இரண்டு தினங்களாய் வாசகர்கள் பலருக்கு (குறிப்பாக, ஈமெயிலில் அல்லது தளப் பதிவோடையை நேரிடையாக சந்தா செய்தவர்கள்) தளத்தின் பழைய ஆக்கங்கள் கூட்டமாய்த் தோன்றி இப்பவே எங்களை டெலீட் செய் அல்லது செத்த மடி (fold) என்று பயமுறுத்தியிருக்கலாம். “உலகே சௌக்கியமா” கட்டாயப்பதிவு உபரி மிரட்டல்.
இரண்டு நாள் முன்னர்தான் கவனித்தேன். கடந்த நாள்களில் என்றோ தளத்தின் பதிவோடையில் ‘ஸ்பாம்’ ஊடுருவிவிட்டது.
அருணாசல் பிரதேசத்திலிருந்து அ(றி)வியல் ப்ளாக் வரை நாட்டில் நடந்தேறும் எவ்வகை ஊடுருவலுக்கும் அந்நிய சதியும் அவரவர் விதியுமே காரணம் என்பதை திட்டவட்டமாக மனது அறிந்தாலும் அறிவு உணர மறுப்பது தர்க்கக்குடியின் இயல்பே. வெப் 2.0 வில் இவ்வகை ‘கொந்தர்’ வன்புணர் அபத்திர நிலை நித்யம்.
வெளிவராத கதையும், வயாக்ரா புகுந்த சதையும் லேசில் அடங்காது. அதுபோலத்தான் சிலந்திவலை புகுந்த மனையும், ஸ்பாம் புகுந்த வலைமனையும். லேசில் புதுப்பிக்கமுடியாது.
இரண்டு தினங்களாய் தலையால் தண்ணிகுடித்து விட்டேன், ம்ஹு…ஹும். தளப் பதிவோடையை புதுப்பிக்க முடியவில்லை. கையெழுத்துப் பிரதியாய் வீட்டில் தயாரித்த பதிவோடை வேலைசெய்கிறது ஆனால் வேட்பிரஸ் தானியங்கி பதிவோடை புதுப்பிக்க மறுத்துவிட்டது. வற்புறுத்தினால், வெளிவருவதெல்லாம் கெட்ட கெட்ட வார்த்தைகள். ஒரு எரிச்சலான படைப்பூக்க தருணத்தில், இணைய சூழலுக்கேற்ப தளத்தின் தலைப்பை ‘வெசவு’ என்று மாற்றிவிடலாமா என்றுகூட யோசித்தேன்.
டேட்டாபேஸில் தொடங்கி தளத்தின் அனைத்து உதிரிபாகங்களையும் எரிதக்கலன் ஆகுதியில் இட்டு எரித்து, தளம் முழுவதையும் புனர்சென்மம் எடுக்கவைத்த பிறகே, தளத்தை பிடித்த ஸ்பாபம் ஒருவாறு விட்டது. ஆனாலும் இது இடைக்கால தீர்வு. பெருமளவு பத்திரமான, வெப் 1.0 தளமாக்க அவகாசமில்லை.
எனிவெ; தற்போதைக்கு சுருக்கிவரையப்பட்ட செய்தியோடையே வெளிவருமாறு செய்திருக்கிறேன்.
வாசகர் கவனத்திற்கு: ommachi.net தளத்தின் சரியான செய்தியோடை http://feeds.feedburner.com/ommachi. (http://www.ommachi.net/feed அல்ல!)
‘டுவிட்டரில்’ தொடர: http://twitter.com/ariviyalblog
மற்றவை பூட்டகேஸ். சரிபார்த்து, சந்தா செய்துகொள்ளுங்கள்.
(அடுத்து ஒரு சுவையான அறிவியல் கட்டுரையில் சந்திப்போம்.)
