Category Archive: நகைச்சுவை

விஷ்ணுபுரம் அறிமுகம்

இவ்வாறாக சுஜாதா எனும் புணைவன், வணிகசபையை வணங்கி, விஷ்ணுபுரத்தின் அறிமுகத்தை தொன்னூறுகளின் இறுதியில் கூறிமுடித்ததும், சபையோர் பலர் காசைத் திருப்பிக்கேட்டார்கள். ஆதியில் ஒரு சொல் இருந்தது. அதற்கு விஷ்ணுபுரம் என்று பெயர். இப்டி உம்பர்ட்டோ ஈக்கோ கூட ஒரு புத்தகத்த என்பதுகளில் தொடங்கியுள்ளார் மகளே. தி நேம் ஆஃப் தி ரோஸ். ஒரிஜினல் இத்தாலி மொழில. நான் படிச்சது ஆங்கில வெர்ஷன்தான். உலக இலக்கியம்னாலே அப்டிதான். எந்த மொழில வேணா எழுதலாம். ஆனா இங்கிலிஷ்லதான் படிக்கமுடியும். “இன் …

Continue reading »

Permanent link to this article: http://www.ommachi.net/archives/3473

இயல் இசை ஆடை

தோடியில் ஒலிக்கும் தொண்டை செருமல்களுடன் வணக்கம் கூறி விடைபெற்றுக்கொண்டிருக்கும் 2011 சென்னை இசைவிழாவிலும், அடுத்து எழுத்தாளர்களுக்கு வருடத்திற்கு ஒருமுறை மட்டும் மெகா சைஸ் கட்டவுட்டுகள் வைத்து தடுத்தாட்கொள்ளும் 2012 சென்னை புத்தகக் காட்சிவிழாவிலும் என்னைக் கவர்ந்தது, கர்நாடக இசை, தமிழ் சார்ந்த வாசகங்களுடன் வெளிவந்துள்ள டி-ஷர்ட்கள். புத்தகக் காட்சியில் அரங்கின் நுழைவாயிலிற்கு எதிர் கோடியில் தமிழ் வாசக டி-ஷர்ட்டுகள் நல்ல விற்பனை. பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும், ஆதலினால் காதல் செய்வீர், நாம் யார்க்கும் குடிமை அல்லோம், நமனை …

Continue reading »

Permanent link to this article: http://www.ommachi.net/archives/3434

ஆடு பாம்பே

மாலையில் வாக்கிங் போகலாம் என்று வீட்டிலிருந்து இறங்குகையில் இல்லாள்தான் முதலில் பார்த்தாள் இந்த ஆடும் பாம்புகளை. நிச்சயம் கடிபடாமல் வெற்றியுடன் புறமுதுகிட்டு ஓடிவந்துவிடலாம் என்கிற தூரத்தில் இருந்தபடி, கையில் செல்போனுடன் உயிரையும் பிடித்தபடி, சார் எடுத்த சாரைப்பாம்புகளின் பாலே வீடியோ கீழே. வீடியோவின் ஆட்டம் கையினால் மட்டுமல்ல. வீடியோ நடுவில் கேட்கும் ஆடியோ ”செக்யூரிட்டிய கூப்டு” என்கிற அய்யாவின் தீரமான உறுமலே.

Permanent link to this article: http://www.ommachi.net/archives/1881

டுவிட்டர் குறள்கள்

திருக்குறளுக்குத்தான் எத்தனை பிரேமை தமிழ்கூறும் இணையுலகில். பத்தாவது பப்ளிக் எக்ஸாமில் அதிக மார்க் வாங்கவேண்டுமென்று பிற மொழிக்காக ஒன்றாவதிலிருந்தே தமிழை ஒதுக்காமல் பள்ளியில் ஒருபாடமாக படிக்கும் அநேகருக்கு முதல் மனப்பாடப்பகுதி குறள்தான். தமிழ் மத்தியமர் பலரின் முதல் இலக்கிய பகடியும் அங்குதான் தொடங்குகிறது. அகர முதல எழுத்தெல்லாம் தகர ஸ்லேட்டில் எழுத வேண்டும் என்பதில் தொடங்கி, பெரியவர் ஆகி அலுவலகத்தில் டை கட்டி வாழ்வாரே வாழ்வார் மற்றவர் கைகட்டி பின் செல்வர் என்று நொந்துகொள்வது வரை குறள்தான் …

Continue reading »

Permanent link to this article: http://www.ommachi.net/archives/1776

கொளை கதை – பின்னுரை

கொளை கதையை தொடர்ந்து படித்த அனைவருக்கும் நன்றி. நேரில் இதுவரை பார்க்காமலே, டுவிட்டரில் கதையை எழுதத்தூண்டிய @narain இணையத்தில் படித்து அவ்வப்போது உற்சாகம் கொடுத்த @orupakkam @scanman @isr_selva @icarusprakash மற்றும் பலருக்கு நன்றி. சுயதம்பட்டம் என்று நினைக்காவிடில் ஒரு பின்னுரை. இது அப்ஸர்ட் ஜானரில் (absurd genre),  மல்டி லேயர், எனும் பல்படிமக் கதை. துப்பறியும் மனித கொலைகள், தமிழ் கொளைகல், எழுத்து க்ளீஷே-கொலைகள், (அறிவியல்) மொழியாக்க கொலகள், திரைப்பட கொலைகள், இப்படி பல படிமங்கள். …

Continue reading »

Permanent link to this article: http://www.ommachi.net/archives/1773

ஒரு கொளை கதை – பாகம் 12

கண்விழித்தபோது எட்டாம் நம்பர் வார்டே பெண்டத்தால், புஷ்பம் கலந்த  நாற்றமாய் இருந்தது. நாற்றம் என்றால் நறுமணம். கற்பூரம் நாறுமோ கமலப்பூ நாறுமோ நாச்சியார் திருமொழி வகை நாற்றம். டேப்பில் அபிராமி அந்தாதி. என்னடா குணமாக்குறதுக்கு பதில், குணாவாக்கிட்டான்களா… ஹலோ, மார்னிங்… அருகில் ரோஜா நாற்றத்தில் டாக்டர் சாகடிக்காத கோஷ். வாழ்வளிக்கும் கோஷ். இளமை ஜோஷ். தேவையான வாளிப்புகளை வெள்ளை ஏப்ரனில் மறைத்து, கழுத்தில் தங்க ஸ்டெத் தொங்க (கணவர் பம்மல் சம்பந்தம் கொடுத்ததாம்), இளமையாய் சிரித்து, முதுமையாய் …

Continue reading »

Permanent link to this article: http://www.ommachi.net/archives/1684

ஒரு கொளை கதை – பாகம் 11

சலூன் டி பாரீஸ். ஐந்து நட்சத்திர ராட்சஸகேளிக்கையின் வயிற்றில் முன்பசிக்காக கட்டிய லவுன்ஜில் அஜீரணமாய் இருக்கும் முடிதிருத்தகம். இங்கு அமர்ந்த திருக்கோலத்தில் பேச்சுலர் பலர். வீட்டில் பேச்சு இல்லாதவர். இதன் சலூனிஸ்ட் லோக்கல் பார்ட்டி. கத்திரியும் கையுமாக, முறுக்கான பாடி. முகத்தில் தாடி. நெற்றியில் பட்டை. கழுத்தில் ருத்திராக்‌ஷ கொட்டை. சலூனிஸ்ட் பேண்ட் போடுவான். ஜிப் போடுவான். சட்டை நடு இரண்டு பட்டன் மட்டும் போடுவான். மிச்ச சட்டையை கீழே முடிச்சுபோட்டிருப்பான். மேலே மார்ப்பின் உள்ளும் புறமும் …

Continue reading »

Permanent link to this article: http://www.ommachi.net/archives/1682

ஒரு கொளை கதை – பாகம் 10

வாங்ஸ் கிச்சன். வேண்டாத இடங்களில் பளீரென்று வெளிச்சங்கள். வேண்டிய இடங்களில் சுவற்றில் அழுக்கை மறைக்க. ஆங்கிலம் பேசும் சர்வரிடம் லொடபடவா ஒரு ப்ளேட் ஆனியன் ரிங்ஸ், ரெண்டு கப் காப்பி என்றான். நடந்த காரணம்புரியாத கொளைகலின் துப்பேதும் துலங்காமல் எனக்கு இருந்த வெறி லொடபடவாமேல் திரும்பியது. ஏண்டா, தமிழ் தமிழ்னு சொலினுகுர. ரெண்டு கப் காப்பிங்கற. ரெண்டு கப் காப்பிகள் அப்டினு சரியா சொல்லு. வாரினேன் அவனை. லொடபடவா கெட்டிக்காரன். அப்படியே பார்த்தாலும் ரெண்டு கப்கள் காப்பி …

Continue reading »

Permanent link to this article: http://www.ommachi.net/archives/1680

ஒரு கொளை கதை – பாகம் 9

ராச்சாண்டார் திருமலை இருட்டான பப்ளிக் நூலகம். இங்கு படித்து சிலர் மேதாவியாகி உள்ளனர். எம்பி பிஎஸ், எம்பி ஏ என்று தாவி தாவி ஆன மே(ல்)தாவி. பலர் இன்னமும் மேலும் கீழும் தாவிக்கொண்டிருக்கின்றனர். வேறு யாருக்கும் தெரியாமல். ஓரத்தில் மண்குவித்து, புதைக்கப்பட்டிருக்கும் மண்பானை. உள்ளே கலங்கலாக ஜில்லென்று ஜலம். பக்கத்தில் சங்கிலியில் கைதாகி ஜன்னல் கம்பியில் தொங்கும் அலுமினிய டம்ளர். வருகை பதிவு ஏடு. அருகில் புழுக்கூண்டு ஒரு பென்சில். யாரும் திருடிக்கொண்டு சென்றுவிடாமல் இருக்க நூலில் …

Continue reading »

Permanent link to this article: http://www.ommachi.net/archives/1678

ஒரு கொளை கதை – பாகம் 8

சூலப்பொட்டுக்காரி. லிபர்டேரியன். ழ ள குழப்பத்தில் இன்று இரவு என்னை கொல்ல இருந்தவள். கிடந்தாள் தவம். மணந்தாள் என்னை. சாமியார் சொத்துக்காக. நா ஏதோ ராமனுக்காக ஜானகி இருந்த தவம் அப்டீன்னு நெனச்சுட்டிருந்தேன். சரிதான் போய்யா; என்னமோ அந்தப் பொண்ணு கொஞ்சம் சேப்பாயிருக்கு. நீ அதைப் பார்த்து மயங்கறே. சேப்பா இருந்தா ஆயிடிச்சா? லொடபடவா சொன்னது லேட்டாத்தான் புரிந்தது. ஆனால்… பெட்டர் லேட் தான் நெவர்… அப்படி சற்று ரீவைண்ட் செய்தால், அன்று காலையும் செவ்வாய். மூன்றாவது …

Continue reading »

Permanent link to this article: http://www.ommachi.net/archives/1676

ஒரு கொளை கதை – பாகம் 7

கதை: கொளை கதை. காலம்: முதல் அத்தியாயத்தில் இந்த கத தொடங்குவதற்கு முன், எப்பவோ. இடம்: நாகர்கோயிலாண்ட, எதுத்தாத்து திண்ணை. அவதானிப்பு: அறிவியல். திண்ணைகிட்ட போனப்ப, அங்கிருந்த ஒருத்தன் அறிவியல் பேசுவியா நீ அப்டின்னான். சயின்ஸ்தானே, பேசுவனே. புதுசா என்ன சொல்லேன். ஓ, ஒன்னு வந்திருக்கு. நானோ அப்டீன்னுட்டு. எலக்ட்ரான் ப்ரோட்டான் நியூட்ரான் சேந்தா ஆட்டம்னு சொல்லுவா. அணு. எங்க அக்கா பொண்ணு பேரு கூட அதான். ஒன்னுக்கு ஒன்ன சுத்தும். அணுவ இல்ல. நியூட்ரான், எலக்ட்ரான் …

Continue reading »

Permanent link to this article: http://www.ommachi.net/archives/1674

ஒரு கொளை கதை – பாகம் 6

[முன்கதைகள் சுருக்கம்: இது கொளை கதை. தலைப்பு சொல்லுதே. ஆனா நீங்க கொலை கதைன்னும் படிக்கலாம். ஆனா இதில் நடப்பது நிஜம். துடிக்குது புஜம். தகிட தத்திம்தத்திம்தகிட விக்ரோம்... கா...தூ... ஆனா ஒரு கதையான்னு தெரியல. இதுவரை நாலேமுக்கால் வருதாம். கூட்டி கொடுத்தவங்க சொன்னாங்க. ஐயோ, கூட்டினா எண்கள கூட்டுவதுங்க. இப்படித்தான் பத்திக்கு பத்தி, வரிக்கு வரி, சோபால கிடக்குற ரிமோட் மேல ஒக்காந்து டீவிய பாக்குற மாதிரி, சானல் மாரி, மாரி, கத முச்சூடும் ஒரே …

Continue reading »

Permanent link to this article: http://www.ommachi.net/archives/1663

ஒரு கொளை கதை – பாகம் 5

ழ ள. இப்பக்கூட பாருங்க, வூட்ல இந்த கொல கதய எப்படி உங்களுக்கு எளுதி, ச, எழுதி புரியவைக்கறதுன்னு நான் ரேழியில ஓரமா இருட்டுல சுவத்த பார்த்து யோசனையில இருந்தேன். அம்மணி தளுக்கா என்னைய கடந்து வாசலுக்கு போகையில, என்ன இன்னிக்கு இருட்டு நிறம் மிக்க கருப்பாயிருக்கு, இதான் டார்க் மேட்டரா, அதான் இங்கன இருக்கே பின்ன ஏன் பிஸிஸிஸ்டுங்க இதக்காணோம்னு தேடிகிட்டிருக்காவ, அப்படினு ஏதொ மொணமொணத்துகினே போனாவ. அங்க சோழியாடும் தோழியாண்ட வளவள கலகலன்னு பேச்சு. …

Continue reading »

Permanent link to this article: http://www.ommachi.net/archives/1573

ஒரு கொளை கதை – பாகம் 4

ஆன் த பாசிபிள் மோடிவ்ஸ் ஆஃப் க்ளீஷே கில்லர் மூவிங் ஔட் ஆஃப் டமில்நடூ. அலுவலகத்தில் உள்ளேமட்டும் சர்குலேட் செய்யப்படும் வம்பிகையின் ஒரு கட்டுரை தலைப்பு. நான் ஏளுதினதுதான், சே, எழுதியதுதான். மொத்தமும் அனுமானங்களே. எள்ளளவு உண்மை இருக்கலாம். துப்பு (கெட்ட) பொழப்புல இப்டி அனுமானங்களையும் ரூமர்ஸையும் நம்பித்தான் டைம புஷ்ஷனும். க்ளீஷே கில்லர் ஏன் என்ஆர்ஐயிடம் சென்றிருப்பார்? என் யூகம், சே, ஊகம் இது… தமிழ்நாட்டுள்ளார ஏதோ ஒரு உலகிலேயே தலை சிறந்த கிராமத்தில் ஒரு …

Continue reading »

Permanent link to this article: http://www.ommachi.net/archives/1564

ஒரு கொளை கதை – பாகம் 3

அலைகடலோரம் அலைகள்மோத அகாலத்தில் அலங்கோலமாக அழகான அணங்கை, ஆடைவிலகி. இலைமறைகாய்போல. ஈக்கள்மொய்க்க. உயிரற்று. ஊக்குபிளந்து. எழில்தெரிய. ஏடாகூடமாக. ஐவர்கூடி. ஒருக்களிக்க. ஓடி. ஔவென்றுரைத்து ஃகுளில் அடக்கியிருந்த ரிவால்வரை கையில் எடுத்துக்கொண்டேன். பார்த்தவுடன் முதலில் கண்ணில் பட்டது அவளது கண்ணில்படக்கூடாதது. அறிவியல் தாண்டிய கவிதையான முரண்பாடு மனதை இன்ஸ்டண்டாய் கெடுத்தது. பீச் முழுவதும் சிலிக்கண்-டை-ஆக்ஸைடு. அதில் கிடப்பது இதுவரை உயிருடன் இருந்த இரண்டு சிலிக்கன் இம்ப்ளாண்ட்ஸ். நடுவில்… சிலிக்கன் வாலிக்காக அமெரிக்காவரை எதற்கு போகவேண்டும்… ரிலாக்ஸ், கடமைக்கு நடுவுல …

Continue reading »

Permanent link to this article: http://www.ommachi.net/archives/1556

ஒரு கொளை கதை – பாகம் 2

உன்னைப்போல் மற்றொருவன். நான்தான். ஊருக்கு வெடிவைக்கையில் மட்டும் வெள்ளை சட்டையில் உலவுவேன். மற்றபடி ஜீன்ஸ் டீ-ஷர்ட். காப்பி கலரில். எனக்கு செய்யும் தொழிலே கருமம். பல ரகசிய சிநேகிதிகள். ரகசியம்னா, பூஸ்ட் இஸ் த சீக்ரெட் ஆஃப் மை எனர்ஜின்னு கபில்தேவ் மாதிரி அனைவருக்கும் தெரிந்த ரகசியம் இல்லை. எனக்கே எம்புட்டு சிநேகிதிகள்னு தெரியாது. அவ்ளோ ரகசியம். ஆரம்ப காலத்தில் போன்கால்கள் மட்டும் சிநேகமாக தேவைகளை சொல்லும். நான் செவிமடுப்பேன். அழகிய குமரிகள் தொலைக்கும் கொண்டை ஊசி, …

Continue reading »

Permanent link to this article: http://www.ommachi.net/archives/1550

ஒரு கொளை கதை – பாகம் 1

பிரேதத்தை முதலில் பார்க்கையில் அது கொலை என்று எனக்கு உரைக்கவில்லை. அரைமயக்க நிலையில் இருந்த ’அதை’ பிரேதமா என்றே ஊர்ஜிதப்படுத்த முடியவில்லை. நான் கத்துகுட்டி. ஊர்ஜிதத்தையே ஜி யை விட்டொழித்து தெளிவான தமிழில், சிந்தித்து சரிபார்த்து நிருபணம் செய்துகொள்ளல் என்று பல வார்த்தைகளில் எனக்கு விளக்க தெரியாத வயது. அடுத்த வாக்கியம் எப்படி எழுதுவது என்று இதோ, இப்போது திணறுகிறேனே, அப்படித்தான் திணறினேன் அன்றும். பிரேதமா பொணமா என்று. கதையாய் தமிழில் எழுதினால் என் உயிருடன் முடிக்கமுடியுமா …

Continue reading »

Permanent link to this article: http://www.ommachi.net/archives/1545

Whale வேல்

குசினியறையில் வேலையாய் இருந்த மனைவிக்கு உபயோகமாய் அவளை உற்சாகப்படுத்திக்கொண்டு நான் சும்மா இருந்துகொண்டிருந்தேன். அப்பொழுதுதான் ஒரு வேல் ஷார்க் (Whale Shark திமிங்கலம்) படத்தை யங் வேர்ல்டிலிருந்து கனகாரியமாய் வெட்டி மகளின் நோட்டுப்புத்தகத்தில் ஒட்டியிருந்தோம். அவள்: நா கடலுக்கு அடீல போப்போறே(ன்), வேல் ஷார்க ஃபோட்டோ பிடிக்க; நீ கிடயாது… நான்: (கடுப்பாகி) ஓகே; நா பழனிக்கு போறேன் முருகர பாக்க; அவர்கிட்ட கூட ஒரு வேல் இருக்கு; அத பாத்துக்கறேன்…

Permanent link to this article: http://www.ommachi.net/archives/1371

இளம் பேராசிரியர்கள் கூறும் டாப் ட்வென்டி பொய்கள்

சற்று ஹாஸ்யமாக யோசித்தால், இந்தியாவில் தொழில்நுட்ப ஆராய்ச்சியை வேலையில் ஒரு பகுதியாக கொண்ட ஸ்தாபனங்களில் வேலை செய்யும் இளவயது ஆசிரியர்கள் கூறும் டாப் ட்வென்டி பொய்கள் வருமாறு

Permanent link to this article: http://www.ommachi.net/archives/55