ஆசிரியர் மேற்பார்வையில், மாணவர்கள் ஏற்று நடத்தும் ஆஆடி மெட்ராஸின் மியூசிக் கிளப்பிற்கு இந்த வருடம் 40 வயது. அதையொட்டி இன்றிலிருந்து தொடங்கப்படும் கிளாஸ்ஃபெஸ்ட் 2010 (Clasfest 2010) கர்நாடக இசை கச்சேரி நிகழ்ச்சி நிரல் பின்வறுமாறு.

- ஆகஸ்ட் 9: சஞ்சய் சுப்பிரமண்யன் – பாட்டு, எஸ், வரதராஜன் – வயலின், நெய்வேலி வெங்கடேஷ் – மிருதங்கம், திருச்சி முரளி – கஞ்சீரா
- ஆகஸ்ட் 10: ஈ.காயத்ரி – வீணை, ஷேர்த்தலை அனந்தகிருஷ்ணன் – மிருதங்கம், பி.எஸ்.புருஷோத்தமன் – கஞ்சீரா
- ஆகஸ்ட் 12: ரஞ்சனி காயத்ரி – பாட்டு, மைசூர் ஸ்ரீகாந்த் – வயலின், மனோஜ் சிவா – மிருதங்கம், என்.குருபிரசாத் – கடம்
- ஆகஸ்ட் 13: சங்கீத கலாநிதி டி.என்.சேஷகோபாலன் – பாட்டு, வி.வி.ரவி – வயலின், திருச்சூர் நரேந்திரன் – மிருதங்கம்
அனைத்து கச்சேரிகளும் 6:45 PM மணிக்கு தொடங்கும்.
இடம்: Central Lecture Theater (CLT), IIT Madras Campus, Adyar 600036
ரசிகர்கள் அனைவரும் வரலாம். டிக்கெட் உண்டு.
வருவதற்கு வழி: IIT Madras, ராஜ் பவன், அண்ணா பல்கலைகழகம், காந்தி சமாதி உள்ள சர்தார் பட்டேல் ரோட்டில், கான்சர் இன்ஸ்டிடியூட் அருகில் உள்ளது.
உள்ளே வருவதற்கு In Gate செக்கியூரிட்டி பூத்திற்கு அருகில் இருந்து இலவச பஸ் வசதி உள்ளது. 20 நிமிடங்களுக்கு ஒருமுறையாவது ஒரு பஸ் உள்நோக்கி கிளம்பும். இதில் ஏறி, கஜேந்திரா சர்கிள் என்ற இடத்தில் இறங்கிக்கொள்ளுங்கள். அதற்கு அருகில், ஹாஸ்டல் நோக்கி செல்லும் ரோட்டில் (பஸ் தொடர்ந்து செல்லும் Bonn Avenue வழி) ஒரு 100 அடி தொலைவில் கச்சேரி நடக்கும் CLT உள்ளது. கீழே இதற்கு மட்டும் மேப் கொடுத்துள்ளேன். இங்கும் மேப் உள்ளது.








