இன்று காலை நான் தோட்டத்தில் பிடித்த படத்திலிருந்து கணக்கிட்டுக்கொள்ளுங்கள்

இன்னொரு விஷயம்.
சிலந்தி தன் வலையில் ஓவியர்கள் வரைவதுபோல் நடுசெண்டரில் இருக்குமா இல்லை… இல்லை, இருக்காதாம். வலையின் மையத்திலிருந்து சற்று மேல்புரம் தள்ளி தலைகீழாக பார்த்தவண்ணம் காத்திருக்கும். புவிஈர்ப்பு விசை சாதகமாக இயங்கும் மேலிருந்து-கீழ் திசையில் தாவி வலையில் கீழ்பகுதியில் மாட்டிய அதன் உணவை பிடிப்பது அதற்கு சுலபம். இதற்காக இதன் வலையும் கீழ்பகுதியில் விட்டதிசையில் வலை நெருக்கமாக தொடுக்கப்பட்டிருக்கும். பூச்சிகள் கீழ்பகுதியில் சுலபமாக மாட்டுவதற்கு ஏதுவாக. கீழேயுள்ள படத்தில் காட்டியுள்ளது போல்.

[படம் உபயம்: மார்க் டொமினஸ்]







