அருண் நரசிம்மன்

மெட்ராஸ் பாசி

கஸ்டமர் இஸ் காட்

போர்ட் வச்சிருக்கோம் பாருங்க சார். என்ன வேணும் சொல்லுங்க.

உன் கடைல வந்து கத்திரிக்காய்யா வாங்குவாங்க. கார்யா, புக் பண்ண கார்.

கோபப்படாதிங்க சார். முதல்ல உட்காருங்க. ஸார், நீங்களும் உட்காருங்க. தம்பி, இன்னொரு சேர் போடுப்பா. பணம் கட்டிட்டீங்களா சார். என்ன கார். வெய்டிங் பீரியட்குள்ள டெலிவரி பண்ணிடுவோம் சார்.

யோவ், அறுவது நாள் முன்னாடியே ஃபுல் பணமும் கட்டி ரசீது கூட வச்சிருக்கேன். கேள்வி கேக்கரயா. யாருய்யா நீ, மேனேஜர் இருக்காரா

வெளில போயிருக்கார் சார். ஒரு ஃபோன் பண்ணிட்டு வந்திருக்கலாமே சார் நீங்க

என்ன விளையாடரயாய்யா, உன் கடைக்கு இதோட முன்நூறு தடவ ஃபோன் போட்டாச்சு; எவனும் எடுக்கர மாதிரி தெரியலை. எடுத்தாலும் பதில் ஒன்னும் கரக்டா சொல்றதில்லை. நடையா நடக்கறேன். நா யாரு தெரியுமா, கூப்பிடுய்யா மானேஜர

செல்போன எடுக்கல சார். வெளில பிஸியா இருப்பார் சார். இன்னிக்கி ஸன்டே இல்லியா.

யோவ். கார் வாங்கவைக்றச்ச தொங்கினிங்கல்ல என்கிட்ட. இப்ப எங்கய்யா எல்லோரும். எவன கேட்டாலும் இல்லங்கறீங்க. நாப்பத்தியஞ்சு நாள்ல வரும்னீங்கல்ல, எழுவது நாளைக்கு மேல ஆச்சு, எங்கய்யா கார். பணம் வாங்கரச்ச கொடுத்த கமிட்மெண்ட் கார் குடுக்கரத்ல இருக்கவேணாம். ஸ்டுப்பிட்ஸ்

என்ன மாடல் கார் சார். உங்ககிட்ட யார் சொன்னாங்க நாப்பத்தியஞ்சு நாள்ல வரும்னு. ஃபுல் பணமும் கட்டிட்டீங்களா. ரசீது வெச்சுரிக்கீங்களா சார்.

யோவ் டு ஐ லுக் க்ரேஸி. நான் எதுக்கு என்ன மாடல்னு சொல்லனும். என் ரசீத எதுக்குய்யா உன்கிட கொண்டுவந்து நொட்டனும். உன் கடைல நீ வித்த கார்க்கு இன்ஃபார்மேஷன் இருக்காதா, உன் ரசீது புக்க எடுத்து பார்யா. ஃபுல்லீ கம்ப்யூட்டரைஸ்டுன்னு அன்னிக்கி பீலா வுட்டீல்ல. ப்ரிண்ட் எடுத்து பாரேன். கேக்கறான் என்கிட்ட துப்புகெட்டுபோய். மேனேஜர் இல்லன்ன கூப்பிடுய்யா உன் ஜெனெரல் மேனேஜர. உன் கார் கம்பெனிக்கு சிட்டீல யாரு சீஃப், கூப்பிடு அந்தாள ஃபோன்ல. ஃபோன் இருக்கா இல்லியா. வெக்கமா இல்ல, ஸ்டுப்பிட்ஸ்

சார் நாங்க வெறும் டீலர்ஸ்தான். டெலிவரி டேட் மிஸ்ஸாயிடுச்சின்னா நீங்க கார் செய்யரவங்க ஹெட் ஆபிஸுக்கு ஒரு ஃபோன் போட்டு கம்ளெயின்ட் பண்ணி பார்த்திருக்கலாமே சார்…

அறிவிருக்கா உனக்கு. நா சொல்லிகிட்டே இருக்கேன் நீ பேசரதயே பேசரயே. நா எதுக்கு உன் கார் செய்யற ஹெட் ஆபீஸுக்கு பேசனும். நா புக் பண்ணது உன் கடைல. அப்ப கமிட் பண்ணில்ல, நாப்பத்தியஞ்சு நாள்ல தருவேண்ணு. அப்ப எங்கெய்யா போச்சு புத்தி. இடியட்ஸ்.

என்ன சார் இடியட்னு எல்லாம் சொல்லிகிட்டு. மத்த கஸ்டமரெல்லாம் இருங்காங்க சார்.

சொல்லுவேய்யா, அப்படித்தான் சொல்லுவேன். அஃபெக்டட் பார்டியா நான். உன் பணமா. என் பணம்யா. சுளையா வாங்கி வெச்சுகிட்டு ஷோரூம் வெச்சு படம் காட்ரீங்களா. எங்கய்யா உன் ஆள் நாப்பத்தியஞ்சு நாள்ல கார் வரும்னானே.

யாரு சார் சொன்னாங்க உங்ககிட்ட நாப்பத்தியஞ்சு நாள்னு.

ஏன், உன் கடைல எவன் வேல செய்யரான்னு உனக்கே தெரியாதா? பெரிசா ஏஸி ஷோரூம்லாம் வெச்சு டை கட்டிண்டு கஸ்டமர அதட்டுரல்ல. உன் எம்ப்ளாயி எல்லோரயும் கூப்ட்டு கேளேன். வித்தது யார்னு. இப்ப நீ டீல க்ளோஸ் பண்ணி கார் எனக்கு கொடுக்கல நாளைக்கு பேப்பர்ல போட்ருவேன். ஐ வில் புட் இட் இன் த ப்ரஸ் யு நோ. வாட் டு யு கைஸ் திங்க் ஆஃப் மி.

இன்னிக்கு சன்டே சார். கடை மானேஜர் இல்ல. உங்ககிட்ட டீல் பண்ண ரெப்ரஸென்டேடிவ் ஃபோன ஆன்ஸர் பண்ல சார்.

அதாய்யா நானும் சொல்ரேன். எவனும் ஃபோன எடுக்கறதே இல்ல. தெரிதில்ல இப்போ. டீல் ஸைன் பண்ண ஃபார்ம கொண்டா. கான்ஸல் பண்ணிடுவோம். ஏன் வெட்டிப் பேச்சு. டு யு திங்க் ஐ அம் அ ஃபூல் டு வேஸ்ட் மை டைம் வித் யூ கைஸ் ஆஃப்டர் திஸ். இர்ரெஸ்பான்ஸிபிள் இடியட்ஸ்.

பொறுமையா இருங்க சார். ஏதாவது அக்ரிமெண்ட்ல கையெழுத்து போட்டிருக்கா சார் நாப்பத்தியஞ்சு நாள்னு. உங்க இஷ்டம். யோவ், ரசீது புக் எங்கய்யா. எடுத்துட்டுவா.

என்னய்யா உதார் உடரயா. பணத்த வாங்கி ரெண்டு மாசமா லாக் பண்ணிட்டு, இப்ப ரோஷம் வருதா. என்ன என்ன கேனப்பயன்னு நினச்சிட்டயா. உன் பின்னாடியே லோலோன்னு இவ்ளோ நாள் அலையவிட்டுட்டு இப்ப ஈஸியா கான்சல் பண்ண ரெடியாரயா. பணத்துக்கு ரெண்டு மாசத்துக்கு ஈ.எம்.ஐ. தரனும் நீ தெரியுமா. டேமேஜஸ் க்ளைய்ம் பண்ணுவேன். நாளைக்கு கார் வீட்டுக்கு வரல, உன் ஆட்டமொபைல்ஸ் கடை மேல வக்கீல் நோட்டீஸ் அனுப்பரேன் பாத்துக்க. ப்ரஸ்ல போடரேன். அப்பா கால் ஹிண்டு ஃபர்ஸ்ட் திங்க் வென் வி கெட் ஹோம். விளையாடராங்களா இவனுங்க. கார் மட்டும் நாளைக்கு வரல் தெரியும் சேதி. வாப்பா போலாம்.

~~~~~~

அதான் போய்டான்ல, வுடுமா, போட்டு உருட்டிகினு

அதில்லங்ணா, இடியட் ஸ்டுப்பிட்ஸ்னு ஜாஸ்தியாவே பேசிட்டான். ப்ரஸ் கிஸ்ஸுங்கறானே, நெசமாவே போட்ருவானாங்ணா.

தோடா, கிழியறமாத்ரி பேசினானே கான்ஸல் பண்ணானா பார். கார் வேணும்மா இவனுக்கு. ப்ரஸ் என்ன ப்ரஸ் இவனெல்லாம் கிஸ்ஸுக்கு கூட போகமாட்டான்.

அப்படிபோடு. இருந்தாலும், நம்ம மேலயும் தப்புதானே. ஃபாலோ அப் பண்ணிருக்கலாம். ஏழுமல வரட்டும், மவனே…

தோஸ்து, என்ன ஃபீலிங்க்ஸ் காட்ரயா. நீ இதுக்கு புதுசு. ரிலாக்ஸ். இப்டி பாண்ட் போட்டு கழுத்துல நாக்கு தொங்கபோட்னுகறேன்னு பாக்காத. நாலாம் மெட்ராஸ்தான் நேட்டிவு. இந்த மாத்ரி எத்ன பார்த்துகுரோம். சொல்ரேன் கேட்டுக்க, இப்படியே பார்ட்டிக்கு பார்ட்டி ஷாக் ஆயி, தாங்கி துவண்டுகினுர்தேன்னு வைய் மெட்ராஸ் சிட்டில உன்னால வேகன் ஆர் இல்ல, வேர்கடல கூட விக்கமுடியாது.

இல்ல, டேமெஜஸ், ஈ. எம். ஐ. னுலாம் கேக்கறானே

குடு. ரெண்டு மாசத்துக்குதானே. உங்கப்பன் வீட்டு சொத்தா. கட தேங்கா தானே. யெடுத்து ஒட.

என்னப்பா, நாளைக்கு பாஸ் கோவிச்சா

நீ கார் விக்கலனாதான் தல டென்ஷனாயிடும். உன் வேல கூவி விக்கரது மட்டும்தான்.

அப்படீங்ர. ம். அதுவும் சரிதான். எல்லாம் நாப்பத்தியஞ்சு நாள்னு சொல்லி தொலச்சதனலா.

அய்ய, கொடவுன்ல கார் ஸ்டாக் வருது உன் கைலயா இருக்கு. இந்த மாத்ரி கஸ்டமர் காலெல்லாம் அடெண்ட் பண்ணாத மாமு. அதுபாட்டுக்கு ஒரு பத்து தபா அடிச்சிட்டு நின்னுடும். வுட்ரு.

அது சரி. இப்ப சொல்லமாட்டீங்ணா. நா மட்டும் நேந்துகிட்டனா, இவனுங்க ஃபோன எடுத்து ஏசு கேக்கரத்துகு. எதுக்கும் நாள பேப்பர் வாங்கி பார்த்துடுவோங்ணா.

இதப்பத்தியெல்லாம் கவல படாத. நாளைக்கி பார்த்துக்கலாம். பார்ட்டி வந்து ரொம்ப சிலுப்பினா இறக்கசொல்ல சாஸி அடிபட்டு நிறுத்தியிருக்கோம் பார், அத புக் பண்ணி ஆர்ஸி போட்ரு.

அதான. டாமேஜா க்ளைய்ம் பண்ணுவான். பார்ப்போம். ஓட்ட வண்டிய வச்சிகிட்டு சர்வீஸ் ஸ்டேஷனுக்கு அலயட்டும். இவன் வந்து கத்தினதுல்ல மறந்துட்டே பாரு. அதோ என் டேபிள்ல கண்ணாடிகாரன் ஒக்கார்ந்திருக்கானே, கார் எப்ப தருவேன்றான். கையோட பணத்தவெச்சிட்டு ஒரேடியா பம்மறான். என்ன சொல்லாங்ணா

நாலு நாள்ல தரோம்னு சொல்லு.

என்னது…ஸ்டாக் பாத்தேன், கோடவுன்ல இவன் கேக்கர மாடல் இல்ல. நாலு நாளுங்கற. இப்பதான் ஒருத்தன் பேப்பர்ல போடுவேன்னான். நாலு நாள்னு சொல்லி கார் கொடுக்கல இவன் பொலி போட்ருவான்.

அதான் ரெண்டு வாரம் லீவுல போரம்ல. பாத்துக்கலாம். போறதுக்கு முன்ன உன் மாசக்கணக்கு அஞ்சு கார் முடிஞ்சுடும். பார்ட்டிய வுட்ராத. உன் வேல விக்கரதுதான். கார் கொடுக்கரது கார் பண்றவன் வேலை. நீயா கார் பண்ற. புர்தா. இந்த மாசம் நீ அஞ்சு கார் விக்கலன்னா மொதல்ல உனக்கு லீவே கிடைக்காது. அக்ரீமெண்ட் போட்டு பணத்த வாங்கிடு. கம்பியூட்டர் இல்ல இன்னிக்கு. மேனுவல் தான். ரசீது புக் மாடீல மேனேஜர் ரூம்ல இருக்கு. எடுத்து வந்துக்கோ. வந்திருக்கர கஸ்டமர வுடாத. அமுக்கு. எலுதி வெச்சுரக்கமுல்ல அங்க.

கஸ்டமர் இஸ் காட்.

~~~~~~

பின்னாடி ஏஸி வருதாப்பா சரியா. போதுமா இன்க்ரீஸ் பண்ணட்டுமா.

வருது, போதுண்டா. ஏண்டா, கடைலயே கேட்க வேணாம்னு இருந்தேன். உனக்கு எதுக்குடா ரெண்டு கார். அதான் இத வெச்சுரிக்கல்ல. போதுமே. இப்ப பார். அல்லாடர.

ஏம்பா, நா ரெண்டு கார் வெச்சுக்க கூடாதா. அம் ஐ நாட் எலிஜிபிள் ஃபார் மை லக்ஸுரி.

அதுக்கில்லடா. அநாவசிய ப்ராப்ளம்ஸ் இருக்கே

அதவுடுங்கப்பா. இன்னொரு கார் இருந்தா ட்ரைவர் போட்டு நீங்க இப்ப திருப்பதி போவீங்களா இல்லயா.

போவேன்தான். அதுக்குனு ஏதோ ஈ.எம்.ஐ. போச்சு பணம் பிடிக்கரான்னுலாம் சொன்னியே. அதான் கேட்டேன். ரொம்ப நஷ்டமாயிடுமாடா

அட போப்பா விவரம் புரியாம இருக்கியே. கணக்குல காட்டுர பணத்துக்குதான் வட்டி கிட்டிலாம். இதுக்கு அதெல்லாம் கிடையாது. அவன்கிட்ட இதயெல்லாமா சொல்றது. என் வேலைல பணம் இப்படி வரும் அப்படி போகும். நடுவுல எங்கியாவது சட்டுனு முடக்கனும். இல்லன்னா போய்டும். அதான் ரெண்டாவது கார் சீமா பேர்ல எடுத்திருக்கேன். உனக்கு சொன்னா புரியாது. ஐ நீட் டு எக்ஸ்ப்லெய்ன் ஃபார் எ வைல். மேபி லேடர். ஈ.எம்.ஐ.னுலாம் சொன்னதெல்லாம் ஒரு இதுக்குதான். ஷாக் வேல்யு. கொடுத்தா கொடுக்கட்டுமே. கட தேங்காய ஒடைக்கிறதுல நமக்கு என்னப்பா நஷ்டம்.

அப்புறம் எதுக்குடா ப்ரஸ் கிஸ்னு அவன மிரட்டின. மெதுவாவே வரட்டுமே. நெஜமாவே மீனாட்சிசுந்தரத்த பார்த்து சொல்லப்போறியோன்னு நெனச்சேன்.

பின்ன என்னப்பா. பணம் என்னுது. நாதானே கார் வாங்கறேன். வாங்கறவனுக்கு ஒரு மரியாதை வேண்டாம். கிணத்துல கல்லு போட்டா மாதிரி பேசாம இருக்கானே. இவன் காரா என்ன. கேட்டா பொறுப்பில்லாம பதில் சொல்றான். இப்படி பச்சயா திட்டி, ஸென்சேஷனலைஸ் பண்ணாதான் தே வில் லிஸென். என்டிடீவி பாக்கரல்ல, புட்டு புட்டு வைக்கிறான் பார்.

அதில்லடா, இவ்ளோ சத்தம் போட்டுட்டியே, நாளைக்கு வாங்கின கார்க்கு ஒன்னுன்னா அவன் வந்து சரியா சர்வீஸ் கிர்வீஸ் பண்ணுவானா.

பண்ணாம போய்டுவானா. கன்ஸ்யூமர் கோர்ட்டுக்கு போவேன். ஏஸி ஷோரூம் வெச்சா போதுமா. கடைய மூட வெச்சுடுவேன். வாட் டு தே திங்க். இன் மெட்ராஸ் கஸ்டமர் இஸ் காட்.

~~~~~~

Print Friendly
Comments are closed.