Sorry, but you are looking for something that isn't here. Wanna try a search?
ராகம் தானம் பல்லவி – பாகம் 3
ராகம் தானம் ஆயிற்று. இப்பாகத்தில் பல்லவி பற்றி அறிமுகம். தொடங்கும்முன் அறிமுகத்திற்காகவே இக்கட்டுரைகளை படிப்பவர்களுக்கு ஒரு வார்னிங். பல்லவிக்கு நேரடியாக பல சம்பந்தமில்லா விஷயங்களை சொல்வதுபோல் முதலில் தோன்றும். ஆனால் இவைகளை ஒரளவு அறிமுகம் செய்துகொண்டால்தான் பல்லவியின் உன்னத கட்டுக்கோப்பை கோடிகாட்டலாம். புரிந்து ரசிக்கலாம். அநேகமாக கட்டுரையின் அடுத்த இரு பாகங்களுக்குள் அனைத்தையும் ஒருங்கிணைத்துவிடுவேன். அதேபோல் அன்பர்கள் கேட்டதில் ஓரிரு கேள்விகளுக்கு இங்கு பதில் கூறவில்லை (சிலவற்றிற்கு கட்டுரையினூடே கூறியுள்ளேன்). அடுத்த பாகம்வரை பொறுத்திருங்கள். ஆங்காங்கே புரியவில்லையென்றால் …
View full postதாரமங்கலம் கோவில் சிற்பங்கள்
சேலம் அருகிலுள்ள தாரமங்கலம் கைலாஸநாதர் திருக்கோவிலுக்கு சமீபத்தில் பௌர்ணமி அன்று சென்றுவந்தோம். அவ்வப்போது சுற்றிலும் கையூட்டு நிமித்தம் கேமிரா கையை யாராவது பிடிக்கிறார்களா என்று நோட்டம்விட்டபடியே கைக்கேமிராவில் க்ளிக்கிய உலகப்பிரசித்திபெற்ற கோவில் சிற்பங்கள் கீழே தொகுப்பாய் கொடுத்துள்ளேன். என்சாய்.
View full postமுடிந்தால் சிரியுங்கள்
ரெட்டை வால் ரெங்குடு என்ற சிறுவன் கார்டூணிஸ்ட் மதனின் முக்கிய ஹாஸ்ய படைப்புகளில் ஒன்று. தமிழ்நாட்டு கால்வின் என்று கொள்ளலாம். புது வருடத்தை முன்னிட்டு சொந்தமாக நிறைய படம் வரைவது என்று முடிவு செய்து, ரெங்குடுவின் தாக்கத்தில் நான் வரைந்த இரண்டு படங்கள் இதோ. ஜோக் என்னுடையதுதான். முடிந்தால் சிரியுங்கள்.
View full postஏலியன்ஸ் தேடல், பேய், பிசாசு: அறிவியலா புரட்டா
ஏலியன்ஸ் – அந்நியர்கள், வேற்றுகிரகவாசிகள், வளி-அறிவு-ஜீவராசிகள் – பற்றி சென்றவருடம் நிறைய எழுதிவந்தோம். மீண்டும் தொடர்வோம். இங்கு ஏலியன்ஸ் டாப்பிக்கில் நம் அனைவருக்கும் எழும் ஆதார கேள்வி ஒன்றை விவாதிப்போம். உலகில் சாமான்யர் இதுவரை பார்த்திராத ஏலியன்ஸ், வளி-அறிவு-ஜீவராசிகளை இருப்பதாய் ஏன் நம்பலாம்? எந்தவிதத்திலும் எவ்வகை தேடலுக்கும் இதுவரை தென்படாத இவர்கள் இருப்பதாய் மட்டும் ஏன் நம்பவேண்டும்? அறிவியல் சிந்தைக்கே ஒவ்வாத செயலாய் படுகிறதே. அப்படிப் பார்த்தால் பேய் பிசாசு இருப்பதாய் நம்மில் பலர் நம்புகிறோமே. அதை …
View full postஸமாஜத்தில் சங்கீதம்
நேற்று ஸமாஜத்தில் கர்னாடக இசைக் கச்சேரி கேட்க விதிக்கப்பெற்றேன். ஸமாஜம் என்றால், தியாகராஜ ஸங்கீத வித்வத் ஸமாஜம். மைலாபூரில் உள்ளது. இதை சென்றடைவதே ஒரு கலாச்சாரங்களின் தாக்கத்தில் அமையும் பயணம். என் வீட்டில் இருந்து ஐ.டி. நிறுவனங்களின் உறைவிடமான டைடெல் பார்க்கின் சமீபத்தால் எந்நேரமும் நெரிசலாக இருக்கும் சர்தார் பட்டேல் ரோடில் பயணித்து, சென்ற நூற்றாண்டின் சிறந்த சீர்திருத்தவாதிகளில் ஒருவரான ஸ்ரீராமக்கிருஷ்ண பரமஹம்ஸரினால் ஸ்தாபிக்கப்பட்ட மடத்திற்கு அழைத்துச்செல்வதால் பெயர்பெற்ற, ஆர். கே. மட் ரோடில் திரும்பி, முகலாயர்களின் …
View full postகர்நாடக சங்கீத வருங்கால நட்சத்திர நம்பி(க்கை)கள்
[சொல்வனம் இணையைதழில் வெளியாகியுள்ள என் கட்டுரையின் மீள்பிரசுரம்] “இஃப் மை மியூஸிக் இஸ் லௌட், யூ ஆர் ஓல்ட்” என்று மார்பிலுறையும் வாசகங்களுடன், கையில் மான்முத்திரை அபிநயித்தபடி, விளையாட்டுகளில் கழியவேண்டிய அன்றைய களிவெறியை “ப்ரோ-ஷோ” கோஷ்டிகாண பேரிரைச்சலில் கரைத்து, ஒரே இரவில் இன்றைய இளைஞர்கள் பலர் தன்னிறைவடைகின்றனர். கொலவெறி எனும் சொல்லாடலை ஆறுமாதத்திற்கு தமிழ்நாட்டில் எவரும் உபயோகிக்கக்கூடாது என்று பப்ளிக் இண்ட்ரஸ்ட் லிட்டிகேஷன் போடுமளவிற்கு திரையிசையில் தங்கள் இயலாமையை வெளிப்படுத்தியே இளைஞர்கள் ஒரே மெட்டில் பிரபலமாகிவிடுகின்றனர். இக்கட்டுரை, …
View full postநேனோ ஓவியம் அறிவியலை வளர்க்காது
தாஜ்மஹால் பார்த்திருக்கிறோம். அரிசியில் தாஜ்மஹால் பார்த்திருக்கிறோம். கலைஅரிசி என்று மைக்கேல்மதனகாமராஜனில் கிரேசிமோஹனால் சிலாகிக்கப்பட்ட ஓவியக்கலை. பார்க்க பூதக்கண்ணாடி வேண்டும். அந்த ஓவியங்களையும்விட சிறிதான, நேனோ ஓவியங்கள் பார்த்திருக்கிறீர்களா. ஒரு சாம்பிள் பாருங்கள்.
View full postராகம் தானம் பல்லவி – 5: எடுப்பும் சங்கதியும்
[சொல்வனம் இணையைதழில் வெளியாகியுள்ள என் ராகம் தானம் பல்லவி பாகம் 5 பற்றிய அறிமுக பதிவு + சில விளக்கங்கள். மொத்த கட்டுரையை அங்கு படித்துக்கொள்ளுங்கள்.] ராகம் தானம் பல்லவியை இக்கட்டுரைத்தொடர் மூலம் படித்த பல வாசகர்களுக்கு ஊட்டியிலேயே குளிர்விட்டுப்போனதாம். தாளங்கள் பற்றிய சிறு விளக்கம், இசையார்வமுள்ளவர் வழியாக சமீபத்திய விகடன் பக்கங்கள்வரை மாறுவேடத்தில் பொதுஜனத்தை அடைந்துள்ளதாம். தொடர்ந்து எழுதமுடியாமல் இடையில் ஒரு மாதத்திற்கு தடை ஏற்பட்டதிற்கு காரணம் ஜஸ்ட் வேலைபளு + வேறு நிமித்தங்கள் (ஏலியன்ஸ் …
View full postசுவர்களுடன் பேசியவள், ஆனால்…
ஒரு ஊரில் ஒரு மாமியார் வாழ்ந்தாள். ஆனால் அவள் குறைகளை யாரிடமும் சொல்லமுடிவதில்லை. அவளுக்கு இரண்டு மாட்டுப்பெண்கள். இரண்டு பிள்ளைகள். இரண்டு கைகள். இரண்டு கால்கள். ஆனால் மொத்தம் இருபத்தியொரு விரல்கள். மாட்டுப்பெண்கள் அவளை படுத்தினர். பிள்ளைகள் உதாசீனப்படுத்தினர். ஆனால் அவள் நான்கு வைர மோதிரங்கள் அணிந்திருந்தாள். கணவன் இருந்த காலங்களில் ஊரில் கோப்யமாக வாழ்ந்தவள் வாயைத்திறந்து பிறரிடம் குறைபட்டுக்கொள்வதே தெரியாது. ஆனால் அவள் மறுமணம் புரிந்துகொள்ளவில்லை.
View full postடர்புலன்ஸ் ஒரு அறிமுகம் – பாகம் 1
டர்புலன்ஸ் என்ற ஆங்கில வார்த்தையை உச்சரித்ததும் மனக்கண்முன் பல குழப்பங்கள் படமாகத் வந்துபோகலாம் – நுரைபொங்கும் காவிரி, அலைமோதும் கடல், சுழன்றடிக்கும் புயல், நிசப்த நட்சத்திர வெடிப்பு, கலர் நொடிக் கனவுகள், வளையல் குலுங்கும் கலிடாஸ்கோப், பனகல் பார்க் டிராஃபிக், தட்டாமாலை இப்படி. டர்புலன்ஸ் என்ற ஆங்கில வார்த்தைக்கு குழப்பம் என்று பொருள்கொள்ளலாம்தானே. ஆனால் அறிவியலில், குறிப்பாக இயற்பியலின் ஒரு பகுதியாக நாம் வகுத்திருக்கும் திரவ-இயற்பியலில், டர்புலன்ஸ் என்றால் வேறு. சற்று ஆர்கனைஸ்டு குழப்பம். இந்த விஷயத்தை …
View full postNot found
அறிவியல்
- வண்ணத்துபூச்சியின் நிறமற்ற வானவில்
- ஏன் பல்லி கொன்றீரய்யா
- தொட்டால் தொடுதிரை பூ மலரும்
- தாமரை இலையும் மகா நீரொட்டா பரப்புகளும்
- இயற்கையின் நேனொடெக்னாலஜி
- வாட்டர் பாட்டில் சூரிய விளக்குகள்
- 2011 வேதியியல் நோபல் பரிசு
- 2011 இயற்பியல் நோபல் பரிசு
- டைஸன் உருளையும் மட்ரியோஷ்கா மூளையும்
- ஏலியன்ஸ் மேஜிக்கும் கர்டஷாவ் அளவையும்
ஏலியன்ஸ்
- An error has occurred; the feed is probably down. Try again later.





