2011திற்கான வேதியியல் நோபல் பரிசு இஸ்ரேல் நாட்டு பேராசிரியர் டேனியல் ஷெக்ட்மேன் (Daniel Shechtman) குவாஸி-க்ரிஸ்டல்ஸ் அல்லது குவாஸி-பீரியாடிக் க்ரிஸ்டல்ஸ், பகுதி வெளிச்சீர் படிகம், என்ற விந்தை பொருளை கண்டுபிடித்ததற்காக கொடுக்கப்பட்டுள்ளது. இப்பொருளையும் அதன் கண்டுபிடிப்பின் தாக்கத்தையும் புரிந்துகொள்ள சாதா படிகங்களை அறிமுகப்படுத்திக்கொள்வோம்.
Permanent link to this article: http://www.ommachi.net/archives/2492
2011 இயற்பியல் நோபல் பரிசு
பந்தை தூக்கிப்போட்டு காட்ச் பிடிக்க காத்திருக்கையில் பந்து கீழே விழாமல் மேல்நோக்கியே சென்றுகொண்டிருந்தால் பேஜாராகிவிடமாட்டீர்கள்? இப்படி ஒரு நிகழ்வையே 1998இல் நம் அண்டத்திற்கே ஒட்டுமொத்தமாய் நிகழ்வதாய், 2011 இயற்பியலுக்காக நேற்று நோபல் பரிசு வென்றுள்ள விஞ்ஞானிகள் 1998இல் கண்டுபிடித்தார்கள். வென்றவர் மூவர். சௌல் பெர்ல்முட்டர், அமெரிக்க லாரன்ஸ்-பெர்க்லி நேஷனல் லபாரட்டரியின் சூப்பர்நோவா காஸ்மாலஜி பிராஜெக்ட்டின் தலைவர் மற்றும் கலிஃபோர்னியா பல்கலைகழகத்தின் அஸ்ட்ரோபிஸிக்ஸ் பேராசிரியர். பிரையன் ஷ்மிட், ஹை-ஸீ சூப்பர்நோவா ஸெர்ச் டீமின் தலைவர்; ஆஸ்திரேலியன் நேஷனல் பல்கலைகழகத்தின் …
Permanent link to this article: http://www.ommachi.net/archives/2483
பட்டியல்கள்
இணையமும் அதில் வலைப்பூக்களும் பூத்துக்குலுங்கும் காலத்திற்கு முந்தைய ஒரு பிராயத்தில் புத்தக புழுவில்லையாகினும், பூச்சியாயிருந்தேன். படித்த புத்தகங்களை ஒரு குயர் கோடுபோட்ட நோட்புக்கில் பட்டியலிட்டேன். பத்து வருடமாக பட்டியலிட்டதில், என்னிடம் உள்ள புத்தகங்கள் என்றில்லாமல், அக்கம்பக்கத்தில் ஓசியில் படித்தவை என சுமார் ஐநூறு புத்தகங்கள் தேறியது. புனைவு, வினவு, அறிவியல், அவியல், என பலசரக்கு தலைப்புகள் பட்டியலில் அடக்கம். எதற்கு இந்த சுய விளம்பரப் பட்டியல் என்று தெரியவில்லை; கேர்ள்பிரண்ட்ஸ்களிடம்கூட காட்ட எத்தனித்ததில்லை. டூ விட்டுவிடுவார்களோ என்று …
Permanent link to this article: http://www.ommachi.net/archives/2479
டைஸன் உருளையும் மட்ரியோஷ்கா மூளையும்
இக்கட்டுரையில் தலைப்பில் உள்ள அதிசியப் பொருட்களை பற்றி அறிமுகப்படுத்திக்கொள்ளப்போகிறோம். ஏலியன்ஸ் என்ற குடையின்கீழ் தொடர்கட்டுரைகளானாலும், இக்கட்டுரையை படிக்க முன்கட்டுரைகளின் புரிதல் அவசியமில்லை. அதற்காக இந்த லாஜிக்கையே நீட்டி அடுத்த கட்டுரையை படித்துக்கொள்கிறேன் என்று இதைப்படிக்காமல் போய்விடாதீர்கள். உபயோகிக்கும் ஆற்றல் அளவை வைத்து ஒரு அறிவுசார் சமுதாயத்தை, இப்பிரபஞ்சத்தில் அது எங்கிருந்தாலும், கர்டஷாவ் அளவை வகை 1, வகை 2, வகை 3… ஒன்றினுள் அடக்கிவிடுமாறு புரிந்துகொண்டோம். இன்னமும் காணவேயில்லாத ஏலியன்ஸ் நாகரீகங்களை இப்படி வகைபடுத்துவதால் பயன் என்னவென்றால், …
Permanent link to this article: http://www.ommachi.net/archives/2470
ஏலியன்ஸ் மேஜிக்கும் கர்டஷாவ் அளவையும்
பாலநாகம்மா என்று சுமார் முப்பது வருடத்திற்கு முன் தொடைவரை புரளும் சவுரி, கால்குறுகியப் புடவையில் ஸ்ரீதேவியும், முதுகுவரை நீண்ட ஜில்பா, பட்டுப்பாவாடையில் சரத்பாபுவும் நடித்துவெளிவந்த மாயாஜால ராஜா கதை படம் பார்த்திருக்கலாம். படத்தொடக்கத்தில் வில்லன் மந்திரவாதி (மனோகர்?), மந்திரக்கோலை மாயக்கண்ணாடியின் முன் ஆட்டி, உலகிலேயே அழகான பெண் யார் என்று கேட்டதும், கண்ணாடி, ஜில்தண்ணி குளத்தில் அன்றலர்ந்த தாமரையாய் சிரித்தபடியே குளிக்கும் ஸ்ரீதேவியின் முகத்தை (மட்டும்) காட்டும். கட்டுரையின் கன்னியத்தை சந்தேகிக்கும்முன், நான் இங்கு விளக்கமுற்படுவது ஸ்ரீதேவியின் …
Permanent link to this article: http://www.ommachi.net/archives/2463
ஏலியன்ஸ் மறைமுகத் தேடலும் நுண்னூடுருவிகளும்
ஏலியன்ஸ் – வளி-அறிவு-ஜீவராசிகள்– என்பவரை நேரடியாக ரேடியோ வானியல்முறையில் தேடுகிறோம். அதைப்போல மறைமுகத்தேடலும் செய்கிறோம். மறைமுகத் தேடல் பற்றி ஏன் எதற்கு எப்படி என்று அறிமுகப்படுத்திக்கொண்டுவருவதில் சென்றகட்டுரையில் விளக்கிய எக்ஸோ கிரகங்களுக்கு அடுத்து, பூமிக்கு அருகில், ஏலியன்ஸ்களுக்கான வேறு வகையான மறைமுகத் தேடல் ஒன்றை சுருக்கமாக பார்ப்போம். நேனோ ஊடுருவிகள் (ப்ரோbஸ்), வைரஸ்கள் புலப்படுகிறதா என்று தேடுவது. இதை புரிந்துகொள்ள வேறு திசையிலிருந்து அணுகுவோம். வீட்டில், அலுவலில், கணினிகளை உபயோகித்திருப்பீர்கள். என்பதுகளில் இருந்த கணினியின் திறனைக்காட்டிலும் பலமடங்கு …
Permanent link to this article: http://www.ommachi.net/archives/2448
ஏலியன்ஸ் மறைமுகத் தேடலும் எக்ஸோ கிரகங்களும்
நம் ஏலியன்ஸ் தேடலில் இரண்டு வகை; நேரடித் தேடல், மறைமுகத் தேடல். ரேடியோ வானியல் முறையில் ஏலியன்ஸ்களிடமிருந்து செய்தி சமிக்ஞைகளை தேடுவது நேரடித் தேடல். இவற்றை செட்டி (SETI) என்ன செய்கிறது என்று ஏற்கனவே அறிமுகப்படுத்திக்கொண்டுள்ளோம். மறைமுகத் தேடல் ஏன் எதற்கு எப்படி என்று அறிமுகப்படுத்திக்கொள்வோம். அதற்கு முதலில் நேரடித் தேடலின் ஒரு முக்கியமான தடுமாற்றத்தை புரிந்துகொள்ளவேண்டும்.
Permanent link to this article: http://www.ommachi.net/archives/2455
ஏலியன்ஸ் தேடலில் நம் ஊடக அலைவரிசைகள் உதவுமா?
ரேடியோ வானியல் முறையில் ஏலியன்ஸ், வளி-அறிவு-ஜீவிகளின், சமிக்ஞை கிடைக்கிறதா என்று தேடுவது மற்றும் அவர்களுக்கு நாம் இன்னார் என்று செய்திச்சமிக்ஞை அனுப்புவது செட்டி (SETI) எனும் நம் ஏலியன்ஸ் தேடல்களில் நேரடி வகை (மறைமுக ஏலியன்ஸ் தேடல் உள்ளது; பிறகு பார்ப்போம்). இத்தேடல் பற்றி கேள்விப்பட்டதும் மனதில் எழும் ஒரு ஆதார சந்தேகம்: அப்படியென்றால் நம் ரேடியோ டீவி நிகழ்சிகளை ஏலியன்ஸ் கேட்டுவிடும் சாத்தியம் உள்ளதா? சொற்பமே என்று ஏற்கனவே வேறு கட்டுரையினூடே சுருக்கமாக பதிலளித்துள்ளோம். ஏன் …
Permanent link to this article: http://www.ommachi.net/archives/2445
ஏலியன்ஸ்: ஃபெர்மி முரண்மெய், பெருவடிகட்டல் தீர்வுகள்
ஏலியன்ஸ் தேடும் படலம் தொடருகிறது. இவ்வளவு பெரிய அகண்டத்தில் விண்வெளி-அறிவு-ஜீவிகள், ஏலியன்ஸ்கள், இருக்கத்தான் சாத்தியங்கள் அதிகம். அப்படியென்றால் ஏன் ஒருவரும் இன்னமும் நமக்குத் தட்டுப்படவில்லை. ஏன் நம்மை ஒருவரும் சந்திக்கவில்லை? இப்படிக் கேட்பது ஃபெர்மி முரண்மெய் (Fermi paradox). அதாவது, இப்படி இல்லையே என்று கேட்பதன் மூலம், ஏலியன்ஸ் இருக்க சாத்தியங்கள் அரிதுதானோ என்று புலப்படுத்துவது முரண்மெய். இதை முன்னர் விவாதித்தோம். அதேபோல, ஏன் இன்னமும் ஏலியன்ஸ் நமக்குத் தென்படவில்லை என்பதற்கான தீர்வாய் பரிந்துரைக்கப்பட்ட பெரு வடிகட்டல் …
Permanent link to this article: http://www.ommachi.net/archives/2443
பாட்மேன் சமன்பாடு
பொழுதுபோக்கு கணிதப்ரியர்களுக்கு இந்த சிறுபதிவு. டிஸி காமிக்ஸ் சூப்பர் ஹீரோ பாட்மேன், வௌவால் மனிதன், படித்திருப்பீர்கள். திரைப்படமாய் ஏக இரைச்சலுடன், பேட்டோமொபல் ஊர்திகள், இருட்டு செட்டுகள், பக்கவாத்திய ராபின், ஜோக்கர் வில்லன் என்று கலர் கலர் காரக்டர்களுடன், வெடித்துச்சிதறும் கிராஃபிக்ஸ் கோரங்களுடன் பல பாகங்களில் கோடைவிடுமுறை கோலாகலங்களை தியேட்டரில் பார்த்திருக்கலாம் (கடைசியாக வந்தது தி டார்க் நைட் என்று நினைவு – பாட்மேன் சார், நீங்க நல்லவரா, கெட்டவரா? தெரியலியேப்பா… என்று வசனம் கூட வருமே…). அந்த …
Permanent link to this article: http://www.ommachi.net/archives/2438
ஏலியன்ஸ் தேடல், பேய், பிசாசு: அறிவியலா புரட்டா
ஏலியன்ஸ் – அந்நியர்கள், வேற்றுகிரகவாசிகள், வளி-அறிவு-ஜீவராசிகள் – பற்றி சென்றவருடம் நிறைய எழுதிவந்தோம். மீண்டும் தொடர்வோம். இங்கு ஏலியன்ஸ் டாப்பிக்கில் நம் அனைவருக்கும் எழும் ஆதார கேள்வி ஒன்றை விவாதிப்போம். உலகில் சாமான்யர் இதுவரை பார்த்திராத ஏலியன்ஸ், வளி-அறிவு-ஜீவராசிகளை இருப்பதாய் ஏன் நம்பலாம்? எந்தவிதத்திலும் எவ்வகை தேடலுக்கும் இதுவரை தென்படாத இவர்கள் இருப்பதாய் மட்டும் ஏன் நம்பவேண்டும்? அறிவியல் சிந்தைக்கே ஒவ்வாத செயலாய் படுகிறதே. அப்படிப் பார்த்தால் பேய் பிசாசு இருப்பதாய் நம்மில் பலர் நம்புகிறோமே. அதை …
Permanent link to this article: http://www.ommachi.net/archives/2430
கற்க கசடற
சொல்வனம் இதழில் வெளியாகியிருக்கும் கட்டுரையை ஒரு மினி அறிமுகத்துடன் இங்கு மீள்பதிவாக்குகிறேன். ஈஸிசேரில் சாய்ந்தபடி நாளைக்கு இந்நேரம் நாற்பது வயதாகிவிடுமே, இவ்வுலகில் தங்கும் அவகாசத்தில் அநேகமாக பாதி முடிந்துவிட்டதே, தாத்தா வீடு, ராமாயணம், குஞ்சாலாடு, ஸ்ரீதேவி, திருட்டு தம், கிட்டார், மீன் வறுவல், இயற்பியல் என்று எதையுமே நாம் நினைத்தவகையில் அனுபவிக்கமுடியவில்லையே என்று கண்விழித்து சொப்பனம் கண்டு சற்றே அசர, ஜான் லெனனின் கிரானீ கிளாஸஸுடன் சாக்பீஸ் தூள் பறக்க போர்டெல்லாம் ஈக்குவேஷனாக ரிச்சர்ட் ஃபெய்ன்மேன் வேஷத்தில் …
Permanent link to this article: http://www.ommachi.net/archives/2423
திசை கண்டேன் டக்ளஸ் ஆடம்ஸ் கண்டேன்
சற்று தீவிர சண்டமாருத வாத்தியார் பக்தர்களோ இருதயம் பலஹீனமானவர்களோ இதற்குமேல் இதை படிக்கவேண்டாம். வாத்தியார் என்றால் சுஜாதாவா என்று டவுட் கேட்பவர்கள் நிச்சயம் படிக்கவேண்டாம். மற்றபடி கேளிக்கை இலக்கியங்களைப் பற்றி தமிழாங்கில மொழிச்சிதைவுகளினால் அனுபவக்கருத்துப்பரிமாறமுனையும் ஜாலி கட்டுரையே. பொதுஜன வாசிப்பிற்கு உகந்தது. சில மாதங்களுக்கு முன் பதிப்பக நண்பர் வாத்தியாரின் திசை கண்டேன் வான் கண்டேன் (இனி தி.க.வா.க.) விஞ்ஞானபுனைவை தங்கள் பதிப்பகம் மறுபதிப்பித்துள்ளதாகவும், அதில் வரும் ரோபோ (கதையின் 121 விண்வெளிக்கப்பல் உலகில் பாதுகாப்பாக இயங்க, …
Permanent link to this article: http://www.ommachi.net/archives/2412
தாரமங்கலம் கோவில் சிற்பங்கள்
சேலம் அருகிலுள்ள தாரமங்கலம் கைலாஸநாதர் திருக்கோவிலுக்கு சமீபத்தில் பௌர்ணமி அன்று சென்றுவந்தோம். அவ்வப்போது சுற்றிலும் கையூட்டு நிமித்தம் கேமிரா கையை யாராவது பிடிக்கிறார்களா என்று நோட்டம்விட்டபடியே கைக்கேமிராவில் க்ளிக்கிய உலகப்பிரசித்திபெற்ற கோவில் சிற்பங்கள் கீழே தொகுப்பாய் கொடுத்துள்ளேன். என்சாய்.
Permanent link to this article: http://www.ommachi.net/archives/2410
ராகம் தானம் பல்லவி – பாகம் 8
சென்ற கட்டுரையின் முடிவில் ரா.தா.ப. உருப்பிடியில், கச்சேரியில், பல்லவியின் நிரவலுக்கு பின் ஸ்வரகல்பனை (கற்பனைத்திறனுக்கேற்ப ராகத்தில் ஸ்வரக்கோர்வைகளாக பாடுவது) செய்வார்கள் என்று குறிப்பிட்டிருந்தேன். இதில் திருத்தம். அதாவது, அனுலோமம் பிரதிலோமம் என்று இக்கட்டுரையில் விவரிக்கப்போகும் அங்கத்தை மேடையில் பல்லவி பாடுகையில் ஒதுக்கிவிடும் பாடகர்களே, நிரவலுக்கு பின் நேரடியாக ஸ்வரகல்பனைக்கு செல்வர். தேர்ந்த பாடகர் ரா.தா.ப.வில் எடுத்துக்கொண்ட பல்லவியில் அனுலோமம் பிரதிலோமம் செய்த பிறகே ஸ்வரகல்பனை அங்கத்திற்கு செல்வார். அனுலோமம் பிரதிலோமம் பற்றி நிறைய வீடியோ டெமோக்களுடன் சமீபத்திய சொல்வனம் …
Permanent link to this article: http://www.ommachi.net/archives/2406
ராகம் தானம் பல்லவி – பாகம் 7
கர்நாடகசங்கீதத்தில் நிரவல் (தெலுங்கில் நெரவு) என்றால் நிரப்புதல், பரப்புதல், பல்கிப்பெருக்குதல் போன்ற அர்த்தங்கள் தொனிக்கும். நிரப்புதல் என்கிற தமிழ் அர்த்தத்திலேயே இதை அணுகலாம். கீர்த்தனையை, பாடலை, கெடச்ச gapப்பில் இசையால் கொட்டி நிரப்புதல் என்று அறிமுகவிளக்கமாக கொள்ளலாம். ஒரு ஐடியாவை பலவகைகளிலும் குலுக்கி புரட்டிப்போட்டு அலசும் மனித மனதின் செயல்பாட்டின் இசைவழி வெளிப்பாடாகவும் பார்க்கலாம். பாடலின் ஒரு வரியை, சாஹித்தியத்தை, எடுத்துக்கொண்டு, அதை நீட்டி, முழக்கி, புரட்டி, சுருக்கி, ராகத்தின் ஸ்வரூபத்தை, பரிமாணங்களை, அந்த வரி வடிக்கப்பட்டிருக்கும் …
Permanent link to this article: http://www.ommachi.net/archives/2405
ராகம் தானம் பல்லவி – பாகம் 6
சென்ற பாகத்தின் இறுதியில் மேற்கத்திய செவ்வியல் இசையில் முக்கியமான அங்கமாய் இடம்பேறாத, கர்நாடக சங்கீதத்தில் முக்கியமான கற்பனைத்திறன் வெளிப்பாடாய் தோன்றும் அங்கம் நிரவல் என்றோம். ஆனால் அந்த இசையில்தான் இதைசெய்யவேண்டும் என்று கட்டாயமில்லை. நிரவல் பற்றி விளக்கும் முன் அதன் முன்கதைசுருக்கமான சங்கதி என்பதின் சங்கதியை ஓரளவு இங்கு சொல்வோம். சங்கதி என்னவென்று விளக்குவதற்கு முன் இப்பாடலை முழுவதும் கேளுங்கள். மன்னவன் வந்தானடி. http://www.youtube.com/watch?v=5-y-J9Pabq8 பாடலின் முடியும் தருணங்களில் பல்லவி “மன்னவன் வந்தானடி தோழி” என்பதை பலவிதங்களில் …
Permanent link to this article: http://www.ommachi.net/archives/2402
ராகம் தானம் பல்லவி – பாகம் 5
சென்ற நான்காகவது பாகக் கட்டுரையில் குறிப்பிட்டதுபோல சதுர்ராகமாலிகை பல்லவி ரிப்பீட்டு. சங்கராபரணனை அழைத்தோடி வாடி கல்யாணி தர்பாருக்கு சென்ற பாகங்களில் விளக்கியுள்ள சங்கீத வார்த்தைகளை நினைவில் கொண்டு, சென்ற பாகம் தொடக்கத்தில் நீங்கள் என்னை அடிக்க வரும்முன் நான் குறிப்பிட்ட கீழ்வரும் பத்தியை இப்போது மீண்டும் படித்துப்பாருங்கள். இந்த ராட்டை பல்லவி சதுஸ்ர ஜாதி திரிபுடை (ஆதி) தாளத்தில், சதுஸ்ர நடையில், இரண்டு ஆவர்த்தத்தில், இரண்டு களை சௌக்கத்தில், அமைக்கப்பட்டு, சமத்தில் இருந்து முக்கால் இடம் தள்ளி …
Permanent link to this article: http://www.ommachi.net/archives/2394
ராகம் தானம் பல்லவி – பாகம் 4
ராகம், தானம், பல்லவி வரலாறு சாஹித்யம் செய்முறை என்று இதுவரை ஓரளவு எழுதியுள்ளோம். இங்கு ஒரு சற்று கடினமான பல்லவி அறிமுகப்படுத்துவோம். பல்லவியை இந்த, அடுத்த பாகங்களில் முழுவதும் பிரித்து விளக்குகையில் மேலும் பல விஷயங்களை பகிர்ந்துகொள்ளமுடியும். ஏன் இப்படி தடாலடியாக கடினமான பல்லவி என்றால், நமக்கு (எனக்கு) நீச்சல் கத்துகரதுன்னா தொபுகடீர் என்று குதித்து அப்படி இப்படி கையை காலை உதறி, வாய் மூக்கு நிறைய தண்ணீர் குடித்து, புகுந்து புறப்பட்டு, மூச்சு முட்டி, உயிரே …
Permanent link to this article: http://www.ommachi.net/archives/2391
ராகம் தானம் பல்லவி – பாகம் 3
ராகம் தானம் ஆயிற்று. இப்பாகத்தில் பல்லவி பற்றி அறிமுகம். தொடங்கும்முன் அறிமுகத்திற்காகவே இக்கட்டுரைகளை படிப்பவர்களுக்கு ஒரு வார்னிங். பல்லவிக்கு நேரடியாக பல சம்பந்தமில்லா விஷயங்களை சொல்வதுபோல் முதலில் தோன்றும். ஆனால் இவைகளை ஒரளவு அறிமுகம் செய்துகொண்டால்தான் பல்லவியின் உன்னத கட்டுக்கோப்பை கோடிகாட்டலாம். புரிந்து ரசிக்கலாம். அநேகமாக கட்டுரையின் அடுத்த இரு பாகங்களுக்குள் அனைத்தையும் ஒருங்கிணைத்துவிடுவேன். அதேபோல் அன்பர்கள் கேட்டதில் ஓரிரு கேள்விகளுக்கு இங்கு பதில் கூறவில்லை (சிலவற்றிற்கு கட்டுரையினூடே கூறியுள்ளேன்). அடுத்த பாகம்வரை பொறுத்திருங்கள். ஆங்காங்கே புரியவில்லையென்றால் …
Permanent link to this article: http://www.ommachi.net/archives/2389



















