இவ்வாறாக சுஜாதா எனும் புணைவன், வணிகசபையை வணங்கி, விஷ்ணுபுரத்தின் அறிமுகத்தை தொன்னூறுகளின் இறுதியில் கூறிமுடித்ததும், சபையோர் பலர் காசைத் திருப்பிக்கேட்டார்கள்.
ஆதியில் ஒரு சொல் இருந்தது. அதற்கு விஷ்ணுபுரம் என்று பெயர்.
இப்டி உம்பர்ட்டோ ஈக்கோ கூட ஒரு புத்தகத்த என்பதுகளில் தொடங்கியுள்ளார் மகளே. தி நேம் ஆஃப் தி ரோஸ். ஒரிஜினல் இத்தாலி மொழில. நான் படிச்சது ஆங்கில வெர்ஷன்தான். உலக இலக்கியம்னாலே அப்டிதான். எந்த மொழில வேணா எழுதலாம். ஆனா இங்கிலிஷ்லதான் படிக்கமுடியும். “இன் தி பிகினிங் வாஸ் தி வேர்ட். அண்ட் தி வேர்ட் வாஸ் வித் காட்; அண்ட் தி வேர்ட் இஸ் காட்” அப்டீன்னு தொடங்குவார் ஈக்கோ. அந்த வாக்கியம் எங்கேருந்து வருதுன்னு தெரியுமா உனக்கு? தெரிஞ்சா விஷ்ணுபுரம் மெள்ள புரியும். பைபிள் தெரியுமா? அதுல ஜெனிஸிஸ் சாப்ட்டர்ல…
விஷ்ணுபுரத்தின் அறிமுகத்தை அருண் எனும் தமிழிலக்கியமீதி சொல்ல ஆரம்பித்தான்.
» Read more..

இணையமும் அதில் வலைப்பூக்களும் பூத்துக்குலுங்கும் காலத்திற்கு முந்தைய ஒரு பிராயத்தில் புத்தக புழுவில்லையாகினும், பூச்சியாயிருந்தேன். படித்த புத்தகங்களை ஒரு குயர் கோடுபோட்ட நோட்புக்கில் பட்டியலிட்டேன். பத்து வருடமாக பட்டியலிட்டதில், என்னிடம் உள்ள புத்தகங்கள் என்றில்லாமல், அக்கம்பக்கத்தில் ஓசியில் படித்தவை என சுமார் ஐநூறு புத்தகங்கள் தேறியது. புனைவு, வினவு, அறிவியல், அவியல், என பலசரக்கு தலைப்புகள் பட்டியலில் அடக்கம். எதற்கு இந்த சுய விளம்பரப் பட்டியல் என்று தெரியவில்லை; கேர்ள்பிரண்ட்ஸ்களிடம்கூட காட்ட எத்தனித்ததில்லை. டூ விட்டுவிடுவார்களோ என்று பயம்.
சற்று தீவிர சண்டமாருத வாத்தியார் பக்தர்களோ இருதயம் பலஹீனமானவர்களோ இதற்குமேல் இதை படிக்கவேண்டாம். வாத்தியார் என்றால் சுஜாதாவா என்று டவுட் கேட்பவர்கள் நிச்சயம் படிக்கவேண்டாம். மற்றபடி கேளிக்கை இலக்கியங்களைப் பற்றி தமிழாங்கில மொழிச்சிதைவுகளினால் அனுபவக்கருத்துப்பரிமாறமுனையும் ஜாலி கட்டுரையே. பொதுஜன வாசிப்பிற்கு உகந்தது.






