பூனை குறுக்கே நடந்தால், மேக்னெட்டோரிஸப்ஷன்

[சொல்வனம் இணையைதழில் வெளிவந்துள்ள என் கட்டுரையின் பிரதி] பூனை குறுக்கே நடந்தால் அபசகுனம். வடக்கே தலை வைத்து படுத்தால் உடல் நலத்திற்கு கேடு. இவ்விரண்டு சமூக நம்பிக்கைகளை நாம் எதிர்கொண்டிருக்கிறோம். எனக்களிக்கப்பட்ட இவற்றின் அன்றாட ‘விளக்கங்களும்’, சார்ந்த என் அறிவியல் தேடல்களையும், புரிதல்களையும் அனுபவக்கல்வி தடவி இக்கட்டுரையில் விவரிப்போம். முக்கியமாக மிருகங்களின், மனிதனின் மேக்னெட்டோரிஸப்ஷன், காந்தவிசையேற்புத்திறன் பற்றி அறிமுகம் செய்துகொள்வோம். கடைசிபக்கத்தை முதலில் வாசித்தபின்னரே மர்மக்கதை மிச்சத்தை வாசிப்பவர்களுக்கு: மேலிரண்டு நம்பிக்கைகளை மேக்னெட்டோரிஸப்ஷன் கொண்டு நிரூபிக்கமுடியவில்லை என்பதே …

Continue reading »

Permanent link to this article: http://www.ommachi.net/archives/3497

ஹப்பர்ட் சிகர உச்சியிலிருந்து…

அன்னை பூமியின் எண்ணை வளம் தீரப்போகிறது. இதை பீக்-ஆயில் க்ரைசிஸ், “எண்ணை உச்சவரம்பின் ஆபத்து” என்கிறார்கள். தொழிற்புரட்சியின் தாலாட்டில் மயங்கி அரைஞாணை அகற்றி டிஜிட்டல் வாட்ச் கட்டிக்கொண்ட மனித சமுதாயம் உபயோகிக்கும் அநேக பொருட்களும் அடிபடப்போகிறது. பெட்ரோல், டீசல், இவற்றை எரிபொருளாய் உபயோகிக்கும் கார், பஸ், விமானம், கப்பல் போன்ற வாகனங்களிலிருந்து, அங்காடித்தெருவில் மின்வெட்டிலும் கடைகள் ஒளிர வெளியே, சூழலில் கரும்புகை கக்கும் டீசல் ஜென்-ஸெட், எண்ணை மற்றும் இயற்கை வாயுவை எரிபொருளாக்கி மின்சாரம் உற்பத்தி செய்யும் …

Continue reading »

Permanent link to this article: http://www.ommachi.net/archives/3484

சிறுகதை: எட்டணாவிற்கு உலக ஞானம்

அன்றொருநாள் கோலி சோடா குடித்தபடி ஞானத்தேடலில் மூழ்கியிருந்தேன். ராஜகோபுரத்தை பார்த்து சிரிக்கும் உலோக காந்தியின் பின்புறம், செல்வா கடை திருப்பத்தில் பஸ்கள் வரிசைக்கிரமாய் ஆக்கிரமிக்கும். அதுதான் எங்களூர் பஸ் ஸ்டாண்ட். கடை வாசலில் காரை பெயர்ந்து முனையில் செங்கல் தெரியும் சிமெண்ட் திட்டின் மீது ஜீன்ஸ் பாண்டில் குதிரைவாகன போஸில் வீற்றிருந்தேன். ஒரு கையில் கோதண்டம் என கோலி சோடா. தொடையில் மடக்கி ஊன்றியிருந்த மறு கையில் இறுமாப்பு. கடையில் வெற்றிலை போடுபவர்களின் நடுவிரல் வெண்சுண்ணம் தீற்றியிருந்த …

Continue reading »

Permanent link to this article: http://www.ommachi.net/archives/3480

விஷ்ணுபுரம் அறிமுகம்

இவ்வாறாக சுஜாதா எனும் புணைவன், வணிகசபையை வணங்கி, விஷ்ணுபுரத்தின் அறிமுகத்தை தொன்னூறுகளின் இறுதியில் கூறிமுடித்ததும், சபையோர் பலர் காசைத் திருப்பிக்கேட்டார்கள். ஆதியில் ஒரு சொல் இருந்தது. அதற்கு விஷ்ணுபுரம் என்று பெயர். இப்டி உம்பர்ட்டோ ஈக்கோ கூட ஒரு புத்தகத்த என்பதுகளில் தொடங்கியுள்ளார் மகளே. தி நேம் ஆஃப் தி ரோஸ். ஒரிஜினல் இத்தாலி மொழில. நான் படிச்சது ஆங்கில வெர்ஷன்தான். உலக இலக்கியம்னாலே அப்டிதான். எந்த மொழில வேணா எழுதலாம். ஆனா இங்கிலிஷ்லதான் படிக்கமுடியும். “இன் …

Continue reading »

Permanent link to this article: http://www.ommachi.net/archives/3473

டௌகன் பறவைகளுக்கு ஏன் அலகு பெரிதாக உள்ளது?

மூக்கை வைத்து ஒருவர் என்ன செய்யலாம்? வாழ்கையில் சுவாசிக்கலாம். மெகாசீரியல் மாந்தராக இருந்தால், ஆண் பெண் வித்தியாசமின்றி, அழுது சிந்தலாம். எகிப்தின் கிளியோபாட்ராவாக இருந்தால், ரோமை ஆளலாம். அதே எகிப்தின் ஸ்பிங்ஸ்சாக இருந்தால், மூக்குடைந்த தன் சிங்க உடல் மனித முக உருவத்தை உலகின் அதிசயங்களில் ஒன்றாக தேர்வு செய்து உவகிக்கலாம். புலௌ புலௌ பொம்பா தீவில் வசிக்கும் பிரோபோசிஸ் குரங்காக இருந்தால், தன் மூக்கின் வடிவம் டின்டின் (tintin) காமிக்ஸ் வில்லன் ராஸ்டபாப்புலசுடன் ஒப்பிடப்படும் அவலத்தை அடைய …

Continue reading »

Permanent link to this article: http://www.ommachi.net/archives/3467

அம்ருதா, அறிவுக்கண்

அம்ருதா (நவீன கலை இலக்கிய சமூக) மாதாந்திர இதழில் 2012 ஜனவரி முதல் எழுதத்துவங்கியுள்ளேன். ஜனவரி 2012 கட்டுரையின் மீள்பிரசுர சுட்டி – தொட்டால் தொடுதிரை பூ மலரும் பிப்ரவரி 2012 கட்டுரையின் மீள்பிரசுர சுட்டி – டௌகன் பறவைகளுக்கு ஏன் அலகு பெரிதாக உள்ளது? தொடர்ந்து கட்டுரைகள் பிரசுரமானதும் மீள்பதிவுகளாய் இங்கு அவைகளின் முழுநீள முன்வடிவங்களை வெளியிடுகிறேன். இதேபோல் Federation of Science Clubs of TamilNadu என்பதின் லாபநோக்கற்ற பிரசுரமாய், பள்ளி கல்லூரிகளை சென்றடையும் அறிவுக்கண் என்கிற ஏட்டிதழ் வெளியாகிறது. …

Continue reading »

Permanent link to this article: http://www.ommachi.net/archives/3468

கர்நாடக சங்கீத வருங்கால நட்சத்திர நம்பி(க்கை)கள்

“இஃப் மை மியூஸிக் இஸ் லௌட், யூ ஆர் ஓல்ட்” என்று மார்பிலுறையும் வாசகங்களுடன், கையில் மான்முத்திரை அபிநயித்தபடி, விளையாட்டுகளில் கழியவேண்டிய அன்றைய களிவெறியை “ப்ரோ-ஷோ” கோஷ்டிகாண பேரிரைச்சலில் கரைத்து, ஒரே இரவில் இன்றைய இளைஞர்கள் பலர் தன்னிறைவடைகின்றனர். கொலவெறி எனும் சொல்லாடலை ஆறுமாதத்திற்கு தமிழ்நாட்டில் எவரும் உபயோகிக்கக்கூடாது என்று பப்ளிக் இண்ட்ரஸ்ட் லிட்டிகேஷன் போடுமளவிற்கு திரையிசையில் தங்கள் இயலாமையை வெளிப்படுத்தியே இளைஞர்கள் ஒரே மெட்டில் பிரபலமாகிவிடுகின்றனர். இக்கட்டுரை, இவர்களில் அநேகரால் தீண்டப்படாமல், இன்று பொருளீட்டவல்ல தொழிற்கல்வி …

Continue reading »

Permanent link to this article: http://www.ommachi.net/archives/3454

இன்றைய மௌனம்

சென்ற வாரம் பெங்களூரில் ஒரு விருந்தினர் மாளிகையில் காலைக்குளிரில் தும்மல்களுடன் துயிலெழுந்து எரியும் கண்களுடன் பூர்வா சந்தியா ப்ரவர்ததே என்று மடினியை உயிர்ப்பித்து…  கடலூர் சீனு அவருள்ளிருந்து வார்த்தைகளாக்கியுள்ள என் சக மானிடன் செயலாக்கிய அவலத்தை, அடிமை மானுடத்தை (http://www.jeyamohan.in/?p=23200 — மென்மனதுடையோருக்கு எச்சரிக்கை) மனத்தளவில் அனுபவித்தேன். ஒருமுறை ஆஸ்பத்ரியில் ரத்தவாடை கலந்த பெண்டத்தால் வாசனையில் தலைசுற்றியதை தவிர்த்து, அதிர்ச்சியில் சட்டென மயக்கிவிழும் தருணத்தை திரையில் ப்ராணநாதா என்றிருப்போரிடமே அநேகமாக கண்டிருந்தேன். விழுப்புரம், கடலூர் என்று நான் …

Continue reading »

Permanent link to this article: http://www.ommachi.net/archives/3452

2012 புத்தகக் காட்சியில் வாங்கிய புத்தகங்கள்

வலைப்பூ, வலைமொட்டு, வலைபிட்டு என தமிழ்-இணையத்தில் வருடாந்திரமாக எழுதப்படும் டாப் டென் சம்பிரதாய குறுங்கட்டுரைகளில் நிச்சயம் இருப்பது “புதுவருடத்தில் என்னவெல்லாம் சாதிப்பது” (வருட முடிவில் என்னவெல்லாம் கோட்டைவிட்டேன் என்று பட்டியலிடுவது இதன் மாறுவேடமே). அடுத்து, அவ்வருட புத்தகக் காட்சி சென்றுவந்ததின் அனுபவப்பகிர்வு. 2012 பு.காட்சியகத்திற்கு சென்றேன், சுழன்றேன், தலைவலியுடன் திரும்பினேன். உத்திரவாதமாக நொடிக்கொருதரம் காற்றை மூக்கிலிருந்து கார்பண்டைஆக்ஸைடாய் வெளியேற்றும் சகஜனசாகரத்தினூடே, வெள்ளைவேட்டிசூழ் வெள்ளாவியாம் பெரிய சைஸ் அஞ்சனப்பெட்டியில் பனுவலைப்போற்றும் சிற்றெறும்பென நான்கைந்து மணிநேரம் உலாவியதில், தலைவலி. கட்டுரையின் …

Continue reading »

Permanent link to this article: http://www.ommachi.net/archives/3446

2011-12 சென்னை மார்கழி இசைவிழா பல்லவிகள்

ராகம் தானம் பல்லவி என்றொரு கட்டுரைத்தொடரை கடந்த இரு வருடங்களில் அவகாசமிருக்கையில் சொல்வனத்தில் எழுதிவந்தேன். அதை முடித்துவிடவேண்டாம் என்ற பணிவான மிரட்டலுக்கிணங்க “தொடரலாம்” அடிக்குறிப்பிட்டு பூடகமாய் கிடப்பிலிட்டிருந்தேன். தொடருவதற்கு 2011-12 சங்கீதகாலம் “இதி சமயமுரா…” இணைய குல பாலகா என்றழைக்கிறது. இணையத்தின் “சுட்டி” வசதியில் முன்கதைச்சுருக்கமென மெகாசீரியல் ஓட்டுவது எடுபடாதெனினும் வாசகர் சிலர் பிரிண்ட்டிட்டு படிப்பதால் இக்கட்டுரையின் உள்ளடக்கம் கருதி, ஒரு ரா.தா.ப. முன்னிசைச் சுருக்கம்.

Permanent link to this article: http://www.ommachi.net/archives/3438

சிறுகதை – கதவை திறந்து பார்த்தால்

எப்படியும் இன்று பெட்டியைத் திறந்து பார்த்துவிடவேண்டும். என்னத்தான் இருக்கும் உள்ளே? எப்படித்தான் இருக்கும் அவ்வுலகம்? இருட்டாய் இருக்கும், கண் சரியாய் தெரியாது, துழாவ வேண்டும். இருப்பது ஆபத்து என்று உணர்ந்தால் பெட்டியை விட்டு விலகி ஓடிவிடு. எத்திசை என்பது முக்கியமில்லை. நெடிய கால்கள் கொடுக்கும் வேகத்தில் ஓடிவிடு. பெரிய மீசை பத்திரம். பாட்டன் முப்பாட்டன் காலத்திலிருந்தே என் குலத்தாருக்கே பெரிய மீசை. அமேரிக்கா, ஆப்பிரிக்கா என கண்டமெட்டிலும் வேரின்றி காலூன்றினாலும் மீசையைக் களையோம். ஸ்டார்பக்ஸில் டாலர் காபியை …

Continue reading »

Permanent link to this article: http://www.ommachi.net/archives/3437

இயல் இசை ஆடை

தோடியில் ஒலிக்கும் தொண்டை செருமல்களுடன் வணக்கம் கூறி விடைபெற்றுக்கொண்டிருக்கும் 2011 சென்னை இசைவிழாவிலும், அடுத்து எழுத்தாளர்களுக்கு வருடத்திற்கு ஒருமுறை மட்டும் மெகா சைஸ் கட்டவுட்டுகள் வைத்து தடுத்தாட்கொள்ளும் 2012 சென்னை புத்தகக் காட்சிவிழாவிலும் என்னைக் கவர்ந்தது, கர்நாடக இசை, தமிழ் சார்ந்த வாசகங்களுடன் வெளிவந்துள்ள டி-ஷர்ட்கள். புத்தகக் காட்சியில் அரங்கின் நுழைவாயிலிற்கு எதிர் கோடியில் தமிழ் வாசக டி-ஷர்ட்டுகள் நல்ல விற்பனை. பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும், ஆதலினால் காதல் செய்வீர், நாம் யார்க்கும் குடிமை அல்லோம், நமனை …

Continue reading »

Permanent link to this article: http://www.ommachi.net/archives/3434

வண்ணத்துபூச்சியின் நிறமற்ற வானவில்

உத்திரத்தில் ஆடும் ஹரிக்கேன் விளக்கு வெளிச்சத்திலும் பாட்டியின் அந்தக்கால நவரத்தின பெண்டண்ட்டில் மற்ற கற்களைக்காட்டிலும் வைடூர்யம் மட்டும் டாலடித்து ஜுவலிக்கிறதேன்? தோகை இளமயில் ஆடி வருகையில் வானில் மழைவராவிட்டாலும், தோகை நிறங்கள் அசாதாரணமாய் ஒளிருவதேன்? சாலையிலுள்ள மழைநீர்தேங்கிய குட்டைகளில் பெட்ரோல் டீஸல் ஒழுகிப் படர்ந்து, தாண்டிச்செல்கையில் நாம் பார்க்கும் கோணத்திற்கேற்ப பல நிறங்களில் தெரிவதேன்? கணினி மென்தகட்டை வெளிச்சத்தில் அப்டி இப்டி திருப்பினால் பல நிறங்களாய் தெரிவதேன்? அநேக வண்ணத்துபூச்சியின் இறகுகள் பளபளப்பதேன்? பதில், இரிடெஸன்ஸ். அப்படியெனில் …

Continue reading »

Permanent link to this article: http://www.ommachi.net/archives/3432

ஹிண்டுவில் சங்கீதம் சார்ந்த கட்டுரை

சென்னை மார்கழி இசை விழாவை ஒட்டி, ஊடகங்களில் விமர்சன கச்சேரிகள் நடந்தேறியபடி. மாற்றாக ஆங்கில நாளிதழ் தி ஹிண்டு வின் வாசகர்களின் மென்புலன்கள் நோவா வண்ணம் அடியேனுடைய விமர்சனம் தவிர்த்த கட்டுரை இன்று வெளியாகியுள்ளது. கட்டுரைக்கு திரு.கேஷவ் வழக்கமான அவரது பாணி கோட்டு சித்திரம் தந்துதவியுள்ளது, என் பாக்கியம். ஒரே நேர்/இணைய சந்திப்பில் என் சங்கீத விமர்சனம் மற்றும் மென்நகைச்சுவை எழுத்து பிடித்துபோய், அவ்விரண்டில் முடிந்ததை இவ்வூடகத்தில் அரங்கேற்றிய இரு நண்பர்களுக்கும் நன்றி. இசை விழா விமர்சன …

Continue reading »

Permanent link to this article: http://www.ommachi.net/archives/3429

2011 சென்னை மார்கழி இசைவிழா

வந்துவிட்டது மற்றொரு மெட்ராஸ் மார்கழி சங்கீத சீஸன். வந்துவிட்டது மற்றொரு விமர்சன கட்டுரை. படித்துவிட்டு பாடகர்கள் மெர்ஸலாகி தங்களை உடனே உடைத்து வார்த்துக்கொள்ளமாட்டார்கள்; அவர்கள் “பாட்டுக்கே” இனியும் பாடுவர். படித்துவிட்டு ரசிகர்களும் பெரும்பாலும் தங்கள் அபிமானங்களை மாற்றிக்கொள்ள மாட்டார்கள். “கேட்பர்களையே” கேட்பார்கள். இலக்கியவிமர்சனங்களைப் போன்ற பயன்களுடையவையே மரபிசை சங்கீத விமர்சனங்களும். டிசெம்பர் இருபதன்று (2011) நடுப்பகலில் அகதெமியில் “பாட்ரன்” வாயில் வழியே இருட்டோரமாய் நுழைந்து இருக்கையிலமிழ்கையில், அமர்களமான மேடையில் திருச்சூர் பிரதர்ஸ் (கிருஷ்ன மோஹன், ராம்குமார் மோஹன்) …

Continue reading »

Permanent link to this article: http://www.ommachi.net/archives/3426

ஏன் பல்லி கொன்றீரய்யா

மெத்தைமடி அத்தையடி என அதன்மீது காலின் மேல் காலை மடக்கிப்போட்டு மல்லாக்க விஸ்ராந்தி தீவிரமான “வீக்கெண்டில் ஒரு உலக இலக்கியம் சமைப்போமா” யோஜனையிலிருக்கையில், விட்டத்தில் செல்லும் பல்லியை கவனித்திருக்கிறீர்களா? அதுவும் நம்மை கவனித்தபடியே “ம்க்கும், இவனாவது இலக்கியமாவது” என்றபடி தலைகீழாய் விட்டத்தில் நகரும். நாம் கவனிப்பதை அறிந்து, உற்றுப்பார்த்து ஊர்ஜிதம் செய்து, சட்டென்று டியூப்லைட் சட்டம், மின்சார ஒயரிங் குழாய் என மறைவிடத்திற்கு பின் பதுங்கும். வேறெங்காவது பார்த்துவிட்டு மீண்டும் கடைக்கண்ணால் கவனித்தால், உண்டிவில்லிருந்து தயிர்பானைக்கு புறப்பட்ட …

Continue reading »

Permanent link to this article: http://www.ommachi.net/archives/3422

தொட்டால் தொடுதிரை பூ மலரும்

17948-69bcf970-200

முன்னொரு காலத்தில் டயனோரா என்றொரு டிவி பிராண்ட் இருந்தது. விற்பதற்கு அங்கம் அவிழ ஆடையணிந்த அணங்கைகள் அக்கம்பக்கம் அதிர ”கீ……….ப் இன்ன்ன்ன்ன் டச்” என்று ஸ்டிரியோவில் விளம்பர ஸ்லோகம் விண்ணப்பிப்பார்கள். என்னுடன் தொடர்புகொண்டிரு என்று டிவி அன்று அரைகூவியது, மின்தொடர்புசாதனங்களின் செயல்பாட்டிற்கே இன்று இன்றியமையாத ஸ்லோகமாகிவிட்டது. கணினி சி.ஆர்.டி. திரையில் தொடங்கி, கியோஸ்க்களின் பில் போடும் மெஷின், சூதாட்ட ஸ்லாட் மெஷின்கள், வங்கி ஏ.டி.எம்.கள், பாம் பைலட், ஸ்மார்ட் ஃபோன் என அநேகமாக அனைத்து மின்திரைகளுமே இன்று …

Continue reading »

Permanent link to this article: http://www.ommachi.net/archives/3407

தாமரை இலையும் மகா நீரொட்டா பரப்புகளும்

lotus-effect-01

பணியில் பாஸ் கூறும் ஐடியாக்களை பரிசீலிக்கையில், மனையில் மனைவி செய்த புதிய பதார்த்தத்தை உண்டு உவேவக்கையில், பஸ்ஸில் வெகுஜன வாராந்திரிகளில் பளீரிடும் காரிகைகளை புரட்டுகையில், சட்டென கிரகிக்கக்கூடிய செய்திக்கோர்வையான சிறுகட்டுரையாக இன்றி, ஏன், எதற்கு, எப்படி, என்று ஒரே விஷ(ய)த்தை நீட்டிமுழக்கி முதுகுவலிக்கவைக்கும் தீவிர கட்டுரைகளை இணையத்தில் மேய்ந்து புக்மார்க்கையில், இப்படி நம் பல மேலோட்ட செயல்பாடுகளை-விளைவுகளை மேற்கோளிட, ”தாமரை இலைத் தண்ணீர் போல” என்பது நாமறிந்த வழக்கு. காவிரி நாடன் திகிரிபோன்ற ஞாயிறின் ஒளிமழையில், பாண்டிய …

Continue reading »

Permanent link to this article: http://www.ommachi.net/archives/3378

இயற்கையின் நேனொடெக்னாலஜி

வைரஸ் நுண்ணுயிர்களின் எளிய செயல்பாடுகளையே கணிணிவகை பைனரி செய்திகளாய் பாவிக்கும் நேனோபாட் எனும் நுண்ணுடுருவிகளிலிருந்து, ஆட்டோவைவிட சற்றே பெரிதான ஊர்த்தியை நேனோ என்று பெயரிடும் அளவிற்கு நேனோ என்றதும் அறிவியலாளர்களுடன் நேனு நேனு என்று வர்த்தகவித்தகர்களும் கைகோர்க்கும் நேனோ டெக்னாலஜி என்கிற அறிவியல் துறை இன்று பிரபலம். இயற்கையை அறிதலுக்கு அறிவியல்சிந்தை ஒரு உகந்தவழி என்றால், அவ்வறிதலின் வெளிப்பாடான தொழில்நுட்பங்களுக்கும் இயற்கையே முன்னோடி. நேனோ டெக்னாலஜி விஷயத்திலும் இது உண்மையே. பல நேனோ பொருட்கள், டெக்னாலஜிகள், இயற்கையில் …

Continue reading »

Permanent link to this article: http://www.ommachi.net/archives/3375

வாட்டர் பாட்டில் சூரிய விளக்குகள்

அன்றே சாலமன் சொன்னார், எண்ணையில்லாமல் திரியில்லாமல் விளக்குகள் தலைகீழாக தொங்குமென்று. இது சுமார் முப்பது வருடம் முன்னர் பட்டினத்தில் பூதம் திரைப்படத்தில், விட்டத்தில் தொங்கும் மின்சார சாண்டிலியர் விளக்குகளை வியந்து பூதமாய் அசோகன் வசனித்தது. எண்ணையின்றி, மின்சாரமின்றி வீட்டு விளக்குகள் எரியுமா? எளிய தொழில்நுட்பத்தில் தண்ணீர் பாட்டில் சூரிய விளக்குகள் செய்திருக்கிறார்கள். சில வருடங்கள் முன், நல்ல வெய்யில், ஒரு மின்வெட்டு நாளில் பிரேஸில் பொறியியலாளருக்கு, எதேர்சையான வியர்வையில் தோன்றிய கண்டுபிடிப்பு. அருகில் படம். சகாய விலையில், …

Continue reading »

Permanent link to this article: http://www.ommachi.net/archives/3372

Page 1 of 912345...Last »