சிறுகதை: தந்தவம்

தந்த கோபுரத்தினுள் தனிமைகொண்டு தவத்திருக்கோலத்தில் தத்தாத்ரி. தயாரானார்.

மேட்டிமைவாத வேள்வி. வாதப் பிரதிவாத பயங்கரம். அறிவியலாள அகங்காரம். அங்கீகாரப் பசி. உலகூட்டலின் தோல்வி. படைப்பூக்கச் சாற்றைப் படைத்தவன் பருகிப் பசியாற வகையில்லை. இது ஜெகத்ரட்சக ஜென்மமுமில்லை. சாதித்த தனிமையிலும் இனிமையில்லை. அறிவுப்பொதியின் அழுத்தம் பிழிந்து வெளியேற்றும் சாறு எதுவோ, சக்கை இவன் தானே.
Continue reading

Category: கதை | Comments Off

சிறுகதை: நியூட்டனின் மூன்றாம் விதி

எழுத்தாளன் ஆகவேண்டும் என்பது என் சின்ன சின்ன ஆசைகளில் இருநூற்றி எழுபத்தி மூன்றாவது.

முதல் பத்து ஆசைகள் விஞ்ஞானியாவதைச் சார்ந்தது. இரண்டாம் பத்தில் இன்ஜின் டிரைவர் (கரி என்ஜின் மட்டும்), இசைக்கலைஞன், இரக்கமுள்ள சினிமா நாயகன், இந்திரியங்கள் அடக்கிய இறைதூதன் போன்ற ஆதர்சங்கள் ஆக்கிரமிக்கும்.

மிச்ச இருநூற்றியைம்பது சொச்சம் ஆசைகள் பெண்கள் பற்றியவை.

அவை எதற்கு இப்போது. எழுத்தாளனைத் தொடர்வோம். அவனே கதைவிட லாயக்கு.

எழுத்து ஒரு தவம் என்பதை சிறுவயதிலேயே அறிந்துகொண்டேன். ஆனால் பெரியவனாகும் வரை தவம் செய்வதற்கான அவகாசம் அமையவில்லை.

ஏனைய சின்ன சின்ன ஆசைகளில் சிலதை முயன்றதில், தவத்தை தொடங்கவிடாமல் கலைத்தவண்ணம் வாழ்வின் மேனகைகள், லோபமுத்ரைகள்.
Continue reading

Category: கதை | Comments Off

சிறுகதை: வக்ர துண்டம் மகா காயம்

அண்ணா அப்பழுக்கற்றவர். கர்நாடக சங்கீதத்தை வரையறுப்பதில். இதோ இப்போது போகிறோமே, இதேபோல அவரது ஸ்கோடா காரில் சில வருடங்களாக கச்சேரிகளுக்கு என்னையும் அழைத்துச்செல்கையில் இதை ஐயம் திரிபற உணர்ந்துகொண்டுள்ளேன்.

சொந்த அண்ணா இல்லை. வாடகையும் இல்லை. கடன் வாங்கிய வகை. வேலை செய்துவைத்தவர். என்னைவிட முப்பது வருடங்களாவது மூத்தவர். அனைவருக்கும் அவர் அண்ணா தான். தந்தை பெயரான அனந்தாச்சாரியை இனிஷியலாக்கி நாதமுனி என்கிற பெயரை அ.நா. என்றுதான் கையெழுத்திடுவார். அ.நா. மருவி அண்ணா.

அழுத்தித் தூக்கி வாரிய வெள்ளிமுடி. ‘கருட’ மூக்கு. இரக்கமற்ற விழிகள். கூழிற்கு மட்டும் ஆசைப்பட்டதில் வெள்ளிக்கிரணங்கள் தெறிக்கும் மீசை. அதுவே தென்புறம் விரிய உள்ளே நெற்றியிலுள்ள ஸ்ரீசூர்ணத்தை விட சிவப்பான உதடுகள், பேசுகையில் பச்சைத் துகள்கள் தெறிக்கும் செந்நாக்கு. பச்சைக் கடுக்கண். ரெட்டைவடம் சங்கிலியில் தங்கத்தில் ஆலிலை கிருஷ்ணன் ‘வெள்ளத்தின் உள்ளானுமாய்’ மார்பின் வெண்முடிப்புதரின்மேல் தவழ்வான். வெள்ளை பட்டுச் சட்டை, அங்கவஸ்திரம். வேஷ்டி விலகுகையில் தெரியும் குஞ்சம் வைத்த கோலாப்பூரி செருப்பினுள் சாம்பல் நிறத்தில் மடங்கித் துருத்திக்கொண்டிருக்கும் கட்டைவிரல் நகம் தாம்பத்யதின் வயதைக் காட்டும். கையில் கல்யாணமாலை எம்பாஸ் செய்யப்பட்ட வெள்ளிச் செல்லப்பெட்டியினுள்ளே நீர் தெளித்த வெத்தலை-சீவல்-மூணாவது. இடதுகை விரல்களில் யானை முடி மோதிரங்களின் இடையில் அதக்கும் புகையிலையின் அரைபட்ட துணுக்குகள். இவருக்கு மட்டும் என்னேரமும் இடதுகையும் கமகமக்கும்.
Continue reading

Category: கதை | Comments Off

சிறுகதை: எட்டணாவிற்கு உலக ஞானம்

அன்றொருநாள் கோலி சோடா குடித்தபடி ஞானத்தேடலில் மூழ்கியிருந்தேன்.

ராஜகோபுரத்தை பார்த்து சிரிக்கும் உலோக காந்தியின் பின்புறம், செல்வா கடை திருப்பத்தில் பஸ்கள் வரிசைக்கிரமாய் ஆக்கிரமிக்கும். அதுதான் எங்களூர் பஸ் ஸ்டாண்ட். கடை வாசலில் காரை பெயர்ந்து முனையில் செங்கல் தெரியும் சிமெண்ட் திட்டின் மீது ஜீன்ஸ் பாண்டில் குதிரைவாகன போஸில் வீற்றிருந்தேன். ஒரு கையில் கோதண்டம் என கோலி சோடா. தொடையில் மடக்கி ஊன்றியிருந்த மறு கையில் இறுமாப்பு. கடையில் வெற்றிலை போடுபவர்களின் நடுவிரல் வெண்சுண்ணம் தீற்றியிருந்த மடிந்த மரக்கதவுகளின் மீது சாய்ந்து, சிந்தையில் உலகஞானத்தை செரிக்க, செல்வாவிடம் கணக்கு சொல்லி வாயில் கோலிசோடாவை வழியவிட்டிருந்தேன்.
Continue reading

Category: கதை | Comments Off

சிறுகதை – பெட்டியைத் திறந்து பார்த்தால்

எப்படியும் இன்று பெட்டியைத் திறந்து பார்த்துவிடவேண்டும்.

என்னத்தான் இருக்கும் உள்ளே? எப்படித்தான் இருக்கும் அவ்வுலகம்?

இருட்டாய் இருக்கும், கண் சரியாய்த் தெரியாது, துழாவ வேண்டும். ஆபத்தை உணர்ந்தால் பெட்டியை விட்டு ஓடிவிடு. எத்திசை என்பது முக்கியமில்லை. நெடிய கால்கள் கொடுக்கும் வேகத்தில் ஓடிவிடு. பெரிய மீசை பத்திரம்.

பாட்டன் முப்பாட்டன் காலத்திலிருந்தே என் குலத்தாருக்கே பெரிய மீசை. அமேரிக்கா, ஆப்பிரிக்கா என கண்டமெட்டிலும் வேரின்றிக் காலூன்றினாலும் மீசையைக் களையோம். ஸ்டார்பக்ஸில் டாலர் காபியை இருளில் முகர்கையிலும், மெஹிகன் டாக்கோ பெல்லின் என்சிலாடாக்களை வாயெல்லாம் சீஸ் வழிய பகலிலேயே புசிக்கையிலும், இடர்படும் மீசையை மழியோம். என் சொந்த கிராமத்திலும் இவ்வாறே. தேவர் மகனென்ன, அத்தைக்கே மீசை முளைக்கும் எங்கள் குலத்தில், தேவரின் தெய்வத்திற்கும் மீசை உண்டு.

மீசையை சற்றே முறுக்கி, மூக்கைத் துருத்தி, நாங்கள் மேல்பார்வை பார்த்தால் அநேகர் அம்பேல். அலறி ஒளிவர். பயம்.
Continue reading

Category: கதை | Comments Off

மெட்ராஸ் பாசி

கஸ்டமர் இஸ் காட்

போர்ட் வச்சிருக்கோம் பாருங்க சார். என்ன வேணும் சொல்லுங்க.

உன் கடைல வந்து கத்திரிக்காய்யா வாங்குவாங்க. கார்யா, புக் பண்ண கார்.
Continue reading

Category: கதை | Comments Off