[இத்தலைப்பில் 2009இல் ஒரு குறுங்கட்டுரை எழுதியிருந்தேன். சிலர் ஞாபகம் வைத்திருக்கிறார்கள். அதே தலைப்பைப் பார்த்தவுடன் ஏற்கனவே வாசித்ததுதானே என்று விலகிவிடலாம். 2012இல் பாம்புச்செவியைப் பற்றிய புதிய ஆராய்ச்சி முடிவுகள் வெளியாகின. இவற்றையும் கருத்தில்கொண்டு இங்கு கட்டுரையை முன்பிருந்து இரண்டுமடங்கு விரித்துள்ளேன்.]
மகுடி இசைக்குக் கட்டுண்டுதான் பாம்பு ‘படம்’ எடுத்து ஆடுகிறதா? இந்தக் கேள்வி நம்மில் சிலருக்கு இருக்காது. ஏனெனில் ‘ஆம்’ என்கிற பதிலில் அசைக்கமுடியாத நம்பிக்கை. எனக்குச் சிறுவயது முதல் இக்கேள்வியும் அதற்கான மேற்படி பதிலில் நம்பிக்கையின்மையும் இருந்தது. குடவாசல் பாம்பாட்டி மகுடி கொண்டு வர மறந்து ஒரு முறை பாம்புக்கூடையின் மூடியை திறந்து அதைவைத்து ஆட்டியே பாம்பை படமெடுக்கச் செய்தது முதல்.
இதனால் சிறுவயதிலேயே எனக்கு இதற்கு தீர்வு தெரிந்துவிட்டது என்று சொல்லமாட்டேன். இப்பொழுதும் ரேடியோவில் புன்னாகவராளி கேட்கையில் அப்படி இப்படி பார்த்துவிட்டு, காலை நாற்காலி மீது மடித்து வைத்துக்கொள்ளுவேன்.
சரி, அப்ப விடை என்ன?
Continue reading

முன்னொரு காலத்தில் டயனோரா என்றொரு டிவி பிராண்ட் இருந்தது. விற்பதற்கு அங்கம் அவிழ ஆடையணிந்த அணங்கைகள் அக்கம்பக்கம் அதிர ”கீ……….ப் இன்ன்ன்ன்ன் டச்” என்று ஸ்டிரியோவில் விளம்பர ஸ்லோகம் விண்ணப்பிப்பார்கள். என்னுடன் தொடர்புகொண்டிரு என்று டிவி அன்று அரைகூவியது, மின்தொடர்புசாதனங்களின் செயல்பாட்டிற்கே இன்று இன்றியமையாத ஸ்லோகமாகிவிட்டது. கணினி சி.ஆர்.டி. திரையில் தொடங்கி, கியோஸ்க்களின் பில் போடும் மெஷின், சூதாட்ட ஸ்லாட் மெஷின்கள், வங்கி ஏ.டி.எம்.கள், பாம் பைலட், ஸ்மார்ட் ஃபோன் என அநேகமாக அனைத்து மின்திரைகளுமே இன்று தொடுதிரைகளாகிவிட்டது. ஐபாட், ஐஃபோன், ஐ.நா., ஐயா, என்று அனைவருமே சற்று அழுத்தினால்தான் கவனிக்கிறார்கள்.
பணியில் பாஸ் கூறும் ஐடியாக்களை பரிசீலிக்கையில், மனையில் மனைவி செய்த புதிய பதார்த்தத்தை உண்டு உ
வைரஸ் நுண்ணுயிர்களின் எளிய செயல்பாடுகளையே கணிணிவகை பைனரி செய்திகளாய் பாவிக்கும் நேனோபாட் எனும் நுண்ணுடுருவிகளிலிருந்து, ஆட்டோவைவிட சற்றே பெரிதான ஊர்த்தியை நேனோ என்று பெயரிடும் அளவிற்கு நேனோ என்றதும் அறிவியலாளர்களுடன் நேனு நேனு என்று வர்த்தகவித்தகர்களும் கைகோர்க்கும் நேனோ டெக்னாலஜி என்கிற அறிவியல் துறை இன்று பிரபலம்.


இக்கட்டுரையில் தலைப்பில் உள்ள அதிசியப் பொருட்களை பற்றி அறிமுகப்படுத்திக்கொள்ளப்போகிறோம்.