முதல் டிகாக்ஷனில் இறக்கி காய்ச்சிய பாலில் (அம்மா) கலந்த டிகிரி காப்பியை வீட்டில் தூக்க கலக்கத்துடன் பேப்பர் படித்துக்கொண்டே உறிஞ்சி குடிக்கையில் யோசித்திருக்கலாம். சந்திரயான் வெற்றிக்கு பிறகு இந்தியர்களை விரைவில் நிலவிலும் செவ்வாயிலும் அனுப்பமுடியும் என்று கூறுகிறார்களே. அங்கு சென்றால் நம் சிவசாமி இந்த காப்பியை எப்படி குடிப்பார் என்று. குடிப்பது சற்று கடினம். ஏனெனில் திரவம் குவளையை சாய்க்கையில் உட்சுவரை பிடித்துகொண்டு வாயை நோக்கி தானாகவே ஓடி வருவதெல்லாம் பூமியில்தான். அதன் புவியீர்ப்பு சக்தியினால். அண்டவெளியில், …
Permanent link to this article: http://www.ommachi.net/archives/210
மருந்தீஸ்வரர் கோயிலில் போரோமியன் வளையங்கள்
போரோமியன் வளையங்கள் என்று கணக்கில், நாட் தியரியில் (knot theory) ஒரு விஷயம் உள்ளது. மூன்று வளையங்களை ஒன்றோடு ஒன்று படத்தில் உள்ளது போல் சேர்த்தால் கிடைப்பது போரோமியன் வளையங்கள். விசேஷம் என்னவென்றால், இரண்டிரண்டாக பார்க்கையில் வளையங்கள் ஒன்றின் மேல் ஒன்றாக தனித்தனியே இருக்கும். சுலபமாக பிரித்து எடுத்துவிடலாம். படத்தில் உள்ளது போல மூன்றாக, முடிச்சாக, சேர்த்து பார்க்கையில் அவ்வாறு செய்யமுடியாது. உதாரணத்திற்கு, படத்தில் சிவப்பு வளையம் இல்லை என்றால், மஞ்சள் மற்றும் நீல நிற வளையங்கள் …
Permanent link to this article: http://www.ommachi.net/archives/209
2008 சங்கீத சீசனின் பெஸ்ட் – என் பட்டியல்
மெட்ராஸ் மியூசிக் சீசன் என்பது ஒரு மாதத்திற்கும் மேல் நடக்கும் விஷயம். இதை எழுதுகையில் முடிவை நோக்கி நிறைய தொண்டை செருமல்களுடன் இன்னமும் நடந்து கொண்டிருக்கிறது. பத்து பதினைந்து சபாக்கள் நாளைக்கு ஐந்து கச்சேரி விதம், பத்திலிருந்து இருபது நாள் வரை கூடி சென்னையின் பல இடங்களில் நடத்துகையில் சீசனில் மொத்தம் ஆயிரம் கச்சேரிகளுக்கு மேல் நடந்திருக்கும். அவற்றில் நான் கேட்டது முப்பத்தியைந்து; மொத்தத்தில் ஐந்து சதவீதத்திற்கும் குறைவான சொற்பமே. என் சிறிய இசை காதுகளை நம்பி …
Permanent link to this article: http://www.ommachi.net/archives/1465
2008 டிசம்பர் மியூசிக் சீசன் கச்சேரி பட்டியல்
சென்னையின் (ஒரே) ஒரு USP, டிசம்பரில் சீசன் கச்சேரிகள். 2008-2009 டிசம்பர்-ஜனவரி சங்கீத சீசனில் நான் சென்று வந்த, கேட்ட, இசை கச்சேரிகள் பட்டியல் கீழே, சுருக்கமான விமர்சனங்களுடன். இவற்றில் ஒரு பெஸ்ட் பட்டியல் அடுத்த பதிவில்.
Permanent link to this article: http://www.ommachi.net/archives/1456
முடிந்தால் சிரியுங்கள்
ரெட்டை வால் ரெங்குடு என்ற சிறுவன் கார்டூணிஸ்ட் மதனின் முக்கிய ஹாஸ்ய படைப்புகளில் ஒன்று. தமிழ்நாட்டு கால்வின் என்று கொள்ளலாம். புது வருடத்தை முன்னிட்டு சொந்தமாக நிறைய படம் வரைவது என்று முடிவு செய்து, ரெங்குடுவின் தாக்கத்தில் நான் வரைந்த இரண்டு படங்கள் இதோ. ஜோக் என்னுடையதுதான். முடிந்தால் சிரியுங்கள்.
Permanent link to this article: http://www.ommachi.net/archives/1438
வசுந்த்ரா ராஜகோபால் கச்சேரிகள்
அவரது பூர்வீகம் ஸ்ரீரங்கமாக இருந்தாலும், இரண்டு வருடம் முன்பு மியூசிக் அகதெமியில் அவர் செய்த ஹுசேனி ஆலாபனையே எனக்கு வசுந்த்ரா ராஜகோபாலின் இசையின் மீது ஒரு உடனடி மரியாதையை வரவழைத்தது. நிரந்தரமாக. தேன்குழல் போல கரைகின்ற குரல், ஜிகினாத்தனம் இல்லாத பாரம்பர்ய இசை, கீர்தனைகளில் வார்த்தை தெளிவு, ஆரவாரமில்லாத அழகிய நிரவல், மாங்காய் ஊறுகாய் போல தேவையான அளவு கணக்கு வழக்குகள் சேர்த்து மனோதர்மத்துடன் வரும் ஸ்வரப்ரஸ்தாரங்கள், வழுவற்ற விறுவிறுப்பு, வீணற்ற வகைகள், வசுந்த்ராவின் கச்சேரிகள் ஒரு …
Permanent link to this article: http://www.ommachi.net/archives/1426
சந்திரயான்
சந்திரயான் ஒரு நினைவாகிக்கொண்டிருக்கும் இந்திய கனவு. சந்திரயான் நினைவுகளை மறக்க இந்தியா மிதந்துகொண்டிருக்கும் கனவு. இப்படி இரண்டுவிதமாகவும் இதை பற்றி விவாதிக்க முடியும். வேறு ஒரு சமயம் செய்வோம். எனெனில், அனைத்தும் சரியாக சென்றால், இன்னும் சில மணி நேரங்களில் PSLV -CII ராக்கெட் சீஹரிகோட்டாவிலுள்ள சதீஷ் தாவன் ஸ்பேஸ் ஸ்டேஷனில் இருந்து சந்திரயானுடன் இந்தியாவின் பெருமையையும் சேர்த்து உயரே சந்திரனை நோக்கி எடுத்து கிளம்பிவிடும். [Update Oct 22, 2008: சந்திரயான் வெற்றிகரமாக ஏவப்பட்டுவிட்டது | …
Permanent link to this article: http://www.ommachi.net/archives/1384
Whale வேல்
குசினியறையில் வேலையாய் இருந்த மனைவிக்கு உபயோகமாய் அவளை உற்சாகப்படுத்திக்கொண்டு நான் சும்மா இருந்துகொண்டிருந்தேன். அப்பொழுதுதான் ஒரு வேல் ஷார்க் (Whale Shark திமிங்கலம்) படத்தை யங் வேர்ல்டிலிருந்து கனகாரியமாய் வெட்டி மகளின் நோட்டுப்புத்தகத்தில் ஒட்டியிருந்தோம். அவள்: நா கடலுக்கு அடீல போப்போறே(ன்), வேல் ஷார்க ஃபோட்டோ பிடிக்க; நீ கிடயாது… நான்: (கடுப்பாகி) ஓகே; நா பழனிக்கு போறேன் முருகர பாக்க; அவர்கிட்ட கூட ஒரு வேல் இருக்கு; அத பாத்துக்கறேன்…
Permanent link to this article: http://www.ommachi.net/archives/1371
வஸந்தாவில் ட்விங்கில் ட்விங்கில்
இதை கேட்கையில் பல வருடம் முன்ப்பு கமல்ஹாஸன் டி.வி. பேட்டி ஒன்றில் பாலும் பழமும் கைகளில் ஏந்தி என்ற பாடல் வரியை மட்டும் முழு டியூனுக்கும் பாடிக்காட்டியது நினைவிற்கு வருகிறது. (சுட்டி) முதல் ராகம் வஸந்தா. இரண்டாவது, கேதார கௌளை. (மலையாளத்து சாயலில் உள்ள) மூன்றாவது சட்டென்று பிடிபட மறுக்கிறது. பாடுபவர் ரேவதி ஷங்கரன்; சிறிது காலமே எடிட்டராக இருந்தாலும், மங்கையர் மலரின் உள்ளடக்கத்தையும், (அதன் மூலம்) பெண்களின் சுயகவுரவத்தையும் உயர்த்தியவர். இப்போது அது மீண்டும் புளிக்காய்ச்சல் …
Permanent link to this article: http://www.ommachi.net/archives/1366
நாகஸ்வரத்தில் நீலமணி
நாகஸ்வரத்தில் நீலமணி ராகம் கேட்டிருக்கிறீர்களா. இரண்டு வருடம் முன்பு மைலை கேசவ பெருமாள் கோயிலில், வாத்தியம் வாசிப்பவரின் சம்மதத்துடன், நான் செய்த ஒரு சிறிய ரெகார்டிங்கை கேட்டுப்பாருங்கள்: அதே வாத்தியத்தில், இன்னொரு சிறிய காபி ராகம் ஆலாபனை: சம்பந்தப்பட்ட அனுபவத்தை சௌம்யா கச்சேரியும் நீலமணி ஆலாபனையும் என்ற கட்டுரையில் எழுதியுள்ளேன்.
Permanent link to this article: http://www.ommachi.net/archives/1332
தசாவதாரமும் கெயாஸ் தியரியும்
தசவதாரத்தை பற்றி பக்கத்து ப்ளாகில் புழங்கும் நாய்குட்டிவரை அனைவரும் விமர்சித்தாகிவிட்டது. நூறாவது நாள் விழாவில் கமல் சொல்வதை பிரித்தெடுக்க தயாராகி வருகையில் சாவதானமாக இன்னொரு விமர்சனக் கட்டுரையா என்றால், படத்தை இப்பொதாங்க நான் பார்த்தேன். இன்னமும் ஓடிக்கொண்டிருப்பதே இந்த கமல் படத்தின் வெற்றி. பலர் தொடாமல் விட்ட சிலதைமட்டும் குறிப்பிடுகிறேன். முதலில் கெயாஸ் தியரி.
Permanent link to this article: http://www.ommachi.net/archives/157
இளம் பேராசிரியர்கள் கூறும் டாப் ட்வென்டி பொய்கள்
சற்று ஹாஸ்யமாக யோசித்தால், இந்தியாவில் தொழில்நுட்ப ஆராய்ச்சியை வேலையில் ஒரு பகுதியாக கொண்ட ஸ்தாபனங்களில் வேலை செய்யும் இளவயது ஆசிரியர்கள் கூறும் டாப் ட்வென்டி பொய்கள் வருமாறு
Permanent link to this article: http://www.ommachi.net/archives/55
Permanent link to this article: http://www.ommachi.net/archives/54
காள காள அபத்த காள
காளை என்று எழுதி காள என்று ஐகாரக்குறுக்கத்துடன் படிக்கவேண்டிய ஒரு படத்தை நண்பருடன் நைட்ஷோ சென்று பார்த்து கண் (நிலா), காது (ஒரே சத்தம்), தொண்டை (கோலா), மனம் புண்பட்டுக்கொண்டேன்.
Permanent link to this article: http://www.ommachi.net/archives/42
ஹைக்கூவும் பொய்க்கூவும்
சுஜாதா எழுதிய ஹைக்கூ ஒரு புதிய அறிமுகம் (உயிர்மை பதிப்பு) என்ற புத்தகத்தை படித்ததில் ஜப்பானிய ஹைக்கூ கவிஞர்களை பற்றியும், ஜப்பானிய கவிதைகளின் இலக்கணங்களையும், அவைகளின் தமிழோடு உள்ள ஒற்றுமை வேற்றுமைகளையும் அறிமுக நிலையில் புரிந்துகொள்ளமுடிந்தது. ஹைக்கூ பற்றி குன்ஸாகத்தான் புரிந்தது. என் குறைதான். நிறைய பொய்க்கூக்களை இதுவரை படித்துவிட்டதனால் இருக்கலாம். புரிந்தவரை விளக்குகிறேன் (உண்மையில், நான் புரிந்துகொள்ளவே விளக்குகிறேன்).
Permanent link to this article: http://www.ommachi.net/archives/41







