அருண் நரசிம்மன்

பேயோனுக்கு அஞ்சல்

[பேயோன் எழுத்தும் அவரின் ஆளுமையும் அறிமுகமாகாதவர்களுக்கு இந்த அஞ்சலில் ஓரிரு உள்நகை மட்டும் நிச்சயமாய் புரியாது. மற்றதெல்லாம் வழக்கம் போலத்தான்.] அன்பின் பே, எவ்விதக் குறிகளினாலும் எழுதப்பட்ட தமிழ் எழுத்தை வாசித்து வழிக்குகொண்டுவருவதில் உம்மிடம் வெளிப்படும் பேரார்வத்தைக் கண்டு சில வாரங்கள் முன்னர் உங்கள் முகவரியை ரொம்ப ஈஸியாக கேட்டுவிட்டேன். நம்வீட்டு உதவாக்கரை ஒன்றை அனுப்பிவைத்தால் உம்பார்வையில் முன்னுக்கு வரலாமே என்று. இதுவரை பதிலில்லை என்றவுடன் தான் என் வினா உங்களுக்கு ஏற்படுத்தியிருக்கும் உளைச்சல்களை ஒருவாறு ஊகித்தேன்….

Read more

புத்தக முன்னுரை: ஏலியன்கள் இருக்கிறார்களா?

ஏலியன்கள் என்றால் நீ என்ன நினைக்கிறாய் என்று என் ஆறு வயது மகளிடம் கேட்டேன். “ஓ தெரியுமே;” (பிறகு எல்லாம் ஆங்கிலத்தில்…) “பிளானெட்டில் வசிப்பவர்கள்.” “அப்ப நாம்?” என்றவுடன், யோசித்து திருத்தி, “இல்லை, மார்ஸிற்கோ ப்ளூட்டோவிற்கோ வந்துபோவார்கள். ஸ்பேஸில் வசிப்பார்கள் அப்பா. ஸ்பேஸ்ஷிப் வைத்திருப்பார்கள்; பீச் (peach), வெளுப்பு, கறுப்பு என்று நம்மைப்போல் கலரில் இருக்கமாட்டார்கள், நீலம், பச்சை கலர்ல, ஓவல் மூஞ்சியுடன், குச்சிக்கால்களுடன், காற்றே இல்லாமல் உயிர் வாழ்வார்கள்”. எனக்குப் பரிச்சயமான உலகைவிட்டு, அதேசமயம் முழுவதுமாய்…

Read more

புத்தக முன்னுரை: நேனோ ஓர் அறிமுகம்

“நேனோ” என்பது அறிவியலாளர்களுடன் ‘நேனு நேனு’ என்று வர்த்தகவித்தகர்களும் கைகோர்க்கும் துறை. வைரஸ் நுண்ணுயிர்களின் எளிய செயல்பாடுகளையே கணினிவகை பைனரி செய்திகளாய் பாவிக்கும் நேனோபாட் (nanobot) எனும் நுண்ணூடுருவிகளிலிருந்து, ஆட்டோவைவிட சற்றே பெரிதான ஊர்தியை “நேனோ” என்று பெயரிடும் அளவிற்கு இத்துறை இன்று பிரபலம். இயற்கையை அறிதலுக்கு அறிவியல் சிந்தை ஒரு உகந்தவழி என்றால், அவ்வறிதலின் வெளிப்பாடான தொழில்நுட்பங்களுக்கும் இயற்கையே முன்னோடி. நேனோ தொழில்நுட்பம் விஷயத்திலும் இது உண்மையே. பல நேனோ பொருட்கள்,  தொழில்நுட்பங்கள், இயற்கையில் உயிரினங்களிடையே…

Read more

புத்தக முன்னுரை: டூக்கன் பறவைகளுக்கு ஏன் அலகு பெரிதாக உள்ளது

அறிவியல் கற்பது கடினம். பாடமாய் கற்க முனைகையில் வாசலிலேயே செருப்பையும்  சிரிப்பையும் கழட்டிவிட்டு, முகத்தையும் மனதையும் சீரியஸாக்கிக்கொள்வது  அவசியம். ஊடாடும் வேறு அறிவுத்துறைகளின், கலைகளின், வாழ்க்கை இயல்பின் தாக்கங்கள் அறிவியலை கற்கையில் கவனக்கலைப்பிலேயே முடியும். அறிவியலின் கடினத்தை பெருக்கி  வெறுத்தொதுக்கவைத்துவிடும். மேற்படி கருத்துகள் அறிவுப் பறிமாற்றங்களில் ஈடுபடும் தமிழ்மனங்களில் இருந்து பரிட்சை பேடில் ஒட்டிய பெருமாள் படம் போல லேசில் அகலாதவை. மொத்தமாக சேதாரமின்றி பிரித்தெடுக்கமுடியாதவை. பள்ளி கல்லூரிகளில் தேர்வு, விழுக்காடு, நல்ல வேலை என்று ஏதோ…

Read more

இரண்டு துப்பறியும் நவீனங்கள்

பலோமினோ மொலெரோவைக் கொன்றது யார் (Who killed Palomino Molero) என்று மர்ரியோ வர்கஸ் (ல்)லியோஸ்ஸா (Mario Vargas Llosa) எழுதிய நாவலையும், ‘கதிரேசன் செட்டியாரின் காதல்’ என்று மா. கிருஷ்ணன் எழுதிய நாவலையும் சமீபத்தில் வாசித்தேன். ஓரிரு மாதங்களுக்குள் வாசித்த தற்செயல் இரண்டிலும் சில ஒற்றுமைகளைச் சுட்டியது. சில உள்விரிவுகள். பகிர்ந்துகொள்கிறேன். (ல்)லியோஸ்ஸா பெரு நாட்டு எழுத்தாளர். ஸ்பானிஷ் மொழி மூலம். என்னத்தான் சங்கத்தமிழைவிட ஸ்பானிஷ் அதிகம் பரிச்சயம் என்றாலும், ஆங்கில மொழியாக்கத்தில்தான் வாசித்தேன். மா….

Read more

புத்தகங்கள்: வாசித்தவை, வாங்கியவை

அதாவது, 2012இல் வாசித்தவை, 2013இல் வாங்கியவை. ‘வாசித்தவைகள்’ ஏற்கனவே உள்ளிட்டிருக்கும் பட்டியல் (2012 புத்தகக் காட்சியில் வாங்கிய புத்தகங்கள்) சேர்த்து, என்னுடன் சமீப வருடங்களில் புழங்கும் புத்தகங்கள். ‘வாங்கியவை’, நேற்று (சனவரி 12) 2013 புத்தகக் காட்சியில் வாங்கியவை. புத்தகக் காட்சி நடந்துகொண்டிருப்பதால், உங்களுக்கு உபயோகமாகலாம் என்று இச்சமயத்தில், ஓரிரு குறிப்புகளுடன் இவற்றை பட்டியலிட முனைந்தேன். உண்மை வேண்டுமெனில், இவ்வகையில் ‘பட்டியல்கள்’ எழுதுவது மிக எளிது; அதற்கேற்றபடி ‘தன்னிலை விளக்கம்’ கொடுக்கத் தெரிந்திருக்கவேண்டும். அவ்வளவே. தன்னிலை விளக்கம்:…

Read more

என் புத்தகம்

என் புத்தகம் ஒன்று பிரசுரமாகியுள்ளது. பதற்றமடையாமல் மேலும் வாசியுங்கள். Ane Books நிறுவனம் இந்தியாவிலும் (சார்க் நாடுகளிலும்), CRC Press நிறுவனம் உலக அளவிலும் வெளியிட்டுள்ளார்கள். அமேஸான் சந்தையிலும் வாங்கலாம். ஆய்வாள பேராசிரியர்கள் வழங்கியுள்ள இரண்டு அணிந்துரைகள், என் முகவுரை, நன்றியுரை மற்றும் உள்ளடக்கப் பட்டியல் அனைத்தையும் இந்தச் சுட்டியில் தொடங்கி வாசிக்கலாம் http://www.nonoscience.info/pm-book.html இனி சார்ந்த நகைச்சுவை…

நூல் அறிமுகம்: துருவ நட்சத்திரம் – பழநி சுப்ரமணிய பிள்ளை

“ஸொகஸுகா ம்ருதங்க தாளமு” என்று தொடங்குகிறார் தன் ஸ்ரீரஞ்சனி ராக கீர்த்தனையை, சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான தியாகைய்யர். இதே கருத்தை அவருக்குமுன்னர் புரந்தரதாஸரும் “தாள பேக்கு தக்க மேள பேக்கு” என்று முன்மொழிந்தார். நம் மரபிசை கச்சேரிகளில் சங்கீதத்திற்கு உறுதுணையாய் இருக்கவேண்டிய தாளபக்கவாத்தியங்களில் முதன்மையானது மிருதங்கம். சென்ற நூற்றாண்டில் அரியக்குடியார் வகுத்த கச்சேரி அமைப்பு பிரபலமாகிவருகையில், முப்பதுகளிலிருந்து அடுத்த சுமார் முப்பது வருடங்களுக்கு மிருதங்கத்தில் முழங்கியவர்கள் இருவர். ஒருவர் பாலக்காடு மணி அவர்கள். மற்றொருவர் பழனி சுப்ரமண்யன்…

Read more

விஷ்ணுபுரம் அறிமுகம்

இவ்வாறாக சுஜாதா எனும் புணைவன், வணிகசபையை வணங்கி, விஷ்ணுபுரத்தின் அறிமுகத்தை தொன்னூறுகளின் இறுதியில் கூறிமுடித்ததும், சபையோர் பலர் காசைத் திருப்பிக்கேட்டார்கள். ஆதியில் ஒரு சொல் இருந்தது. அதற்கு விஷ்ணுபுரம் என்று பெயர். இப்டி உம்பர்ட்டோ ஈக்கோ கூட ஒரு புத்தகத்த என்பதுகளில் தொடங்கியுள்ளார் மகளே. தி நேம் ஆஃப் தி ரோஸ். ஒரிஜினல் இத்தாலி மொழில. நான் படிச்சது ஆங்கில வெர்ஷன்தான். உலக இலக்கியம்னாலே அப்டிதான். எந்த மொழில வேணா எழுதலாம். ஆனா இங்கிலிஷ்லதான் படிக்கமுடியும். “இன்…

Read more

2012 புத்தகக் காட்சியில் வாங்கிய புத்தகங்கள்

வலைப்பூ, வலைமொட்டு, வலைபிட்டு என தமிழ்-இணையத்தில் வருடாந்திரமாக எழுதப்படும் டாப் டென் சம்பிரதாய குறுங்கட்டுரைகளில் நிச்சயம் இருப்பது “புதுவருடத்தில் என்னவெல்லாம் சாதிப்பது” (வருட முடிவில் என்னவெல்லாம் கோட்டைவிட்டேன் என்று பட்டியலிடுவது இதன் மாறுவேடமே). அடுத்து, அவ்வருட புத்தகக் காட்சி சென்றுவந்ததின் அனுபவப்பகிர்வு. 2012 பு.காட்சியகத்திற்கு சென்றேன், சுழன்றேன், தலைவலியுடன் திரும்பினேன். உத்திரவாதமாக நொடிக்கொருதரம் காற்றை மூக்கிலிருந்து கார்பண்டைஆக்ஸைடாய் வெளியேற்றும் சகஜனசாகரத்தினூடே, வெள்ளைவேட்டிசூழ் வெள்ளாவியாம் பெரிய சைஸ் அஞ்சனப்பெட்டியில் பனுவலைப்போற்றும் சிற்றெறும்பென நான்கைந்து மணிநேரம் உலாவியதில், தலைவலி. கட்டுரையின்…

Read more

விஞ்ஞானபுனைக்கதை விமர்சனம்: ஹால்ட்டிங் ஸ்டேட்

சார்லஸ் ஸ்ட்ராஸ் எழுதியுள்ள விஞ்ஞானப்புனைகதை ஹால்டிங் ஸ்டேட்டை படிக்கையில் உனக்குப் புரிகிறது இனி பேச்சுவழக்கு ஆங்கிலம் உனக்குப் புரியாது என்று. கீக்குகள் பேசும்மொழி, சற்று க்ரிப்ட்டோகிராஃபி, ஏன் எம் எம் ஓ ஆர் பி ஜி (MMORPG) காட்சி சாத்தியங்கள் கூட உனக்குப் புரியும். ஆனால் புரியாதது இப்புத்தகத்தில் வரும் ஆங்கிலத்தை தங்கள் ’அம்மா நாக்காக’ கொண்ட ஜீவன்கள் பேசும் மொழி. போகட்டும் அது என்று உன்னை நீயே சமாதானப்படுத்திக்கொள்கிறாய் ஏனெனில், இக்கதையில் வரும் எதிர்காலத்தையும் அதன்…

Read more

ஹைக்கூவும் பொய்க்கூவும்

சுஜாதா எழுதிய ஹைக்கூ ஒரு புதிய அறிமுகம் (உயிர்மை பதிப்பு) என்ற புத்தகத்தை படித்ததில் ஜப்பானிய ஹைக்கூ கவிஞர்களை பற்றியும், ஜப்பானிய கவிதைகளின் இலக்கணங்களையும், அவைகளின் தமிழோடு உள்ள ஒற்றுமை வேற்றுமைகளையும் அறிமுக நிலையில் புரிந்துகொள்ளமுடிந்தது. ஹைக்கூ பற்றி குன்ஸாகத்தான் புரிந்தது. என் குறைதான். நிறைய பொய்க்கூக்களை இதுவரை படித்துவிட்டதனால் இருக்கலாம். புரிந்தவரை விளக்குகிறேன் (உண்மையில், நான் புரிந்துகொள்ளவே விளக்குகிறேன்).

புத்தகக் காட்சியில் வாங்கியவை

சமீபத்தில் (2008இல்) நடந்த சென்னை புத்தக கண்காட்சியில் நான் வாங்கிய புத்தகங்களின் பட்டியல் கீழே கொடுத்துள்ளேன். தொடர்ந்து தேய்த்ததில் கிரெடிட் கார்டிலிருந்து பூதம் ஏதும் வந்துவிடப்போகிறதோ என்று உடன் வந்தவருக்கு சந்தேகம். வாங்கிவந்து ஒரு வாரமாகியும், ஜுரம் விட்டபாடில்லை. அட்டை இன்னும் சூடாகத்தான் இருக்கிறது. வீட்டு நிர்வாகியும்தான். இனி பட்டியல்

சென்னை புத்தக கண்காட்சி 2008 அனுபவம்

இந்தியன் கிரிக்கெட் டீம் போல் இரண்டு நாள் ஸ்டார்டிங் டிரபிளுக்கு பிறகு ஒரு கட்டாய லீவு நாளில் சாயங்காலம் சென்றால் கூட்டமாக இருக்கும் என்று காலையில் சாப்பிட்டுவிட்டு ஆட்டோ பிடித்து புத்தக கண்காட்சியை பத்தரை மணிக்கு அடைந்தால், திறக்கவில்லை. லைனாக நில்லுங்கள் சார், நான் ஏன் சார் உங்கள் பின்னால் நிற்கவேண்டும், நான்தான் முதலில் வந்தேன், நீங்க வேணா என் பின்னாடி வாங்க என்ற சக இந்தியர்களுடைய கியூ கலாச்சாரத்தில் கருத்தொருமிக்காமல் கலந்து, சட்டை கலைந்து, வழ…

Read more