives/1915
மரக்கலை மயக்கலை
கலை அரிசி கேள்விப்பட்டிருக்கிறோம். வியப்புற்றோம். நானோ கலை கேள்விப்பட்டோம். விசனப்பட்டோம். இன்று மெகா மரக்கலை. அறிவியலை வைத்து செய்யும் மற்றொரு கலையுலக மோசடி. பண்டைய நாகரீகங்களை அதன் ஆயகலைகளின் தேர்ச்சி, அக்கலைச்சின்னங்கள் வைத்து கொண்டாடுவோம். இசைக்கலை அடிப்படை உணர்வுகளுடன் உரையாடுவது. எளிதில் அனைவராலும் அணுகக்கூடியது. ஓவியக்கலை என்றால், உதாரணத்திற்கு, காப்பாற்றப்படவேண்டிய தமிழ்நாட்டின் சுவர் சித்திரங்கள் பற்றிப் பார்த்தோம். அதைப்போல தமிழகத்தில் மரத்தில் செதுக்கும் கலை தொன்றுதொட்டு இருக்கிறது. பலவகை கோபுர சிற்பங்களிலும், கட்டடக்கலையை சார்ந்து உருவாகும் மரவேலைப்பாடுகளிலும் …
Permanent link to this article: http://www.ommachi.net/archives/1892
ஆடு பாம்பே
மாலையில் வாக்கிங் போகலாம் என்று வீட்டிலிருந்து இறங்குகையில் இல்லாள்தான் முதலில் பார்த்தாள் இந்த ஆடும் பாம்புகளை. நிச்சயம் கடிபடாமல் வெற்றியுடன் புறமுதுகிட்டு ஓடிவந்துவிடலாம் என்கிற தூரத்தில் இருந்தபடி, கையில் செல்போனுடன் உயிரையும் பிடித்தபடி, சார் எடுத்த சாரைப்பாம்புகளின் பாலே வீடியோ கீழே. வீடியோவின் ஆட்டம் கையினால் மட்டுமல்ல. வீடியோ நடுவில் கேட்கும் ஆடியோ ”செக்யூரிட்டிய கூப்டு” என்கிற அய்யாவின் தீரமான உறுமலே.
Permanent link to this article: http://www.ommachi.net/archives/1881
விஞ்ஞானபுனைக்கதை விமர்சனம்: ஹால்ட்டிங் ஸ்டேட்
சார்லஸ் ஸ்ட்ராஸ் எழுதியுள்ள விஞ்ஞானப்புனைகதை ஹால்டிங் ஸ்டேட்டை படிக்கையில் உனக்குப் புரிகிறது இனி பேச்சுவழக்கு ஆங்கிலம் உனக்குப் புரியாது என்று. கீக்குகள் பேசும்மொழி, சற்று க்ரிப்ட்டோகிராஃபி, ஏன் எம் எம் ஓ ஆர் பி ஜி (MMORPG) காட்சி சாத்தியங்கள் கூட உனக்குப் புரியும். ஆனால் புரியாதது இப்புத்தகத்தில் வரும் ஆங்கிலத்தை தங்கள் ’அம்மா நாக்காக’ கொண்ட ஜீவன்கள் பேசும் மொழி. போகட்டும் அது என்று உன்னை நீயே சமாதானப்படுத்திக்கொள்கிறாய் ஏனெனில், இக்கதையில் வரும் எதிர்காலத்தையும் அதன் …
Permanent link to this article: http://www.ommachi.net/archives/1814
ஏலியன்ஸ் இருக்கிறார்களா: செட்டி (SETI) என்ன செய்கிறது
செட்டி (SETI) என்றால் ஸெர்ச் ஃபார் எக்ஸ்ட்ரா டெரெஸ்டிரியல் இன்டெலிஜென்ஸ். இன்று மனிதனின் பலவிதமான ஏலியன்ஸ் தேடல்களை அவர்களிடம் தொடர்புகொள்ளும் முயற்சிகளை சேர்த்து விளிக்கும் ஒரே வார்த்தை செட்டி . வளி-அறிவு-ஜீவிகள் தேடல். [1 - எதற்கும் கீழே குறிப்பை ஒருமுறை பார்த்துவிட்டு தொடரவும்]. பனிப்போரின் உச்சத்தில் 1960களில் அமெரிக்க ருஷ்ய கைகுலுக்கல்களுடன் நாஸா ஆதரவுடன் ஏக சாத்தியங்களுடன் தொடங்கி, பயோநீர் பட்டயம், வாயேஜர் வட்டு, பீட்டில்ஸ் பாட்டு என்று 1970களில் உற்சாகமாக அங்குமிங்கும் சுற்றி சைக்ளாப்ஸ், …
Permanent link to this article: http://www.ommachi.net/archives/854
ஷட்ஜம் சரி ஷட்ஜமம் தவறு
கர்நாடக சங்கீத விமர்சனம் ஒன்றில் இன்று ஷட்ஜமம் என்று படிக்க நேர்ந்தது. ஸ ரி க ம ப த நி ஸா ஸ்வரங்களில் ஸ வை குறிப்பிடுகையில் விமர்சகர் ஷட்ஜமம் என்கிறார். இது தவறு. ஷட்ஜம் என்பது சரியான சொல். ரி, க, ம, ப, த, நி ஆகிய மற்ற ஸ்வரங்களுக்கு முறையே ரிஷபம், காந்தாரம், மத்தியமம், பஞ்சமம், தைவதம், நிஷாதம் என்று கூறுவர். அதன்படி ஸ வை ஷட்ஜமம் என்று சொல்வது வழக்கத்தில் …
Permanent link to this article: http://www.ommachi.net/archives/1853
கடவுள் செயல்?
விபத்திலிருந்து தப்பிப்பிழைத்த கிருஷ்ணன் மேங்களூர் ஆஸ்பத்திரி வார்டிலிருந்து தான் பிழைத்ததைப் பற்றி கூறுகிறார்: யோசிக்கிறேன், ஏன் நான் மட்டும் என்று. எனக்கு தோன்றுவது கடவுள் எனக்கு மறுவாழ்வை கொடுக்க நினைத்துள்ளார்… விபத்திலிருந்து பிழைத்தது கடவுள் செயல். அப்போ 160க்கும் மேற்பட்ட சக பயணிகளை சாகடித்த விபத்து? அவருக்கு மட்டும் மறுவாழ்வளிக்க அநேகரை சாகடிக்கும் கிருஷ்ணனின் கடவுள் இவ்வளவு குரூரமானவரா? ஒலி-கடிக்காக (சௌண்ட் பைட்) அடிபட்டு ஆஸ்பத்திரியில் படுத்திருப்பவர் மனநிலை எப்படி இருக்குமோ என்றும் பார்க்காமல் பேட்டியெடுக்கும் ஊடகங்களை …
Permanent link to this article: http://www.ommachi.net/archives/1845











