சென்ற பாகத்தின் இறுதியில் மேற்கத்திய செவ்வியல் இசையில் முக்கியமான அங்கமாய் இடம்பேறாத, கர்நாடக சங்கீதத்தில் முக்கியமான கற்பனைத்திறன் வெளிப்பாடாய் தோன்றும் அங்கம் நிரவல் என்றோம். ஆனால் அந்த இசையில்தான் இதைசெய்யவேண்டும் என்று கட்டாயமில்லை. நிரவல் பற்றி விளக்கும் முன் அதன் முன்கதைசுருக்கமான சங்கதி என்பதின் சங்கதியை ஓரளவு இங்கு சொல்வோம். சங்கதி என்னவென்று விளக்குவதற்கு முன் இப்பாடலை முழுவதும் கேளுங்கள். மன்னவன் வந்தானடி. http://www.youtube.com/watch?v=5-y-J9Pabq8 பாடலின் முடியும் தருணங்களில் பல்லவி “மன்னவன் வந்தானடி தோழி” என்பதை பலவிதங்களில் …
Permanent link to this article: http://www.ommachi.net/archives/2402
ராகம் தானம் பல்லவி – பாகம் 5
சென்ற நான்காகவது பாகக் கட்டுரையில் குறிப்பிட்டதுபோல சதுர்ராகமாலிகை பல்லவி ரிப்பீட்டு. சங்கராபரணனை அழைத்தோடி வாடி கல்யாணி தர்பாருக்கு சென்ற பாகங்களில் விளக்கியுள்ள சங்கீத வார்த்தைகளை நினைவில் கொண்டு, சென்ற பாகம் தொடக்கத்தில் நீங்கள் என்னை அடிக்க வரும்முன் நான் குறிப்பிட்ட கீழ்வரும் பத்தியை இப்போது மீண்டும் படித்துப்பாருங்கள். இந்த ராட்டை பல்லவி சதுஸ்ர ஜாதி திரிபுடை (ஆதி) தாளத்தில், சதுஸ்ர நடையில், இரண்டு ஆவர்த்தத்தில், இரண்டு களை சௌக்கத்தில், அமைக்கப்பட்டு, சமத்தில் இருந்து முக்கால் இடம் தள்ளி …
Permanent link to this article: http://www.ommachi.net/archives/2394
ராகம் தானம் பல்லவி – பாகம் 4
ராகம், தானம், பல்லவி வரலாறு சாஹித்யம் செய்முறை என்று இதுவரை ஓரளவு எழுதியுள்ளோம். இங்கு ஒரு சற்று கடினமான பல்லவி அறிமுகப்படுத்துவோம். பல்லவியை இந்த, அடுத்த பாகங்களில் முழுவதும் பிரித்து விளக்குகையில் மேலும் பல விஷயங்களை பகிர்ந்துகொள்ளமுடியும். ஏன் இப்படி தடாலடியாக கடினமான பல்லவி என்றால், நமக்கு (எனக்கு) நீச்சல் கத்துகரதுன்னா தொபுகடீர் என்று குதித்து அப்படி இப்படி கையை காலை உதறி, வாய் மூக்கு நிறைய தண்ணீர் குடித்து, புகுந்து புறப்பட்டு, மூச்சு முட்டி, உயிரே …
Permanent link to this article: http://www.ommachi.net/archives/2391
ராகம் தானம் பல்லவி – பாகம் 3
ராகம் தானம் ஆயிற்று. இப்பாகத்தில் பல்லவி பற்றி அறிமுகம். தொடங்கும்முன் அறிமுகத்திற்காகவே இக்கட்டுரைகளை படிப்பவர்களுக்கு ஒரு வார்னிங். பல்லவிக்கு நேரடியாக பல சம்பந்தமில்லா விஷயங்களை சொல்வதுபோல் முதலில் தோன்றும். ஆனால் இவைகளை ஒரளவு அறிமுகம் செய்துகொண்டால்தான் பல்லவியின் உன்னத கட்டுக்கோப்பை கோடிகாட்டலாம். புரிந்து ரசிக்கலாம். அநேகமாக கட்டுரையின் அடுத்த இரு பாகங்களுக்குள் அனைத்தையும் ஒருங்கிணைத்துவிடுவேன். அதேபோல் அன்பர்கள் கேட்டதில் ஓரிரு கேள்விகளுக்கு இங்கு பதில் கூறவில்லை (சிலவற்றிற்கு கட்டுரையினூடே கூறியுள்ளேன்). அடுத்த பாகம்வரை பொறுத்திருங்கள். ஆங்காங்கே புரியவில்லையென்றால் …
Permanent link to this article: http://www.ommachi.net/archives/2389
ராகம் தானம் பல்லவி – பாகம் 2
முதல் பாக கட்டுரையில் எனக்கு தெரிந்தமட்டில் மூன்று பிழைகள் இருந்தன (திருத்திவிட்டேன்). எம்.எஸ்.ஷீலா கர்நாடகா. வாக்கியத்தில் ஆந்திரப்பாடகர்களுடன் சேர்த்துவிட்டேன். ஆனாலும் அவரும் அநேக கச்சேரிகளில் ரா.தா.ப. பாடுவார். 1965 கலாநிதி ஆலத்தூர் வெங்கடேச ஐயர் என்று குறிப்பிட்டுவிட்டேன். சரியானது ஆலத்தூர் சகோதரர்களே. அதைப்போல அரியக்குடி ஐம்பதுகளில் (1950) கொண்டுவந்த கச்சேரி பாணி என்று எழுதியிருந்தேன். 1930 40 களிலே அவர் அதைசெய்துவிட்டாராம். முன்னூறு வயது மதிக்கத்தக்க என் இசைநண்பர் குட்டுகிறார். மகிழ்ச்சி. அடுத்து, ராகம் தானம் பல்லவி …
Permanent link to this article: http://www.ommachi.net/archives/2388
ராகம் தானம் பல்லவி – பாகம் 1
ஆழ்வாரின் கிளரொளி இளமையொத்த தற்கால கச்சேரி மூட்டைகளில் வழக்கொழிந்துபோய்கொண்டிருக்கும், கர்நாடக சங்கீதத்திற்கு இன்றியமையாத அங்கங்களில் ஒன்று, ராகம் தானம் பல்லவி. சுருக்கமாக ரா.தா.ப. (RTP). சென்ற வருடத்தில் சொல்வனம் இணைய இதழில் கட்டுரைத்தொடராய் இதைப்பற்றி எழுதிக்கொண்டிருந்தேன் (தொடர் இன்னும் முடியவில்லை). இவ்வலைப்பதிவில் என்னைத்தொடர்ந்து வாசித்துவருபவர்களுக்காகவும், தமிழில் எழுதியவைகளை ஓரிடத்தில் திரட்டும் முழுமைக்காகவும் இங்கு சொல்வனம் கட்டுரைகளின் சற்று திருத்திய, பத்திகளை விளக்கங்களை சற்று மாற்றியமைத்த வடிவத்தை வெளியிடுகிறேன். மூலத்தை என்றும் சொல்வனத்தில் படித்துக்கொள்ளலாம். கட்டுரைத்தொடரில் கர்நாடக சங்கீதத்தையே …
Permanent link to this article: http://www.ommachi.net/archives/2386
சூரிய கறைகள்
தலைப்பைப் பார்த்து தமிழ்நாட்டு அரசியல் சார்ந்த பரபரப்பிலக்கிய கட்டுரையோ என்று எதிர்பார்க்காதீர்கள். அவ்விஷயங்களில் அறிவார்த்தமான கருத்துகள் என்னிடம் இல்லை. நாளை மற்றொரு நாளே; இதுவும் மற்றொரு அறிவியல் கட்டுரையே. ஸன் ஸ்பாட் என்பதை சூரிய கறை என்கிறேன். சூரிய புள்ளி, சூரிய பொட்டு என்றெல்லாம் தமிழாக்குவதற்கும் சார்ந்த கலைச்சொல்லாராய்ச்சி விவாதங்களில் நடுநிலை வகிப்பதற்கும் தற்போது ஒழியவில்லை. தொடருவோம். சூரிய கறைகளுக்கு அல்பாயுசு. சுமார் இருபது அல்லது முப்பது நிமிடங்களில் உருமாறிவிடும். தோன்றிய வேகத்தில் அழிந்தும் விடலாம். தோன்றி …
Permanent link to this article: http://www.ommachi.net/archives/2383
கல்பகம் ஸ்வாமிநாதன்
ஓப்பெரா இசைமுறையில் தேர்ந்த பெண்குரலால் ஒரு ஸ்வரத்தை ஓங்கிப்பிடித்தே, தோன்றும் ஒலி அதிர்வுகளினால் அருகிலிருக்கும் கண்ணாடியை உடைக்கமுடியுமாம். மனித குரலுக்கு அவ்வளவு மகத்துவம். அதேபோல கர்நாடக இசை மற்றும் பொருள் நிரம்பிய வார்த்தைகளாலான அதன் கீர்த்தனைகளின் நுணுக்கங்களை சகல பரிமாணங்களுடன் அழகுடன் வெளிக்கொணரமுடிவதும் வாய்ப் பாட்டில்தான் என்பர். இசைக்கருவிகள் ஒரு மாத்து கீழேதான்.
Permanent link to this article: http://www.ommachi.net/archives/2380
ஆர்ஸெனிக் பாக்டீரியா – சில சந்தேக நிவர்த்திகள்
ஃபெலிஸா உல்ஃப்-ஸைமன் மற்றும் விஞ்ஞானிகள் குழு கலிஃபோர்னியாவில் உள்ள மோனோ ஏரியின் சேற்றில் வாழும் நுண்ணுயிரை பரிசோதித்து, மரபணுவில் பாஸ்பரஸ் மூலப்பொருளுக்கு பதிலாக ஆர்ஸெனிக்கை உபயோகித்து அதனையே உட்கொள்ளும் நுண்ணுயிர் (பாக்டீரியம்) உலகில் உள்ளது என்று நிரூபித்திருந்ததை பற்றி ஆர்செனிக் நுண்ணுயிரும் விஷக்கன்னி மாலாவும் கட்டுரையில் விளக்கியிருந்தோம். அந்த கட்டுரையின் அறிவியலில் நமக்கு பொதுவாக ஏற்படும் சந்தேகங்களை சார்ந்து சில கேள்விகளுக்கான பதில்களை (அனைத்தும் விடைகள் இல்லை) இங்கு பார்ப்போம்.
Permanent link to this article: http://www.ommachi.net/archives/2358
கடையில் கால்குலஸ் வாங்குவோமா
கடற்கரை, பாஸ் என்ற பாஸ்கரன் அடுத்து சென்னைவாசிகள் கூடிக் கார்களுக்கிடையே கால்பதித்து கட்டௌட்டுகளுக்கிடையே ஊடாடி, செத்த மரங்களுக்கிடையே சித்தம் களிப்புற, இந்த வருடமும் ”புத்தகக் காட்சி” இரண்டு வாரங்களாக அமோகமாக நடந்தது. அன்றாடம் பகலில் கண் அசரும் இடத்தை விட்டு அகலாமல், முன்னே இருக்கும் மாயக்கண்ணாடியில் கூகுள்-எர்த் வழியாக தொடர் ஸூம்-ஷாட்டாய் க்ளிக்கிப் பார்க்கையில், இந்த புத்தகச் சந்தையில் நம் விஞ்ஞானப்புலவர் விளங்கமுடியாக்கவிஞர்நான் (அதான் பெயர்) குடும்ப சமேதராக வாயிலில் நிற்பதை காண்கிறோம். பாரதியார், விவேகானந்தர், ஷேக்ஸ்பியர், …
Permanent link to this article: http://www.ommachi.net/archives/2356
புதுவருட அ(றி)வியல் உறுதிமொழிகள்
எனக்குப்புரிந்த கைமண் அளவு அறிவியலை என் குறை எழுத்தின் மூலமே இணையத்தில் மௌனமாகவும் உற்சாகமூட்டியபடியும் தொடர்ந்து படித்துவரும் வாசகர்களுக்கும், வேறு ஊடகங்களில் இடம்பெறச்செய்ய முற்படும் அபிமானிகளுக்கும், என் அறிவியல் கனிந்த புத்தாண்டு வாழ்த்துகள். வணக்கங்கள். கீழே இந்த ஆங்கிலப் புத்தாண்டிற்கான என் தமிழ் உறுதிமொழிகள் சில:
Permanent link to this article: http://www.ommachi.net/archives/2354
ஆர்செனிக் நுண்ணுயிரும் விஷக்கன்னி மாலாவும்
மரபணுவில் பாஸ்பரஸ் மூலப்பொருளுக்கு பதிலாக உபயோகித்துகொள்ளும் அளவிற்கு, நமக்கு விஷமாகிய, ஆ ர்சனிக்கை உட்கொள்ளும் நுண்ணுயிர்கள் உலகில் உள்ளது என்று பரிசோதனையில் நிரூபித்திருக்கிறார்கள். சென்ற வாரம்தான் இந்த ஆராய்ச்சி கட்டுரை வெளியாகியுள்ளது. ஃபெலிஸா உல்ஃப்-ஸைமன் மற்றும் அவருடைய விஞ்ஞானிகள் குழு அமேரிக்காவில் கலிஃபோர்னியாவில் உள்ள யோஸமைட் பூங்காவின் அருகில் இருக்கும் மோனோ ஏரியின் சேற்றில் வாழும் நுண்ணுயிரை பரிசோதித்து, அவைகளில் ஒரு நுண்ணுயிரால் இவ்வாறு ஆர்சனிக்கை உண்டு வாழமுடியும் என்று காட்டியுள்ளனர். படத்திலுள்ளது scanning electron microscopy …
Permanent link to this article: http://www.ommachi.net/archives/2347
பெங்களூரு விஜயம்
சில மாதங்கள் முன்பு, ஒரு மாதம் பெங்களூரூ இன்ஸ்டிட்யூட்டில் [1] ஆராய்ச்சி நிமித்தம் அவ்வப்போது வசித்து, வீக்கெண்டெல்லாம் சென்னையில் வீட்டை விசிட்டிக்கொண்டிருந்தேன். அனுபவத்தில் சிலதை அப்போதைக்கு இப்போதாவது சொல்லிவைக்கிறேன். சென்னைமாநகருளார்களில் படிக்கும் சிலர் பிழைத்துகொள்ளலாம். பெங்களூர் சாம்பார் இனிப்பு. சட்னியும் இனிப்பு. மடியில் சிந்தி, மடினியும் இனிப்பு. ஒரு மாதம் பெங்களூரில் பல உணவகங்களில் சாப்பிட்டவுடன், வீட்டில் புறங்கையை நக்கினாலே அசட்டுதித்திப்பாய் இருந்தது. தோஷம் விலக ஆந்திரா கொங்கூராவில் ஒரு நாள் வலதுகையை முக்கிவைத்திருந்தேன்.
Permanent link to this article: http://www.ommachi.net/archives/2339
மாற்று உயிர் – 2
உயிர் என்றால் என்ன என்பது பற்றி சுருக்கமாக அறிந்தோம். மாற்று உயிர் என்றால் என்ன? மாற்று உயிர் என்று பெயரிடப்பட்ட ஜீவராசிகள், நம்மைப்போன்ற உயிரினத்துலிருந்து மாறுபட்டு, ஆனால் மொத்தமாக வேறாக இல்லாத, நம் உயிர்தொகை தழைக்கும் உருளையின் (பூமி) நிழலாய், இயங்கும் ஒரு நிழல் உயிருருளை. பூமியிலேயே நிஜத்துடன் தழைக்கும் Shadow Biosphere என்கிறார்கள். இவை எப்படி இருக்கலாம்?
Permanent link to this article: http://www.ommachi.net/archives/2300
மாற்று உயிர்
எங்கெங்கோ வேறு உயிர்களை, ஏலியன்ஸை, அந்நியர்களை, தேடிக்கொண்டிருக்கிறோம். இதற்கு முன், நம் உலகிலேயே நாம் அல்லாத உயிர்கள், மாற்று உயிர்கள் (alternate life), கொண்ட நிழல் உயிருருளை (shadow biosphere) தழைத்திருக்கலாமே என்று இன்று அறிவியல்ரீதியாய் உணருகிறோம். இடப்புற சுழற்சியுடைய சக்கரைகள் வலப்புறம் சுழற்சியுடைய அமினோ அமிலங்களிளாலான, கார்பன் ஆதார பொருளாக இல்லாமல் சிலிக்கன், ஜெர்மானியம் என்று ஆதார-மூலக்கூறுகளுடன், ஒரு நியூக்ளியஸ் தாண்டி இரண்டு நியூக்ளியஸ் கொண்ட உயிரணுவுடனான, இப்படி பல வகைகளில் மாற்று உயிர்களை அனுமானிக்கலாம். …
Permanent link to this article: http://www.ommachi.net/archives/2281















