«

»

கொளை கதை – பின்னுரை

கொளை கதையை தொடர்ந்து படித்த அனைவருக்கும் நன்றி. நேரில் இதுவரை பார்க்காமலே, டுவிட்டரில் கதையை எழுதத்தூண்டிய @narain இணையத்தில் படித்து அவ்வப்போது உற்சாகம் கொடுத்த @orupakkam @scanman @isr_selva @icarusprakash மற்றும் பலருக்கு நன்றி.

சுயதம்பட்டம் என்று நினைக்காவிடில் ஒரு பின்னுரை. இது அப்ஸர்ட் ஜானரில் (absurd genre),  மல்டி லேயர், எனும் பல்படிமக் கதை. துப்பறியும் மனித கொலைகள், தமிழ் கொளைகல், எழுத்து க்ளீஷே-கொலைகள், (அறிவியல்) மொழியாக்க கொலகள், திரைப்பட கொலைகள், இப்படி பல படிமங்கள். கதையில் வரும் பாத்திரங்கள், சம்பவங்கள் யாவையும் எங்கோ, என்றோ, நடந்த உண்மையே. மேம்போக்காகத் தெரிவது எதுவும், சற்று யோசித்தால் அதுபோல் இருக்காது.

உதாரணத்திற்கு, லொடபடவா என்ற பெயர் திவான் லொடபடசிங் பகதூர் என்பதில் இருந்து சுட்டது. இந்த பெயர் கொண்ட கதை வடுவூர் துரைசாமி ஐயங்கார் எழுதி தமிழில் 1900 வாக்கில் வெளிவந்த முக்கியமான வெகுஜன புதினங்களில் ஒன்று. அதன் தொடக்கமும் – ஒரு வகை தமிழ் எழுத்து கிளீஷேயாய் – இங்கு உபயோகித்துள்ளேன். இப்படி புதுமைபித்தனின் கடவுளும் கந்தசாமி பிள்ளையும், சுந்தர ராமசாமி, தி.ஜா., சுஜாதா, ஜெயமோகன் என்று பலரது செரிவான தமிழ் எழுத்தும், கருத்தும், பெயர்கூறத்தேவையில்லாத பலரது க்ளீஷேயும், காம்ப்ளான் விளம்பரமும் வந்துபோகும்.

இப்படியே மொத்தமாக விளக்கவுரை எழுதி ஜோக்கை விளக்கி சிரிக்கச்சொல்லும் அளவுக்கு உங்கள் புத்திசாலித்தனத்தில் எனக்கு நிச்சயம் சந்தேகம் இல்லை. விளக்கவுரை தேவையெனில், தனியாக பிறகு கொடுக்கலாம் – அதுவும் தமிழில் எழுத்தாளர்கள் செய்யும் ஒருவகை க்ளீஷேதானே.

மற்றொருமுறை படித்துப்பார்க்கையில் வேறு சில பகடிகளும், படிமங்களும், கருத்துக்களும், உங்களுக்கு தட்டுப்படுமாயின், உங்களுக்கு அப்போது ஏற்படும் மகிழ்ச்சியில் நான் ஒரு குட்டி சாபல்யமடைவேன்.

Print Friendly

இவைகளையும் படிக்கலாமே:

  • சார்ந்த பதிவுகள் வேறெதுவுமில்லை

Permanent link to this article: http://www.ommachi.net/archives/1773