நேனோ அலுமினியமும் ராக்கெட் அறிவியலும்

இங்கு சற்று ராக்கெட் அறிவியல் பேசுவோம். தொடர்ச்சியாக, நேனோ அளவில் செய்யப்பட்ட அலுமினா துகள்களினால் ராக்கெட் எவ்வாறு வெடிப்பதிலிருந்து தடுக்கப்படுகிறது என்பதையும் அறிந்துகொள்வோம்.

தீபாவளி ராக்கெட்டில் குச்சியின் முனையில் எரிபொருள் மருந்தும், அதை எரிக்க நெருப்பூட்ட இணைந்த திரியும் இருக்கும். பாட்டிலில் சொருகி பற்றவைத்தால் வானத்திலோ வீட்டுக் கூரையிலோ தவ்வும். இந்திய விண்வெளி ஆராய்ச்சிக் கழகம் போன்றவை செயற்கைக்கோள்களை வானத்தில் ஏற்றுவதற்காகத் தயாரிக்கும் பிரம்மாண்டமான ராக்கெட்டுகள் சிக்கலானவை. பற்றவைத்தால் இவ்வகை பிரம்மாண்ட ராக்கெட்டுகளும் ‘மங்கள்யான்’ போல செவ்வாய் கிரகத்திற்கும் தவ்வும். சில அல்பாயுசில் கடல் ஆராய்ச்சி செய்து அணையும்.
read more

அம்ருதாவில் அறிவியல் 3.0

அம்ருதா இதழில் தொடர்ந்து மூன்றாவது வருடமாக என்னால் அறிவியலை எழுதமுடிவது கலியுகம் செய்த நல்லூழ். தமிழ் புத்தாண்டு இதழில் ‘அறிவியல்’ இதன் அட்டைப்படத்தை அலங்கரிப்பது எனக்குமே ஆச்சர்யம். read more

சிறுகதை: தந்தவம்

தந்த கோபுரத்தினுள் தனிமைகொண்டு தவத்திருக்கோலத்தில் தத்தாத்ரி. தயாரானார். மேட்டிமைவாத வேள்வி. வாதப் பிரதிவாத பயங்கரம். அறிவியலாள அகங்காரம். அங்கீகாரப் பசி. உலகூட்டலின் தோல்வி. படைப்பூக்கச் சாற்றைப் படைத்தவன் பருகிப் பசியாற வகையில்லை. இது ஜெகத்ரட்சக ஜென்மமுமில்லை. சாதித்த தனிமையிலும் இனிமையில்லை. அறிவுப்பொதியின் அழுத்தம் பிழிந்து வெளியேற்றும் சாறு எதுவோ, சக்கை இவன் தானே. read more

விஷ்ணுவின் மார்பைப் பிளந்து

விஷ்ணு நரசிம்ம அவதாரத்தில் ஹிரண்யகசிபுவின் குடலைக்கிழித்து மாலையாகப் போட்டுக்கொண்டார். லக்ஷ்மி பிராட்டியை தன் மார்பில் ஏற்றுக்கொண்டுள்ளார். பிரம்மனை நாபிக்கமலத்திலிருந்து தாமரை மேல் ஜனித்தார். இதெல்லாம் பழங்கதை. விஷ்ணுவின் மார்பைப் பிளந்தவர் யார் என்று சொல்ல முடியுமா? தெரியவில்லையா. கீழே படத்தில் பாருங்கள். read more

மிருதங்க பூபதி, மரபிசை, எளிமை, அறிமுகம்

பாலக்காடு மணி ஐயர், பழநி சுப்ரமணியப் பிள்ளை இருவருடன் இணைந்து இராமநாதபுரம் முருகபூபதி கர்நாடக இசையின் மிருதங்க மும்மூர்திகளில் ஒருவர். இவரது நூறாவது பிறந்த வருட விழாவையொட்டி 16, பிப்ரவரி, 2014 அன்று ‘பரிவாதினி’ அமைப்பு சென்னை லஸ் ‘ராக சுதா’ அரங்கில் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் மதுரை சேஷகோபாலன் உரை கேட்கப்பெற்றேன். ஹரிகேசநல்லூர் முத்தையா … read more

மருந்தீஸ்வரர் கோவிலில் போரோமியன் வளையங்கள்

சில வருடங்கள் முன்னர் இத்தலைப்பில் எழுதியுள்ளேன். சிலருக்கு ஞாபகம் இருக்கலாம். இந்த ‘மீள்பதிவில்’ உள்ளடக்கத்தை சிறிது வளர்த்தியுள்ளேன். ஓரிரு கோவில்களையும் சேர்த்துக்கொண்டுள்ளேன். கட்டுரையாக ஒரு வடிவம்  ‘அம்ருதா’ ஜனவரி 2014 இதழிலும் வெளியாகியுள்ளது; ‘டூக்கன் பறவைகளுக்கு…’ புத்தகத்திலும் இருபத்தியைந்தில் ஒரு கட்டுரையாக இடம்பெற்றுள்ளது. புதிய இணைய வாசகர்களுக்கு விஷயத்தை அறிமுகப்படுத்தவே மீள்பிரசுரம். காரணம், அடிக்குறிப்பில். இனி, கட்டுரை… read more

சிறுகதை: நியூட்டனின் மூன்றாம் விதி

எழுத்தாளன் ஆகவேண்டும் என்பது என் சின்ன சின்ன ஆசைகளில் இருநூற்றி எழுபத்தி மூன்றாவது. முதல் பத்து ஆசைகள் விஞ்ஞானியாவதைச் சார்ந்தது. இரண்டாம் பத்தில் இன்ஜின் டிரைவர் (கரி என்ஜின் மட்டும்), இசைக்கலைஞன், இரக்கமுள்ள சினிமா நாயகன், இந்திரியங்கள் அடக்கிய இறைதூதன் போன்ற ஆதர்சங்கள் ஆக்கிரமிக்கும். மிச்ச இருநூற்றியைம்பது சொச்சம் ஆசைகள் பெண்கள் பற்றியவை. அவை எதற்கு … read more

எழுத்தாளன் ஆகிவிட்டபடியால்

பூர்வ பீடிகை: முதல் அறிவிப்பு ஒரேடியாக ‘அறிவிப்பாய்’ மட்டுமே முடிந்துவிட்டதே என்று சில நண்பர்களுக்கு (ஆக்சுவலா, எதிரிகள்; with such friends who needs enemies) ஏமாற்றம். அதனால், here goes… நகைச்சுவை என்பதால் நான் இக்கட்டுரையில் நேரடியாகவோ மறைமுகமாகவோ குறிப்பிட்டுள்ள நபர்கள் மட்டும் ‘மனம் புண்பட்டால்’ போதும். மற்றவர்கள் விழுந்து விழுந்து சிரித்தே புண்கள் … read more

புத்தக முன்னுரை: ஏலியன்கள் இருக்கிறார்களா?

ஏலியன்கள் என்றால் நீ என்ன நினைக்கிறாய் என்று என் ஆறு வயது மகளிடம் கேட்டேன். “ஓ தெரியுமே;” (பிறகு எல்லாம் ஆங்கிலத்தில்…) “பிளானெட்டில் வசிப்பவர்கள்.” “அப்ப நாம்?” என்றவுடன், யோசித்து திருத்தி, “இல்லை, மார்ஸிற்கோ ப்ளூட்டோவிற்கோ வந்துபோவார்கள். ஸ்பேஸில் வசிப்பார்கள் அப்பா. ஸ்பேஸ்ஷிப் வைத்திருப்பார்கள்; பீச் (peach), வெளுப்பு, கறுப்பு என்று நம்மைப்போல் கலரில் இருக்கமாட்டார்கள், … read more

புத்தக முன்னுரை: நேனோ ஓர் அறிமுகம்

“நேனோ” என்பது அறிவியலாளர்களுடன் ‘நேனு நேனு’ என்று வர்த்தகவித்தகர்களும் கைகோர்க்கும் துறை. வைரஸ் நுண்ணுயிர்களின் எளிய செயல்பாடுகளையே கணினிவகை பைனரி செய்திகளாய் பாவிக்கும் நேனோபாட் (nanobot) எனும் நுண்ணூடுருவிகளிலிருந்து, ஆட்டோவைவிட சற்றே பெரிதான ஊர்தியை “நேனோ” என்று பெயரிடும் அளவிற்கு இத்துறை இன்று பிரபலம். இயற்கையை அறிதலுக்கு அறிவியல் சிந்தை ஒரு உகந்தவழி என்றால், அவ்வறிதலின் … read more

புத்தக முன்னுரை: டூக்கன் பறவைகளுக்கு ஏன் அலகு பெரிதாக உள்ளது

அறிவியல் கற்பது கடினம். பாடமாய் கற்க முனைகையில் வாசலிலேயே செருப்பையும்  சிரிப்பையும் கழட்டிவிட்டு, முகத்தையும் மனதையும் சீரியஸாக்கிக்கொள்வது  அவசியம். ஊடாடும் வேறு அறிவுத்துறைகளின், கலைகளின், வாழ்க்கை இயல்பின் தாக்கங்கள் அறிவியலை கற்கையில் கவனக்கலைப்பிலேயே முடியும். அறிவியலின் கடினத்தை பெருக்கி  வெறுத்தொதுக்கவைத்துவிடும். மேற்படி கருத்துகள் அறிவுப் பறிமாற்றங்களில் ஈடுபடும் தமிழ்மனங்களில் இருந்து பரிட்சை பேடில் ஒட்டிய பெருமாள் … read more

என் மூன்று அறிவியல் புத்தகங்கள்

என் மூன்று தமிழ் புத்தகங்கள் 2014 சென்னை புத்தகக் காட்சியை ஒட்டி வெளிவந்துள்ளன. மூன்றுமே அறிவியல் புத்தகங்கள். ஏலியன்கள் இருக்கிறார்களா? (தமிழினி பதிப்பகம்) நேனோ ஓர் அறிமுகம் (தமிழினி பதிப்பகம்) டூக்கன் பறவைகளுக்கு ஏன் அலகு பெரிதாக உள்ளது: அறிவியல் கட்டுரைகள் (அம்ருதா பதிப்பகம்) புத்தகங்களின் முன்னுரைகளை மேலே, புத்தகத் தலைப்புகளில் சுட்டிகள் வழியே சென்றடையலாம். read more

2013 டிசெம்பர் சங்கீத விழா: சஞ்சய் தமிழ் இசைக் கச்சேரி

[03 ஜனவரி 2014 தினமலர் நாளிதழில் வெளியானதின் ஒரு வடிவம். இந்த கட்டுரையுடன் இசை விமர்சனம் தொடர்பான ‘மார்கழி உற்சவம்’ நிறைவு பெறுகிறது.] தமிழ் இசைச் சங்கம் சார்பில் ராஜா அண்ணாமலை மன்றத்தில் வழக்கிய கச்சேரியை சஞ்சய் ”உந்தன் பாத பங்கஜம்” என்று சங்கராபரண ராக வர்ணத்தில் துவங்கினார். ஆனந்தபைரவி ராகத்தில் “பூ மேல் வளரும் … read more

2013 டிசெம்பர் சங்கீத விழா: ஸ்ரீவல்ஸன் மேனன் கச்சேரி

[02 ஜனவரி 2014 தினமலர் நாளிதழில் வெளியானதின் ஒரு வடிவம்] ஸ்ரீவல்ஸன் மேனன் கேரளத்தில் இருந்து மார்கழி இசைவிழாவில் சில வருடங்களாய் பாடிவருபவர். மியூசிக் அகடெமி கச்சேரியில் பூஷாவளி ராகத்தில் “கோபநந்தன” என்னும் கிருதியை பாடினார். தொடர்ந்த ஸ்வரங்களில் நல்ல விறுவிறுப்பு. அடுத்து ரீதிகௌளை ராகத்தில் சுருக்கமான ஆலாபனை. வயலினில் எடப்பள்ளி அஜித்குமாரின் ஆலாபனை நறுக்கு … read more

2013 டிசெம்பர் சங்கீத விழா: மாண்டலின் ஸ்ரீநிவாஸ்

[01 ஜனவரி 2014 தினமலர் நாளிதழில் வெளியானதின் ஒரு வடிவம்] மியூசிக் அகடெமி கச்சேரியில் யு.ஸ்ரீநிவாஸ் மாண்டலினில் கானடா ராகத்தில் “சரஸுட” என்னும் வர்ணத்தை வழக்கமான அதிவேக காலப்பிரமாணத்தில் துவங்கினார். மிருதங்கத்தில் திருச்சி பி. ஹரிகுமார், கடத்தில் இ.எம்.சுப்ரமணியம், கஞ்சிராவில் வி.செல்வகணேஷ். விறுவிறுப்பில் துவக்கத்திலேயே அரங்கம் கிளர்ச்சியில் திளைத்தது. அடுத்ததாய் பஹூதாரி ராகத்தில் சில சஞ்சாரங்களை … read more

2013 டிசெம்பர் சங்கீத விழா: வசுந்தரா கச்சேரி

[31 டிசெம்பர் 2013 தினமலர் நாளிதழில் வெளியானதின் ஒரு வடிவம்] வசுந்த்ரா ராஜகோபால் தன் மியூசிக் அகடெமி கச்சேரியை மூலைவீட்டு ரங்கஸ்வாமி நட்டுவனார் இயற்றிய ‘சலமேலரா’ என்னும் நாட்டகுறிஞ்சி ராக வர்ணத்தில் விறுவிறுப்பாய் துவங்கினார். வயலினில் பாலு ரகுராம், மிருதங்கத்தில் தஞ்சாவூர் சுப்ரமணியம், கடத்தில் டி.வி.வெங்கட சுப்ரமணியம் உடன் வாசித்தனர். தொடர்ந்து தர்பார் ராகத்தில் மிஸ்ரசாபு … read more

2013 டிசெம்பர் சங்கீத விழா: வியாசர்பாடி கோதண்டராமன் கச்சேரி

[30 டிசெம்பர் 2013 தினமலர் நாளிதழில் வெளியானதின் ஒரு வடிவம்] பரிவாதினி அமைப்பு ஏற்பாடு செய்திருந்த நாகஸ்வரக் கச்சேரிக்கு காலை பத்துமணியளவில், நான் ஒருவன் அமர்வதற்கே இருபத்தியைந்து இருக்கைகளா, என்றவாறு ஆழ்வார்பேட்டையின் அடுக்கக சமூக அறையொன்றில் நுழைந்தேன். கோதண்டராமன் மாயாமாளவகௌளையில் தியாகையரின் கிருதியில் “துளசிதளமுலசே சந்தோஷமுகா” என்று வினவிக்கொண்டிருந்தார். மேடையில் ஆறு பேர். கீழே ரசிகர்களாய் … read more

2013 டிசெம்பர் சங்கீத விழா: அஸ்வத் நாராயணன் கச்சேரி

[26 டிசெம்பர் 2013 தினமலர் நாளிதழில் வெளியானதின் ஒரு வடிவம்] ராக சுதா அரங்கில் “நாத இன்பம்” சார்பில் நடந்த கச்சேரியை அஸ்வத் நாராயனன் “வனஜாக்ஷி” என்னும் கல்யாணி ராக அட தாள வர்ணத்தில் துவங்கினார். மேற்காலத்தில் எழுபதுகளில் கே.வி.என். கச்சேரிகளில் கேட்ட அதே விறுவிறுப்பு. பளிச்சென்று பேகடா வெளிப்படும் சஞ்சாரத்துடன் துவங்கி அடுத்ததாய், “வல்லப … read more

2013 டிசெம்பர் சங்கீத விழா: திருச்சூர் சகோதரர்கள் கச்சேரி

[25 டிசெம்பர் 2013 தினமலர் நாளிதழில் வெளியானதின் ஒரு வடிவம்] மைலாபூர் ஃபைன் ஆர்ட்ஸ் சபாவில் திருச்சூர் சகோதரர்கள் (ஸ்ரீகிருஷ்ண மோஹன், ராம்குமார் மோஹன்) ‘மஹா கணபதிம்’ என்னும் தீக்ஷதரின் நாட்டை ராக கிருதியில் துவங்கினர். ஸ்வரகல்பனையில் இருவரும் சேர்ந்து ஒத்திசைவாய் கோர்வையை பாடி கரவொலி பெற்றனர். அடுத்ததாய் ஹமீர் கல்யாணி ராகத்தில் சஞ்சாரங்களுடன் துவங்கி … read more

2013 டிசெம்பர் சங்கீத விழா: ரவிகிரண் கச்சேரி

[24 டிசெம்பர் 2013 தினமலர் நாளிதழில் வெளியானதின் ஒரு வடிவம்] மியூசிக் அகாடமியில் ரவிகிரண் தன் கோட்டுவாத்திய கச்சேரியை கண்ட அட தாளத்தில் சாவேரி ராகத்தில் தானே இயற்றிய வர்ணத்தில் துவக்கினார். வரிகளை அவர் குறிப்பிட்டிருக்கலாம். “நாத தனும் அனிஷம்” என்னும் சித்தரஞ்சனி ராகத்திலமைந்த தியாகையரின் கிருதியை அடுத்ததாய் வாசித்தார். விறுவிறுப்பாய் ஸ்வரங்கள் வாசித்து கோர்வையில் … read more